படுத்தவுடன் தூங்க சில வழிகள் !

நோயில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால், போதுமான உறக்கம் கண்டிப்பாக வேண்டும்.

படுத்தவுடன் தூங்க சில வழிகள் !

உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க நல்ல உறக்கம் இன்றியமையாதது. நல்ல உறக்கம் என்பது இரவில் 7 முதல் 9 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்குவது தான். இதற்கு உதவும் 9 சிறந்த உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

பாதாம்: 

ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் மற்றும் மெக்னீசியம் பாதாமில் இருப்பதால், தூங்கும் முன் சாப்பிட இது சிறந்தது

 

வான்கோழி:

புரதம் மற்றும் டிரிப்டோபான் அதிகம் இருப்பதால் வான்கோழி உடலுக்கு சோர்வைத் ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.

 

சாமந்தி டீ:

சாமந்தி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

 

கிவி:

கிவியில் செரோடோனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இதுவும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

 

செர்ரி:

மெலடோனின் என்ற ஹார்மோன் செர்ரி சாறில் இருப்பதால், நல்ல இரவு தூக்கத்தை  தூண்ட இது உதவும்.

 

மீன்:

வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 மீன்களில் இருப்பதால், இதை தூங்கும் முன் சாப்பிட்டால், தூக்கத்தின் தரம் மேம்படும்.

 

வால்நட்:

மெலடோனின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், வால்நட் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும்.

 

பேஷன்ஃப்ளவர்(கிருஷ்ண கமலம் பூ):

அபிஜெனின் என்ற ஹார்மோன், இந்த பேஷன்ஃப்ளவரில் இருப்பதால் சிறந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.

சாதம்:

சாதத்தில் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால் படுக்கைக்கு முன் சாப்பிடுவது நல்ல தூக்கத்துக்கு நல்லது.

மேலே கூறப்பட்ட இந்த உணவு வகைகளை, படுக்கைக்கு 2-3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டால் தான் சிறந்தது. இல்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.