டயட்டிற்கு நடுவில் இடைவெளி - இது புதிய வகை டயட்

எடை குறைப்பிற்கு பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. எளிய முறையில் எடையை குறைப்பதற்கான வழி, டையட்டுக்கு நடுவில் ஒரு சிறு இடைவெளி எடுத்து கொள்வது .இதனை நடைமுறை படுத்தும்போது , காலப்போக்கில் நாம் நினைத்தை விட அதிக எடை குறையலாம்.

டயட்டிற்கு நடுவில் இடைவெளி - இது புதிய வகை டயட்

வாரத்தின் இறுதி நாட்களில் , டையட்டிற்கு ஓய்வு கொடுத்து ஒரு சிறிய  இடைவெளியை கொடுக்கும்போது, மற்ற நாட்களில் கடுமையாக  டயட் பின்பற்றுவதற்கு மனதளவில் ஒரு உந்து சக்தி கிடைக்கிறது  
தொடர்ந்து டயட் பின்பற்றி உடல் எடை அதிகமாக குறைவதை கட்டுப்படுத்த ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. இந்த இடைவெளி, உடலின் வெப்ப உருவாக்கத்தை எதிர்த்து போராடி, குறைந்த பட்ச உடலிடையை அதிகரிக்கிறது. பசியோடு இருக்கும்போது , உடல் ஆற்றலை இழக்கிறது. இதற்கு காரணம் லிப்டின் என்ற ஹார்மோன் குறைவது தான். டயட்டின் போது இடைவெளி எடுத்துக் கொள்வதன் மூலம், இந்த ஹார்மோன் சீராக இயங்க தொடங்குகிறது.

தொடர்ந்து டயட் இருக்கும்போது, உடலில் பசிக்கான தேடல் இருந்து கொன்டே இருக்கும். அதனால் இந்த ஹார்மோன் குறைந்த அளவில் சுரக்கும். இதனால் வளர்சிதை மாற்றமும் தாமதப்படும். 
டயட்டில் இருப்பவர்கள்  அவர்களின் கலோரி தேவைகளை சமன்  செய்ய வேண்டும் , உடல் எடையை குறைப்பதற்காக ஒல்லியாகும்போது, உடலில் வெப்ப உருவாக்கம் ஏற்படுகிறது. அது வேறு சில உடல் தீங்குகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வார இறுதியும் இடைவெளிக்கான நேரம் என்று ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு மற்ற நாட்களில் கடுமையான டயட் இருக்கலாம். இது உடல் சத்தை சமன் செய்யும். கலோரிகள் எண்ணிக்கையும் சீராக கிடைக்கும். வளர்சிதை மாற்றத்திலும் தாமதம் ஏற்படாது . உடலும் ஆரோக்கியமான முறையில் எடை குறையும்.

உடல் பருமன்  கொண்ட ஆண்கள் 51 பேரை  இரண்டு குழுக்களாக பிரித்தனர். ஒரு குழுவினர் தொடர்ச்சியாக டயட்டை பின்பற்றினர். மற்றொரு குழு இடைவெளி  விட்டு டயட்டை பின்பற்றினர். இரண்டு குழுவிற்கும்,, அவர்கள் எடையை நிர்வகிக்க,  மூன்றில் இரண்டு பங்கு கலோரிகள் தினமும் வழங்கப்பட்டன. 

முதல் குழு தொடர்ந்து 16 வாரங்கள் இந்த டயட்டை பின்பற்றினார்கள் . இரண்டாவது குழு, இடையில் 2 வாரங்கள் ஒரு இடைவெளியை எடுத்துக் கொண்டு இதே டயட்டை பின்பற்றினர் . இருவரும் 16 வாரங்கள் இந்த டயட்டை பின்பற்றினர். இரண்டாவது குழுவில் இருந்தவர்கள், இடைவெளியின் போது அதிக கலோரிகளை எடுத்து கொண்டனர் .

முடிவில், இடைவெளி விட்டு டயட் பின்பற்றியவர்கள் அதிக எடையையும் அதிக கொழுப்பையும் இழந்திருந்தனர் . சராசரியாக  9 கிலோ எடை குறைந்திருந்தது. அவர்களின் எடை குறைப்பு  நீடித்திருந்தது  6 மாதங்களுக்கு பிறகு தொடர்ச்சியான டயட் பின்பற்றியவர்களை விட அதிக எடை குறைந்தது.

டயட்டுக்கு இடையில் ஒரு இடைவெளி விடுவது நல்லதொரு மாற்றத்தை தருகிறது. தொடர்ச்சியான டயட் பின்பற்றுவதற்கு மாற்றாக இந்த இடைவெளியிட்ட டயட்டை பின்பற்றலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.