ஃப்ளு காய்ச்சலுக்கான மருந்து

மருத்துவ கண்டுபிடிப்புகளின் மூலம் சில நோய்களுக்கான நிரந்தர தீர்வுகள்  கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டது மனித சமுதாயத்திற்கு நல்ல செய்தி தான்.   

ஃப்ளு காய்ச்சலுக்கான மருந்து

மருத்துவமும், அறிவியலும் முன்னேறி கொன்டே இருக்கும் வேளையிலும், தினம் ஒரு புது நோய் தோன்றி கொண்டு தான் இருக்கின்றன. அவற்றிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான மருந்துகளை கண்டுபிடித்து மக்களுக்கு கொடுப்பதற்குள் மறுபடியும் ஒரு புது நோய். இந்த சுழற்சி இருந்து கொன்டே தான் இருக்கும்.  

நீண்ட நாட்களாக மக்களை அச்சுறுத்திவரும் ஒரு நோய் ஃப்ளு காய்ச்சல். இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், நிறைய மக்கள் இந்த ஃப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஃப்ளு வைரஸ் தாக்குதல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. ஆகவே அதனை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றது.
 
ஃப்ளு காய்ச்சலின் அறிகுறிகள்:
 . காய்ச்சல் 
 . இருமல்
 . மூக்கடைப்பு 
 . தலைவலி 
 . தசை மற்றும் உடல் வலி 
 . சோர்வு 
 . குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு 
 
மருந்து:
அமெரிக்காவில் இருக்கும் யூனிவர்சிட்டி ஆப் மேரிலாண்ட்  என்ற பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் , ரெட்ரோசைக்ளின் - 101 (RC -101) என்ற ஒரு புரதம், ஃப்ளு காய்ச்சலுக்கான அறிகுறிகள் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதாக கூறப்படுகிறது. தொற்று பாதிப்பால் ஏற்படும் மற்ற நோய்களும் குறைவதாக கூறப்படுகிறது. இந்த புரதம், ஃப்ளு வைரஸை மட்டும் குறிப்பாக தாக்காமல், அழற்சி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணும் மற்ற வைரஸ்களையும் தாக்குகிறது. இந்த புரதத்தை முன்னோடியாக வைத்து மருந்துகள் கண்டுபிடிப்பதால் , ஃப்ளு வைரஸ் மற்றும் அழற்சியை ஏற்படுத்தும் மற்ற கிருமிகளையும் கட்டுப்படுத்தி இந்த நோய்களை ஒழிக்க முடியும் என்று இந்த ஆய்வு குழுவின் தலைவர் தெரிவிக்கிறார்.

சோதனை :
இந்த புரதத்தை மனித அணுக்கள் மற்றும் எலியின் அணுக்களிலும் செலுத்தி அதன் தாக்கத்தை பதிவு செய்திருக்கின்றனர். மனித நோயெதிர்ப்பு அணுக்களில், இந்த புரதம் இரண்டு நேர்மறை தாக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. முதலாவது, உடலில் உள்ள அணுக்களை இந்த வைரஸ் தாக்காமல் தடுக்கப்படுகிறது. இரண்டாவது, ஃப்ளு காய்ச்சலின் அறிகுறிகளான அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால், காய்ச்சல், உடல்வலி, சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை தடுக்கப்படுகிறது.
 
RC 101 என்ற புரதம் மனித உடலில் தென்படவில்லை. சில விலங்குகளுக்கு இது இயற்கையான முறையில் தென்படுகிறது. இந்த புரதம் சிறந்த ஆற்றலை தந்து கிருமிகளை எதிர்த்து உடலை பாதுகாக்கிறது. இந்த புரதம் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் போது தொலைக்க பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இந்த ஆராய்ச்சி குழுவினர், இதே புரதம், இன்று பரவலாக மக்களை அச்சுறுத்தி வரும், டெங்கு, ஜிக்கா போன்ற நோய்களுக்கு தீர்வுகளை தருமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இந்த ஆய்வும் வெற்றி பெற்றால் டெங்குவில் இருந்து இந்த உலகமே விடுதலை பெறலாம்.