நிமோனியாவுக்கு புதிய சிகிச்சை

உடலில் முக்கியமான பகுதிகளில் ஒன்று ஸ்பைனல் கார்ட் எனப்படும் முதுகு தண்டு. இது நரம்பு திசுக்கள் சேர்ந்த ஒரு கட்டாகும். மூளையிலிருந்து இடுப்பு பகுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும். மூளையும் முதுகு தண்டும் சேர்ந்து தான் மத்திய நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.

நிமோனியாவுக்கு புதிய  சிகிச்சை

முதுகு தண்டு பகுதியில் காயங்கள்  ஏற்பட்ட நோயாளிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் . பல வகை தொற்றுகள் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முதுகு தண்டு காயம் ஏற்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகம் . இந்த தொற்றுகளை குறைப்பதற்கான சிகிச்சை தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்கள் முடிவுகள் சில கருத்தை வெளியிட்டன .

நாட்பட்ட அல்லது இடைக்கால முதுகு தண்டு காயத்திற்கு பிறகு நோயாளிகள் இறப்பதற்கு முக்கிய காரணம் நிமோனியாவாகும். முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டவுடன் அவர்கள் நோயெதிர்ப்பு மண்டலம் முடக்கப்படுகிறது. அதனால் நிமோனியா போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட முடிவதில்லை. 

எட்டு வருட ஆய்விற்கு பிறகு முதுகு தண்டு காயம் , நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்படி பாதிக்கிறது என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடித்தனர். 

முதுகு தண்டு காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எளிதில் நிமோனியா மற்றும் லிம்போபீனியாவால் பாதிக்கப்படுவதற்கு காரணம், சிறு நீர் பைக்கு மேல் தோன்றும் நாளமில்லா சுரப்பிகளுடன் தொடர்புடைய நியூரோ எண்டோக்ரைன்  சரியான முறையில் வளைந்து கொடுக்காதது தான் என்று கூறுகின்றனர். 

லிம்போசைட் என்ற வெள்ளை இரத்த அணுக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக இருக்கிறது. லிம்போபீனியா என்பது வெள்ளை இரத்த அணுக்களின் குறைபாடு காரணமாக வரும் நோய். 
இந்த கண்டுபிடிப்பு , நோய் தொற்றுகளை குறைக்க அன்டிபையாட்டிக் இல்லாமல் பல்வேறு புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க உதவும். இதன்மூலம் இறப்பு விகிதமும், உடல் பாகங்கள் செயலிழப்பும் குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.