முட்டையில் மிளகு சேர்த்து சாப்பிடுவதற்கான 5 காரணங்கள் 

மிளகும் முட்டையும் ஒரு நல்ல காம்பினேஷனை உருவாக்கும். பலருக்கும் இந்த கலவை மிகவும் பிடிக்கும். ஏன் இந்த கலவை அனைவருக்கும் பிடித்தமாக உள்ளது என்பதை யோசிக்கும் போது  இந்த பதிவு தயாரானது.

முட்டையில் மிளகு சேர்த்து சாப்பிடுவதற்கான 5 காரணங்கள் 

பலருக்கும் காலை உணவாக இருப்பது மிளகு சேர்த்து தயாரிக்கப்பட்ட முட்டை . அது ஆம்லேட்டாக இருக்கலாம் அல்லது பிரட் டோஸ்ட்டாக இருக்கலாம். ஏன் முட்டையுடன் மிளகு சேர்த்து தயாரிக்க நாம் பழகி இருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

1. மிளகின் ஆரோக்கிய நன்மைகள்:

மிளகிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் எதிர்பாராதவிதமாக அமைந்துள்ளன. செரிமானத்தை ஊக்குவித்தல், சருமத்தை மேம்படுத்துவது  போன்றவை இதனை சில நன்மைகளாகும். புற்று நோயை எதிர்க்கும் ஒரு கூறாகவும் மிளகு இருப்பது இன்னும் ஆச்சர்யத்தை தருகிறது அல்லவா? இந்த ஆரோக்கியமான உணவு மிளகுடன் 7 கிராம் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின் மற்றும் மினரல் கொண்ட முட்டையை இணைப்பதால் ஒரு ஆரோக்கியம் பொருத்திய காலை உணவு கிடைப்பதால் இதனை ஒதுக்க முடிவதில்லை.

2. முட்டையை உண்பதில் ஒரு வித உந்துதலைத் தருகிறது மிளகு:
மிளகின் ஆரோக்கிய நன்மைகளுடன் சேர்த்து அதன் கார தன்மை மக்கள் இதனை அதிகம் உட்கொள்ள காரணமாக உள்ளது. முட்டை போன்ற காரமில்லாத ஒரு உணவுடன் சிறந்த கலவையை இது உண்டாக்குகிறது. கீரை, பச்சை மிளகாய், கெட்ச் அப் , காளான் போன்ற பல்வேறு சுவை மிகுந்த உணவுப் பொருட்களுடன் பல்வேறு நிறக் கலவையுடன் முட்டையை சேர்த்து உண்டு மகிழலாம்.

3. ஒன்று மேல் சாப்பிடுவதற்கான ஆவலைத் தூண்டுகின்றது:
ஒரு முட்டை ஆம்லேட்டில் மேலே தூவப்படும் மிளகின் அழகைக் காணும்போது ஒன்றுக்கு மேல் முட்டையை சாப்பிடத் தூண்டும் ஆவல் நம்முள் எழுவது நிச்சயம்.

4. எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் :
முட்டையை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று வரைமுறை கிடையாது. அப்படியே தண்ணீரில் அவித்து சாப்பிடலாம். ஆம்லேட், பொரியல் வறுவல் , டோஸ்ட் என்று எந்த விதத்தில் இதனை தயாரித்து சாப்பிட்டாலும் இதன் சுவை அலாதி.

5 . வெறும் உப்பு சேர்ப்பதை விட, மிளகுடன் முட்டை சூப்பரோ சூப்பர் :
முட்டையில் உப்பு சேர்ப்பது என்பது தேவையற்றது. முட்டையில் ஏற்கனவே 62 கிராம் அளவு சோடியம் உள்ளது. இதற்கு மேல் உப்பு முட்டைக்கு தேவையில்லை. நாம் தினமும் நாள் முழுக்க சாப்பிடும் எல்லா உணவிலும் உப்பு சேர்த்து தான் சாப்பிடுகிறோம். ஆகையால் இந்த அருமையான மிளகு சேர்த்து தயாரிக்கும் முட்டையில் உப்பிற்கான அவசியம் இல்லை.