இதய செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எவ்வளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும்

இதய செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உப்பின் அளவை தீர்மானிப்பது என்பது சிக்கலான ஒரு விஷயம் என்பது நிபுணர்களின் கருத்து.

இதய செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எவ்வளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும்

உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். ஆனால் இதய செயலிழப்பு உண்டானவர்களுக்கு மிகச் சிறிய அளவு சோடியம் கூட பாதிப்பை உண்டாக்கும். அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் குறிப்பிட்ட அளவு உப்பை விட அதிக அளவு எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சோடியம் அளவைக் குறைப்பதால் எண்ணற்ற நன்மைகள் நமது உடலுக்கு கிடைக்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்(AHA), அமெரிக்காவில் வசிக்கும் நபர் சராசரியாக ஒரு நாளில் 3400 மிகி அளவு சோடியம் எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கிறது. சராசரியாக 1500மிகி அளவு உப்பு ஒரு சிறந்த வரம்பாக இருக்கும் போது, 2300மிக்கி அளவை விட அதிகம் உட்கொள்ளக் கூடாது என்று இந்த நிறுவனம் பரிந்துரைக்கிறது.

"அளவுக்கு அதிகமான உப்பு இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்குகிறது" என்று தென் கரோலினாவில் உள்ள சார்லஸ்டனில் MUSC ஹார்ட் மற்றும் வாஸ்குலார் மையத்தின் ரெபேக்கா புல்லர் விவரிக்கிறார். 
"சோடியம், திரவத்திற்காக ஒரு காந்தமாக செயல்படுகிறது, இதனால் திரவத் தக்கவைப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்". உடலில் அதிக அளவு திரவம் இருப்பதால் இதயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது. "அதிக உழைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை வாதம் , இதய செயலிழப்பு , சிறுநீரக கோளாறு போன்ற அபாயத்தை அதிகரிக்கும்",

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நபர்கள், குறைந்த சோடியம் உணவுகளால் அதிக நன்மையை அடைகின்றனர். ஆனால் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்வதால் அதிக நன்மையை அடையலாம் என்றாலும் குறிப்பாக எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விவாதத்திற்குரிய கருத்தாகவே இருந்து வருகிறது. AHA மற்றும் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஃபவுண்டேஷன் வெளியிட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, 2013 ஜுன் மாத இதழில் வெளியிடப்பட்ட பத்திரிகை சுழற்சியில், "சோடியத்தின் அளவு  ஒரு நாளில் 1,500 மிகி குறைக்கப்படுவதற்கு AHA பரிந்துரை செய்வது இதய செயலிழப்பு பாதிப்பில் ஏ மற்றும் பி பிரிவில் இருக்கும் பெரும்பாலான நோயாளிகளுக்கு பொருத்தமானது, இதய செயலிழப்பில் நான்கு பிரிவுகள் உள்ளன. பிரிவு ஏ மற்றும் பி இதய செயலிழப்பிற்கு முந்தைய நிலையாக அறியப்படுகிறது, மற்றும் சி மற்றும் டி ஆகிய பிரிவுகள் முற்றிய நிலைகளாக அறியப்படுகிறது. இதய செயலிழப்பில் தீவிர நிலையில் உள்ள நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சோடியத்தின் அளவு குறித்த போதுமான ஆதாரம் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை என்றும் கருத்து தெரிவிக்கிறது.

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு சோடியம் அளவை பரிந்துரைப்பதில் இருக்கும் சவால்:

"இது மிகவும் அவசியமான ஆராய்ச்சிக்கான பகுதியாகும்," பால்டிமோர் நகரில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ நிறுவனங்களில் தடுப்பு, நோய்த்தடுப்பு, மற்றும் மருத்துவ ஆய்வுக்கான வெல்ச் மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் அப்பல் கூறுகிறார். "பொது மக்களில், நாங்கள் உயர் இரத்த அழுத்தம் தடுக்க அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்து சில அளவுகோலை பரிந்துரைக்கிறோம். ஆனால் இதய செயலிழப்பு நோயாளிகள் மத்தியில் இது ஒரு கடினமான செயலாக உள்ளது. இதய செயலிழப்பு பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு அதிக அளவில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இந்த மருந்துகளில் சிறுநீர் நீக்க ஊக்கிகள் உள்ளதால், சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது.

இதய செயலிழப்பு நோயாளிகள் சிறுநீர் நீக்க ஊக்கிகளை எடுத்துக் கொள்ளும் வேளையில் சோடியம் அளவை திடீரென்று  குறைத்திடும் போது  நீர்ச்சத்து குறைபாடு போன்ற அபாயம் அவர்களுக்கு உண்டாக நேரிடும்.
உடலின் சோடியம் அளவு மிகவும் குறையும்போது தசை வலி மற்றும் தன்னிலையிழத்தல் போன்றவை ஏற்படும், இதற்கான சிகிச்சையை எடுக்காத நிலையில் வலிப்பு அல்லது கோமா நிலை உண்டாகலாம் என்று ரெபேக்கா விவரிக்கிறார்.

இது ஒரு சமநிலையில் இருப்பது மிகவும் அவசியம். இதய செயலிழப்பு நோயாளிகள் அதிக அளவு சோடியம் உட்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியதாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். க்ளினிகல் நர்சிங் என்ற பத்திரிகையில் அதிக அளவு சோடியம் இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு தீங்கை உண்டாக்கும் என்று தெரிவிக்கும் ஆய்வு ஒன்றை ரெபேக்கா சுட்டிக் காட்டுகிறார். இதய செயலிழப்பு நோயாளிகளில் குறைந்த அளவு சோடியம் எடுத்துக் கொள்பவர்களை ஒப்பிடும்போது  இதய செயலிழப்பு உண்டான நபர்கள், தினமும் 3000 மிகி அளவிற்கு அதிகம் சோடியம் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவமனைக்கு வருகை புரிவது, இறப்பு எண்ணிக்கை போன்றவை அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். 

ஆகவே, இதய செயலிழப்பு நோயாளிகள் எவ்வளவு சோடியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
"அதனை உங்கள் மருத்துவரிடம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்" என்று அப்பல் கூறுகிறார். "இருப்பினும் அதிக அளவு சோடியத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்" என்று அவர் கூறுகிறார். மற்றும், சோடியம் அளவை திடீரென்று அதிகரிப்பதோ அல்லது குறைப்பதோ வேண்டாம். அதன் அளவை எப்போதும் சீராக ஒரே அளவில் வைத்து கொள்வதால் மருத்துவர்கள் அதற்கேற்ற முறையில் மருந்துகளை வழங்க முடியும். இதன் அளவில் ஏற்படும் மாற்றமும் உங்கள் மருத்துவரால் வழங்கப்பட வேண்டும்.