மழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

மழை காலம் தொடங்கி விட்டது. இந்த மழை காலத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாக மக்களிடையே  பரவும். நுண்  கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற காலம் இந்த மழை காலம். ஆகையால் வெளி உணவுகளை சுவைப்பதை அறவே நீக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதல்களும் நோய் தொற்றிற்கு காரணமாக இருக்கலாம்.

மழை காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் தொற்றுகளில் இருந்து உடலை காப்பதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இந்த கிருமிகளை எதிர்த்து போராடி உடலை ஆரோக்கியத்தோடு வைக்க உதவும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை பற்றிய தகவல் கீழே கொடுக்க பட்டுள்ளது. உலக ஊட்டச்சத்து வாரமாகிய இந்த வாரத்தில்(செப் 01-07) இந்த தகவலை அறிந்து கொள்வோம்.

சோளம்:

மழை காலங்களில் அதிகம் கிடைக்கும் ஒரு உணவு பொருள் சோளம். இதில் ஊட்டச்சத்துகள் மிகவும் அதிகமாக உள்ளது. பல விதமான நோய்களை எதிர்த்து போராடும் வேதி பொருட்கள் சோளத்தில் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ , வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ சோளத்தில் அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன. மழை காலங்களில் பரவலாக ஏற்படும் வயிற்றுப்போக்கு வருவதை குறைக்கிறது இந்த சோளம்.

கடலை மாவு:
புரத சத்து மிக்க ஒரு உணவு பொருள் கடலை மாவு. ஒவ்வாமையை எதிர்த்து போராடி உடலுக்கு உதவுகிறது. இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் , உடல் தளர்ச்சியை போக்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் வைட்டமின் பி6 கடலை மாவில் அதிகம் உள்ளது.

ஆப்பிள் மற்றும் பேரிக்காய்:
க்யூரஸ்ட்டின் என்ற பாலிபீனால் கூறு ஆப்பிள் மற்றும் பேரிக்காயில்  அதிகம் உள்ளது. இது வீக்கத்தை குறைப்பதற்கும் நரம்புகளில் ஆக்ஸிஜெனேற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பை தடுக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. தினம் 1 ஆப்பிள் சாப்பிடுவோருக்கு டைப்  2 நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது. வைட்டமின் சி மற்றும் கே அதிகமாக இருப்பதால் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து உடலை காக்கின்றன.

பழுப்பு அரிசி:
பழுப்பு அரிசியில் நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் செலினியம் அதிகமாக காணப்படுகிறது. செலினியம் ஒரு ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும் .  மற்றும் புற்று நோய் செல்களை  எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. தைரொய்ட் சுரப்பிகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக  இயங்க வைக்கிறது. மாங்கனீஸ் தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

ஓட்ஸ்:
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பொதுவாக இது ஒரு சிறந்த காலை உணவாக ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இது வெளியேற்றுகிறது. ஓட்ஸ் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, நோயெதிர்ப்பு  மண்டலத்தை சீராக செயலாற்ற உதவுகிறது.

பார்லி:
பார்லியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்குகிறது. குடலில் நல்ல  பாக்டீரியாக்கள் வளர்ச்சியில் உதவுகிறது.

கொண்டைக்கடலை:
துத்தநாகம் மற்றும் தாமிரம் அதிகம் இருக்கும்  உணவில் கொண்டைக்கடலையும் ஒன்று. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு  வகிக்கிறது. வைட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுகளை விட,  சளி மற்றும் இருமலுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

பூண்டு:
அல்லிசின் என்ற கூறு பூண்டில் அதிகமாக காணப்படுகிறது. மழை காலத்தில் ஏற்படும் சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்து. நமது தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது சளி மற்றும் இருமலுக்கு ஒரு சரியான தீர்வாகும்.

தயிர்:
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல வகையான நுண்ணுயிர்களை எதிர்த்து  போராடுவதற்கு உடலுக்கு வலிமையை தருகிறது. இதனால்  நோய் தோற்று ஏற்படுவது குறைகிறது.

பாதாம் :
பாதாமை சூப்பர் புட் என்று அழைப்பர். இதில் வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன. பாதாமில் கனிமங்கள் அதிக அளவில்  இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ , ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

மழை நாட்களின் ஆனந்தத்தை அனுபவிக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் .