விவசாயிகளின் நண்பன் மண்புழு

விவசாயிகளின் நண்பனான மண்புழு மண்ணை உழுவதோடு, மண் வளத்தைப் அதிகரிக்கின்றது. மண்ணையும், மனிதனையும் மலடாக்கும் ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.

விவசாயிகளின் நண்பன் மண்புழு

விவசாயிகளின் நண்பன் மண்புழு

விவசாயிகளின் நண்பனான மண்புழு மண்ணை உழுவதோடு, மண் வளத்தைப் அதிகரிக்கின்றது. கேடு விளைவிக்கும் ரசாயன உரத்தை பயன்படுத்தாமல்  இயற்கை உரமான மண்புழு உரத்தை பயன்படுத்துவதால் மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும் மழை காலங்களில் ஏற்படும் மண் அரிப்பை தடுப்பதோடு, கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலையை குறைத்து வேர்களை பலப்படுத்தி மகசூலை அதிகரிக்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர்களுக்கு  வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு மகசூலை அதிகரிக்கிறது.

நன்மைகள்:

  1. மண்புழு உரத்தில் அதிக சத்துக்கள் உள்ளன.
  2. மண்புழு உரத்தில் நன்மை தரும்  அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
  3. மண்புழுவின் உடலில் 70% புரதம் இருப்பதால் இறந்த மண்புழுவின் உடல் மட்கும் போது மண்ணின் தழைச்சத்தை அதிகரிக்கின்றது.
  4. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சியை தருகிறது.
  5. கரையாமல் இருக்கும் சத்துகளை கரைத்து கொடுக்கிறது.
  6. திடக்கழிவுகளில் ஏதேனும் நச்சுத் தன்மை இருந்தால் அவை மண்புழு வயிற்றுக்குள் செல்லும் பொழுது அவைகளின் நச்சுத்தன்மை மாற்றப்படுகின்றன.
  7. 40-60 நாட்களிலே கழிவுகள் மட்கி குறுகிய காலத்தில்  உரமாக மாறுகின்றது.

மண்ணையும், மனிதனையும் மலடாக்கும் ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம். மண்ணின் வளத்தை மீட்டெடுக்க மண்புழு உரத்தை பயன்படுத்துவோம்.