தீபாவளி

தீபாவளி பண்டிகை இந்துக்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றுகூடி கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி
தீபாவளி

தீபாவளி 

தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. இத்திருநாளை இந்துக்கள், சமணர்கள், பௌத்தவர்கள் 

மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் 

கோலாகலமாக  கொண்டாடிவருகின்றனர்.

தீபாவளி கொண்டாட காரணமாக இருக்கும் நிகழ்வுகள்:

  • நரகாசுரன் என்னும் அரக்கனை கிருஷ்ணர் பாமாவின் துணையுடன் கொன்றுவிடுகிறார். தான் இறக்கும் தருவாயில் நரகாசுரன் பகவானிடம் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, தன்னுடைய இறப்பை துக்கமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று கேட்டான். அவ்வாறே ஆகட்டும் என்று கிருஷ்ணரும் அருள் புரிந்தார். அன்றிலிருந்து  இத்திருநாளான தீபாவளி   கொண்டாடப்படுகிறது.
  • ராமாயண இதிகாசத்தில், தீபாவளி என்பது அரக்க அரசன் ராவணனை தோற்கடித்தபின் ராமர் தனது மனைவி சீதா, சகோதரர் லட்சுமணன் மற்றும் தீவிர பக்தரான அனுமன் ஆகியோரின் வரவை எதிர் நோக்கிய அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றினார்கள். இந்த தீப ஒளியின் வெளிச்சத்தில் ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தது ஐப்பசி அமாவாசை இரவு அன்று தான். இதனால் தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது என்று இராமாயணத்தில்  குறிப்பிட்டுள்ளது. இராமர் திரும்பியதை அயோத்தி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடினர்கள். அன்று முதல் இந்த திருநாளை அனைவரும் தீமை என்கிற இருளை நன்மை என்கிற ஒளி அகற்றியதற்காக கொண்டாடிவருகின்றனர்.
  • கந்தபுராணத்தின் படி சக்தி 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்தார்.
  • மகாவீரர் வீடுபேறு  அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து,  இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
  • பௌத்தத்தில், தீபாவளியை 'தீபதான உற்சவம்' என்றும் அழைக்க  காரணமாக இருந்த சம்பவம், புத்தர் மீண்டும் கபிலவஸ்துவிற்கு விஜயம் செய்த நாளன்று நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்து வீடுகளில்  விளக்குகளை வரிசையாக ஏற்றி கொண்டாடினார்கள். இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை. அதனால் தான் இத்தினத்தை  பௌத்தர்கள் கொண்டாடுகின்றனர்.                                                                                                                                                                                                                                                                      தீபாவளியை எவ்வாறு கொண்டாடுகின்றனர் :                                       தீபாவளி பண்டிகை "விளக்குகளின் திருவிழா" என்று குறிப்பிடப்படுகிறது. மக்கள் வீட்டு வாசலில் அழகிய வண்ணக்கோலங்கள் போட்டு,எண்ணை விளக்கு ஏற்றி மற்றும்  வண்ண விளக்குகளால் தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர், அனைவரும் அதிகாலையில் எழுந்து தலைக்கு எண்ணை வைத்து குளித்து, பூஜை செய்த பின் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை உண்டும், பகிர்ந்தும், பட்டாசுகளை வெடித்தும்  மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். தீபாவளியன்று லட்சுமி தேவியின் அருளால் செல்வ செழிப்பு மற்றும் வெற்றி ஒருவருக்கு கிடைக்கும்  என்பது ஐதீகம். ஆகையால் இந்நாளில் வணிகர்கள் புதிய கணக்கு புத்தகங்களை தொடங்குவார்கள்.  

தீபாவளி பண்டிகை இந்துக்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றுகூடி  பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் நம் குரல் வாயிலாக தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீப ஒளியில் அனைவரின் வாழ்வும் ஒளிரட்டும்.