காற்று மாசுபாடால் விந்தணுவில் ஏற்படும் விபரீதம் !

சுவாசம் தொடர்பான பிரச்சனை , நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா  போன்றவை காற்று மாசுபாடால் ஏற்படும் பொதுவான உடல் ஆரோக்கிய குறைவாகும்.  இவற்றை தவிர மற்றொரு  முக்கிய தாக்கம் இன்று பெருமளவில் பரவி வருகிறது. ஆண்களில் விந்தணுவில் காற்று மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபாடால் விந்தணுவில் ஏற்படும் விபரீதம் !

காற்று மாசுபாடு என்பது இன்று இந்தியாவின் எல்லா பெருநகரங்களையும் அதிகமாக பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதன் கடும் விளைவுகளை நமது தலைநகர்  தில்லியில் பார்த்திருக்கிறோம். காற்று மாசுபாடால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்புக்கு உதவும், பேருந்து, ரயில், விமானம் போன்றவை கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இதோடு இவை முடிந்து விடுவது இல்லை. அதிகமான காற்று மாசுபாடு, மனித உடலின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. 

சமீபமாக நடத்தப்பட்ட ஆய்வில், விந்தணு குறைவிற்கும், காற்று மாசுபாட்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது. 

சீன பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஹாங் காங்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர், டாக்டர். லாவோ க்ஸிங் க்கின், காற்று மாசுபாடு தான் சுற்றுப்புற சூழலின் ஆரோக்கியத்தை அழிக்கும் ஒரு மிக பெரிய அபாயம் என்று கூறுகிறார். காற்று மாசுபாடு பரவி இருக்கும் காற்றை நாம் சுவாசிக்கும்போது அவற்றில் இருக்கும் கன உலோகங்களில் இருக்கும் நச்சு ரசாயனங்கள், நமது  நுரையீரலை பாதிக்கிறது. இவை, இரத்தத்தில் நுழைந்து 

விந்தணுக்களை பாதிக்கிறது.
இதன் விளக்கத்தை அறிவதற்காக நடத்தப்பட்ட ஆய்வில், 6500 ஆண்களின்  விந்தணுக்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் தைவான் நாட்டை சேர்ந்த  15-49 வயதில் உள்ளவர்கள். இவற்றோடு சேர்த்து, அவர்கள் வீட்டில் இருக்கும், காற்றில் வெளிப்படும் நுண்துகளிகளை  பொருத்தி  பார்த்தனர். அவர்களின் முடிவு நமக்கு திகைப்பை  தந்தது.  அசாதாரணமான விந்தணு வடிவத்திற்கும், அதிகமான காற்று மாசுபாட்டிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இதன் தாக்கம் மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. ஆனால், இந்த சிறு தாக்கம் கூட பொது சுகாதாரத்திற்கு ஒரு சவாலாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே விந்தணு தரத்தை அதிகப்படுத்த சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி இப்போது காண்போம்.

டார்க் சாக்லேட்:
டார்க் சாக்லேட்டில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை விந்தணுக்களின் தரத்தை அதிகப்படுத்தி எண்ணிக்கையை உயர்த்துகின்றன. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு உண்ணுவது உடலுக்கு உகந்ததாகும். அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது டெஸ்டோஸ்டெரோன் சமசீரின்மை உண்டாகும்.

பூண்டு:
விந்தணுக்களை அதிகப்படுத்த மிகவும் முக்கியமான மற்றும் அனைவரும் அறிந்த ஒரு உணவு பொருள் பூண்டு. பூண்டில் அல்லிசின் அதிகமாக உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அல்லிசின், விந்தணுக்கள் சேதமாகாமல் தடுக்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் என்னும் ஆன்டிஆக்ஸிடென்ட் விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. தினமும் 1-2 பற்கள் பூண்டை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

ப்ரோக்கோலி:
வைட்டமின் ஏ குறைபாடு, ஆண்களுக்கு விந்தணு குறைப்பாட்டுக்கு வழி வகுக்கும். வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, விந்தணுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ப்ரோக்கோலி இந்த வகையை சேர்ந்த உணவாகும். இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது . இதனை சாலட்டில் சேர்த்து உண்ணலாம் அல்லது, பாதி வேகவைத்து உண்ணலாம்.

வால்நட் :
அனைத்து  பருப்பு  மற்றும் கொட்டை வகைகளில் வால்நட் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொடர்ந்து ஒரு கைநிறைய வால்நட் எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.

வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற ஒரு முக்கியமான என்சைம் உள்ளது. இதனுடன் வாழை பழம், வைட்டமின்  ஏ , சி , மற்றும் பி 1 அதிகமாக  உள்ள ஒரு பழம். இந்த ப்ரோமெலைன், உடலின் செயலாற்றலை அதிகரித்து, விந்தணுக்களை உற்பத்தி செய்ய தூண்டுகிறது. இதனால் தொடர்ந்து வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது விந்தணுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கிறது.

முட்டை:
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் இயக்கத்தை மேம்படுத்தவும் முட்டை பெரிதும் உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஈ  அதிகமாக உள்ளது. புரத சத்தும் அதிகமாக உள்ளது. இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் கூறுகளில் இருந்து அவற்றை பாதுகாக்கிறது. முட்டையில் உள்ள அதிக ஊட்டச்சத்துகளால் ஆரோக்கியமான விந்தணு உற்பத்தி சாத்தியமாகிறது.

கீரை:
ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு போலிக் அமிலம் முக்கியமானது. கீரை மற்றும் இலைகளையுடைய பச்சை காய்கறிகளில் இந்த வகை வைட்டமின்  அதிகமாக உள்ளது. உடலில் போலேட்  அளவு குறையும் போது தரம் குறைந்த விந்தணு உற்பத்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகள் தோன்றும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. 

அஸ்பாரகஸ்:
பச்சை காய்கறிகளில் அஸ்பாரகஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள, அஸ்பாரகஸ், விந்தணு உற்பத்தியில் பல நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவை விந்தணுக்களை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து  பாதுகாக்கிறது.

மாதுளை:
விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் தரத்தை உயர்த்த மாதுளை அதிகமாக உதவுகிறது. இரத்த ஓட்டத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து விந்தணுக்களை காக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மாதுளையில் அதிகமாக உள்ளன. மாதுளை ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தியாகும்.