குளிர் நீரின் பயன்கள்

குளிர் நீரின் பயன்கள்

சருமத்தில் உள்ள துளைகளை குளிர்ந்த நீர் மூடுகிறது. துளைகள் மூடியிருப்பதால், சருமம் மென்மையாக இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.  வெந்நீரால் சருமத்திற்கு வறட்சி ஏற்படும். 

டெஸ்டோஸ்ட்டிரோன் அதிகரிப்பு:
5 முதல் 10 நிமிடங்கள் குளிந்த நீரில் குளிப்பதால், உடலில் டெஸ்டோஸ்ட்டிரோன்  ஹார்மோன் சுரக்கிறது. ஆண்களின் ஆண்மை இயக்கத்தை இந்த ஹார்மோன் அதிகரிக்கிறது.

ஆற்றல் அதிகரிக்கிறது :
நம்மை விழிப்படைய செய்யும் திறன் குளிர்ந்த நீரை தவிர வேறெதற்கும் இல்லை. குளிர்ந்த நீரில் குளிப்பதால், நரம்புகள் முறுக்கேறுகின்றன. இதயம் வேகமாக செயல்பட தொடங்குகிறது. சீரான சுவாசம் கிடைக்கப்படுகிறது. 

நிணநீர் இயக்கம் (Lymphatic Movement):
நோய்களை எதிர்த்து போராடுவதற்காக செல்களில் உள்ள கழிவுகளை களைவதே இந்த இயக்கத்தின் பணியாகும். தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் இந்த இயக்கம் உடல் முழுவதிலும் சுழல்கிறது. குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் சுருங்கி , இந்த நிணநீர் உடல் முழுதும் பாய்வதற்கான வழிகளை செய்கிறது. 

வீக்கங்கள் குறைகிறது:
உடற்பயிற்சிக்கு பிறகு உடலில் வீக்கம் ஏற்படாமலிருக்க விளையாட்டு வீரர்கள் குளிர் நீர் குளியலை மேற்கொள்கிறார்கள். குளிர்ந்த நீரில் குளித்து முடித்தவுடன் உடலில் சுத்தமான ஊட்டச்சத்துள்ள இரத்தம் பாய்கிறது. இது தசைகளையும் தசை நார்களையும் சீராக்குகிறது.

ஆழ்ந்த உறக்கம்:
தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த தீர்வாக சொல்லப்படுவது, இரவில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு உறங்குவதை தான். 

மற்ற நன்மைகள்:
குளிர்ந்த நீர் குளியல், உடல் வலி, நாட்பட்ட வீக்கம் ஆகியவற்றை குறைக்கிறது. முடிக்கு ஆரோக்கியம் தருகிறது. சிறுநீரகத்தை சீரான முறையில் செயலாற்ற வைக்கிறது. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது. சுவாசத்தை  ஆழமாக்குகிறது. சோர்வை போக்கி, ஆழ்ந்த  உறக்கத்தை கொடுக்கிறது.

என்ன வாசகர்களே! குளிர்ந்த நீரின் பயன்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறதா?  வெந்நீரை பயன்படுத்தாமல் குளிந்த நீரில் குளித்து ஆனந்தமாக இருங்கள்.