தமனிகளை சுத்தம் செய்ய சிறந்த 12 உணவுகள்

ஆக்சிஜென் அதிகமாக இருக்கும் இரத்தத்தை இதயத்தில் இருந்து உடலில் உள்ள பல அணுக்களுக்கும் எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களை தமனிகள் என்று கூறுவோம். இத்தகைய தமனிகளில் எதாவது அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு, வாதம், மற்றும் பல இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டாகின்றன. அடைப்புகள் எதுவும் இன்றி, இதயம் ஆரோக்கியமாக இயங்க உங்கள் தினசரி உணவில் சி்ல முக்கிய மாற்றங்களை செய்வது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

தமனிகளை சுத்தம் செய்ய சிறந்த 12 உணவுகள்

ஆரோக்கியமான இதயத்தை விரும்புகிறவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிக அவசியம். இதய நோய் என்பது ஒரு மனிதனை இறப்பு வரை கொண்டு செல்லும் கொடுமையான நோய் ஆகும். தமனிகளில் ஏற்படும் அடைப்பின் காரணமாக இதய நோய் உண்டாகிறது. தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், அதன் உட்சுவர்கள் சுருங்கி,  இரத்த ஓட்டம் தடை படுகிறது. இதனால் இதய நோய் ஏற்படுகிறது. .

ஆக்சிஜென் அதிகமாக இருக்கும் இரத்தத்தை இதயத்தில் இருந்து உடலில் உள்ள பல அணுக்களுக்கும் எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களை தமனிகள் என்று கூறுவோம். இத்தகைய தமனிகளில் எதாவது அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு, வாதம், மற்றும் பல இதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உண்டாகின்றன. அடைப்புகள் எதுவும் இன்றி, இதயம் ஆரோக்கியமாக இயங்க உங்கள் தினசரி உணவில் சியல் முக்கிய மாற்றங்களை செய்வது அவசியம். இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மூலம் மற்றும் ஆரோகியமான வாழ்கை முறையை பின்பற்றுவது மூலம்  உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள், தமனிகளில் உள்ள அடைப்பை போக்க உதவுகிறது. ஆகவே இவைகள், தமனிகளை சுத்தம் செய்ய சிறந்த உணவுகளாக பார்க்கப்படுகின்றன.

அஸ்பரகஸ் (தண்ணீர் விட்டான் செடி)
தமனிகளை சுத்தம் செய்ய உதவும் உணவுகளில் அஸ்பரகஸ் முக்கியமான உணவாகும். இதில் நார்ச்சத்து மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளன. இவை, இரத்த அழுத்தத்தை குறைகின்றது. மேலும்  அபாயகரமான இதய நோயிற்கு வழி வகுக்கும்  இரத்தம் உறைவதை தடுக்கின்றது. அஸ்பரகஸில் அன்டி ஆக்சிடென்ட் இருப்பதால், அழற்சியை எதிர்த்து போராடுகிறது, இதனால், தமனிகளில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படுகிறது.

அவகாடோ :
அவகாடோ, கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேருவதை குறைக்கிறது. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, தமனிகளை  சுத்தம் செய்ய உதவுகிறது. அவகாடோவில் பொட்டஷியம்  இருப்பதால், இரத்த அழுத்தத்தைக்  குறைக்க அது பெரிதும் உதவுகிறது. அவகாடோவில் வைட்டமின் ஈ உள்ளதால், கொலஸ்ட்ராலில் உள்ள விஷத்தன்மை தடுக்கப்படுகிறது.

ப்ரோகோலி :
வைட்டமின் கே அதிகம் நிறைந்த உணவு பொருள் ப்ரோகோலி. இந்த வைட்டமின் தமனிகள் சேதமடைவதை தடுக்கிறது . இரத்த அழுத்தத்தை குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் ப்ரோகோலி  பெருமளவில் உதவுகிறது. மேலும் இது, கொலஸ்ட்ராலில் இருக்கும் விஷத்தன்மையை தடுக்கிறது. அதனுடன், தமனிகளில் உண்டாகும் அடைப்பை தடுக்க உதவுகிறது.

மீன் :
கொழுப்பு நிறைந்த மீன்களாகிய கானாங்கேளுத்தி , சல்மன் , டூனா போன்றவற்றில் ஒமேகா கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இந்த ஆரோக்கிய அமிலங்கள் தமனிகளை சுத்தம் செய்ய உதவுகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் நல்ல கொலஸ்ட்ரால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இரத்த குழாயில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது.. இதன் மூலம், தமனிகளில் இரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது.

மஞ்சள் :
மஞ்சளில் இருக்கும் குர்குமின் , வீக்கத்தை குறைக்கிறது. மேலும் தமனிகளை வலிமையாக்க உதவுகிறது. இதனால், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் உண்டாகும் தமனிகளின் வீக்கத்தை குறைத்து, இதய நோயை தடுக்கிறது. 

ஆரஞ்சு :
ஆரஞ்சு பழத்தை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது . இதற்கு காரணம் இதில் இருக்கும் அன்டி ஆக்ஸிடென்ட். இது , இரத்த குழாய்களின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, தமனிகளை வலிமையாக்க உதவுகின்றது. இதனால் அவற்றில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்படுகிறது.

மாதுளை:
தமனிகளை சுத்தம் செய்யவும், அதன் நச்சுக்களை வெளியேற்றவும் மற்றொரு சிறந்த பொருள் மாதுளம் பழம். இதில் இருக்கும் பைத்தோ கெமிக்கல்கள் , தமனிகளில் உண்டாகும் அடைப்பை போக்க பெரிதும் உதவுகின்றன. மேலும் மாதுளை, நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை ஊக்குவித்து, தமனிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

ஆலிவ் எண்ணெய் :
அத்தியாவசிய கொழுப்பு அமிலமான ஆலிக் அமலம், ஆலிவ் எண்ணெய்யில் அதிகமாக உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. ஆலிவ் எண்ணெய்யை சமையலில் அல்லது சாலடில் பயன்படுத்தலாம். ஆர்கானிக் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதால் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.

தர்பூசணி :
தர்பூசணியில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடலில் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. உடலில் நைட்ரிக் ஆக்சைட் உற்பத்தியை அதிகரிக்க இவை துணை புரிகின்றன. இதனால், தமனிகள் நெகிழ்ந்து, வீக்கம் குறைகின்றது. மேலும் இரத்த அழுத்தம் குறைகின்றது.

நட்ஸ் :
இதயத்தின் ஆரோக்கியத்தில் நட்ஸ் பெரும் பங்கு வகிக்கின்றது. அதிலும் பாதாம் ஒரு சிறந்த பலனை தருகின்றனது. பாதாமில், நிரப்பபடாத கொழுப்பு, வைட்டமின் ஈ, நார்ச்சத்து, புரதம் போன்றவை அதிகம் உள்ளது. பாதாமில் இருக்கும் மெக்னீசியம், தமனிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது, மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பசலை கீரை:
பசலை கீரையில், பொட்டஷியம், போலேட், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை குறைத்து தமனிகளில் உண்டாகும் அடைப்பை தடுக்கின்றது. தினமும் பசலை கீரை சாப்பிடுவதால், அதீரோ செலேரோசிஸ் போன்ற இதய நோய் வகை வருவதற்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

தக்காளி :
தக்காளியில் இருக்கும் லிகோபேன் , இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், தமனிகளில் உண்டாகும் அடைப்பை சரி செய்கிறது. தக்காளியை, சாலட் , ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து தினமும் உண்ணலாம். நாம் தினமும் சமைக்கும் உணவிலும், தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம்.