உங்கள் உணவுகளில் சர்க்கரை அளவை உ டனடியாக குறைக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகள்

எல்லா இடங்களிலும் எந்த ஒரு செயலையும் தொடங்கும்  போது அதை இனிப்புடனே கொண்டாடுவது உலக இயல்பு .

உங்கள் உணவுகளில் சர்க்கரை அளவை உ டனடியாக குறைக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகள்

அறுசுவையில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த சுவை இனிப்பு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதன் சுவையில் மயங்குவர்.  இவ்வாறு எல்லா இடங்களிலும் இனிப்பு முதல் இடத்தை பிடிக்கிறது. 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று பெரியவர்கள்  கூறுவதை  கேள்வி பட்டிருக்கிறோம். எல்லாவற்றிர்க்கும் ஒரு அளவு உண்டு. அந்த அளவை மீறும் போது அதன் தன்மை எதிர்மறையாக மாறுகிறது. அதன் மூலம் சில தீய விளைவுகள் ஏற்படுகிறது. இது எல்லா செயல்களுக்கும் பொருந்தும்.

சர்க்கரை சுவை இனிப்பாக இருந்தாலும் அதன் அதிக உட்கொள்ளல் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க தவறுவதில்லை .

சர்க்கரையின் தினசரி உட்கொள்ளல் அளவு அதிகபட்சம் (daily value)  50கிராம்,அதாவது 12 டீஸ்பூன் அளவு ஆகும். ஒரு நாள் உணவில் நமக்கு மொத்தம்  தேவைப்படும் கலோரிகள் 2000 ஆகும். இதில் 10% அதாவது 200 கலோரிகள் சர்க்கரை எடுத்து கொள்ளலாம். 

சர்க்கரையின் உபயோகத்தை பாதியாக குறைக்க உலக  சுகாதார நிறுவனம்   கூறுகிறது. அதன்படி குறைந்த பட்சம் தினசரி உட்கொள்ளல் 6டீஸ்பூன்  அதாவது 25கிராம் ஆகும்.

சர்க்கரை அதிகம் உட்கொள்வதினால் கலோரிகள் மட்டுமே அதிகமாகிறது. இதனால் உடலுக்கு எந்த ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை. மாறாக உடல்  பருமன் மட்டுமே அடைகிறது. 

எப்போது உங்கள் உணவுகளில் சர்க்கரை அளவை உடனடியாக  குறைக்க வேண்டும் என்பதற்கான அறிகுறிகளை இப்போது அறிந்து கொள்ளலாம்.

1. அடிக்கடி குளிர் மற்றும் காய்ச்சல்:
சர்க்கரை நோய் எதிர்ப்பு மண்டலத்தை  பலவீனப்படுத்துகிறது, இதனால் சளி, காய்ச்சல், வைரஸ்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் போன்றவையால்  உடல் பாதிக்கப்படுகின்றன. எனவே சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறைப்பதால்  சில குறிப்பிட்ட நோய்களை உருவாக்கும் அபாயமும்  குறைகிறது.

2. சங்கிலி தொடர் நோய்கள்:
சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது நாம் அதற்கு அடிமையாகிறோம். ஆதலால் அதை தொடந்து பல நோய்கள் சங்கிலி தொடராக நம்மை ஆட்கொள்கிறது.   

3. உடல் பருமன்:
மேலே கூறியது போல், சர்க்கரை உண்பதால்  புரத சத்தோ அல்லது நார் சத்தோ உடலுக்கு கிடைக்காது. இதனால் வயிறும் நிரம்பாது.  கலோரிகள் மட்டுமே இதன்  மூலம் அதிகரிக்கும். இதனால்  உடல் எடையும் அதிகரிக்கும்.  சர்க்கரை இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இன்சுலின் என்பது உடல் உறுப்புக்கள் ஆற்றலை உற்பத்தி செய்ய சர்க்கரையை கொண்டு செல்லும் ஒரு ஹார்மோன் ஆகும். 

4. தோல் தொந்தரவுகள்:
சர்க்கரை உடலில் ஒரு  வித வீக்கத்தை உண்டாக்கும். அதிக அளவு சர்க்கரை  உட்கொள்ளும்போது பருக்கள் , எண்ணெய் வழிதல், ரோஸசா மற்றும்
எக்ஸிமா போன்ற வகை கட்டிகளால் உடல் சருமம் பாதிக்கப்படுகிறது.  சர்க்கரையை குறைவாக எடுத்துக் கொள்ளும் போது  சருமம் தெளிவாகவும், அதிக மென்மையாகவும் காணப்படுகிறது.

5. சோர்வு மற்றும் ஆற்றல் இழப்பு:
சர்க்கரையை உண்ணும் போது உடலுக்கு உடனடியாக  ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் அது சில மணி நேரங்களுக்கு கூட நீடிப்பதில்லை. சற்று நேரத்தில் உடல்  ஆற்றல் இல்லாமல் சோர்ந்து விடுகிறது. நாள் முழுதும் நம்மை சோர்வாகவே மாற்றி விடுகிறது.

நீங்களும் சர்க்கரையை அதிகம்  சுவைப்பவரா? உங்களுக்கும் இவை போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா? இவை இரண்டையும் இதுவரை இணைத்து பார்க்காமல் இருந்திருந்தால் உடனடியாக உங்களை சர்க்கரை உண்ணும் பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அளவை குறைத்து  இனிமையாக வாழ்ந்திடுங்கள் .