தலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்

தலை முடி வளர்ச்சிக்கான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயனடையலாம்.

தலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்

முடியின் வளர்ச்சி நமது முன்னோர்களின் மரபு சார்ந்தது. மரபியல் ரீதியாக அடர்த்தியான , நீளமான கூந்தல் உடையவர்களும், இன்றைய உணவு, வெப்ப நிலை, மாசு மற்றும் தவறான பராமரிப்பு போன்றவற்றால் குறைந்த முடி வளர்ச்சியை அடைகின்றனர். ஆகவே இந்த பதிவில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம். 

புரதம்:
தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு முக்கிய பங்காற்றுகிறது. முடிகள் புரதத்தால் ஆனவை. ஆகையால் ஒரு நாளில் 45 கிராம் புரதம் எடுத்துக் கொள்ளவேண்டும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் , சவ்வற்ற ஆட்டிறைச்சி ,கோழி இறைச்சி , மீன் , குறைந்த கொழுப்பு பால் பொருட்கள் , பீன்ஸ் , முட்டை  போன்றவையாகும்.
புரதம் தினசரி உணவில் குறையும் போது, மெலிதான, உடையக்கூடிய முடி வளர்ச்சி ஏற்படும். இதனால்  முடி உதிர்தலும் அதிகரிக்கும்.

ஜின்க்:
ஜின்க் குறைபாடும் முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். வால்நட், முந்திரி, பாதாம், பிரேசில் நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் முடி உதிர்தல் கட்டுப்படும்.
காய்கறிகள், பழங்கள், இலைகளையுடைய காய்கறிகளின் சாலட்,  சுத்தமான நீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் முடிக்கு போஷாக்கு கிடைக்கிறது. தேவைப்படும்போது மல்டி வைட்டமின் அல்லது ஜின்க் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:
அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்வதால் முடியின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவாக சால்மன், சார்டின் போன்றவகை மீன்களில் கிடைக்கின்றன. ஆளி விதைகள், யோகர்ட், காட்டேஜ் சீஸ் , சாலட், தானியங்கள் போன்றவற்றிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன.

முடியின் தன்மை:
உங்கள் முடியின் தன்மை, முடிக்கு பயன்படுத்தும் பராமரிப்பு சாதனங்களின் தன்மை ,  போன்றவற்றை வைத்து தான் உங்கள் தலை முடிக்கு ஷாம்பூவின் பயன்பாட்டு எண்ணிக்கையை அளவிட முடியும். உதாரணத்திற்கு, எண்ணெய் பசை தலை முடி கொண்டவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம். வறண்ட முடியை கொண்டவர்கள் தினமும் பயன்படுத்தக்கூடாது.

சரியான ஷாம்பு :
தவறான ஷாம்பு மற்றும் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதால் முடிக்கு சேதம் ஏற்படும். தலை முடியின் தன்மை, எண்ணெய் பசை, வறண்டது, அல்லது சாதாரண தலை முடி  - இவற்றில்  எது உங்கள் முடியின் தன்மை என்பதை  உணர்ந்து அதற்கேற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகு தொல்லை இருந்தால் அதற்கேற்ற வகையை தேர்வு செய்யலாம். கடுமையான மூலப்பொருட்கள் கொண்ட ஷாம்புக்களை தவிர்ப்பது நல்லது.

கண்டிஷனர்:
ஷாம்பு பயன்படுத்திய பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. இதனால் தலை முடி, மென்மையாகவும்,பளபளப்பாகவும் இருக்கிறது. ஷாம்பூவோடு இணைந்த கண்டிஷனர் அல்லது தனி கண்டிஷனர், எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நன்றாக அலசுங்கள்:
ஒரு நாளைக்கு ஒரு முறைதான் ஷாம்பூவை பயன்படுத்தவேண்டும். அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான நீரை பயன்படுத்தி தலையை அலச கூடாது. ஈரமான தலை முடிக்கு 3 மடங்கு அதிகமாக உடைந்து விழும் தன்மை உள்ளது. ஆகவே முடி ஈரமாக இருக்கும்போது சீப்பு பயன்படுத்தி சீவ வேண்டாம். 

தலை முடியை பராமரிக்க குறிப்புகள்:
* ட்ரயர் பயன்படுத்தும்போது குறைந்த அளவில் ஆரம்பித்து மெதுவாக அதிக அளவிற்கு  கொண்டு வாருங்கள்.
* எல்லா நேரமும் ட்ரயர்  பயன்படுத்தாமல் முடிந்தவரை இயற்கையான முறையில் தலையை காய வையுங்கள்.
* ஹேர் பின் , க்ளிப் போன்றவற்றை தலையில் வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி குத்துவதால் குறிப்பிட்ட இடத்தில முடி உடையும் அபாயம் தடுக்க படும்.
* உச்சசந்தலையை மசாஜ் செய்வதால், முடி வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.
* முடியை 10-12 வாரங்களுக்கு ஒரு முறை வெட்டி விடுங்கள். இதனால் முடியின் அடிப்பகுதி வெடிப்பு ஏற்படாமல் இருக்கும்.
* மன அழுத்தத்தை விரட்டுங்கள்.
* மது  பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
* குறைந்த கலோரி உணவுகளை தவிர்த்திடுங்கள்.

மேலே கூறப்பட்ட குறிப்புகள் மற்றும் உணவு தீர்வுகள் மூலம் அடர்த்தியான முடி வளர்ச்சியை அடையலாம்.