தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பு குறிப்புகள்

குழந்தைக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் தாய்ப்பால் , நோயை எதிர்த்து போராடும் சக்தியை தருகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான கொரோனா தடுப்பு குறிப்புகள்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கருதப்படுகிறது. பிறந்து ஆறு மாதம் வரை குழந்தை தாய்ப்பாலை மட்டுமே சார்ந்து உள்ளது. தாய்ப்பால் எளிதாக செரிமானம் ஆகும் தன்மை கொண்டதால் , குழந்தைக்கு வயிறு தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் உண்டாவதில்லை. மேலும் குழந்தை மற்றும் தாய்க்கு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் தாய்ப்பால் உதவுகிறது. ஒரு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய்களை எதிர்க்கும் தன்மை இருப்பதில்லை, ஆனால் தாய்ப்பால் இவற்றை எதிர்த்து  போராடும் வலிமையைத் தருகிறது.  தாய்ப்பாலுடன் வெளியாகும் மஞ்சள் நிற அடர் திரவமான சீம்பால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்த பீதி அதிகரித்து வருவதால் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர். எல்லோரையும்விட வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி காரணமாக அதிக அபாயத்தில் உள்ளனர்.  ஆகவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது போதிய பராமரிப்புடன் இருப்பது அவசியம்.

மிகுந்த பீதியை  உண்டாக்கி இருக்கும் கொரோனா, உலகம்  உழுவதும் உள்ள மக்களை பாதிப்பில் இருந்து தள்ளி இருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறது. பல ஆராய்ச்சிகளுக்கு முன்னதாகவே, குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்த பாதிப்பால் குறைவாக பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. பெண்கள் குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்  கர்ப்பிணிகள் சிறப்பு பராமரிப்புடன் இருப்பது அவசியம். இந்த காரணத்திற்காகவே கர்ப்பிணி பெண்கள் அதிக பயத்துடன் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, சமீபத்தில் தாயான பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது  குறித்து குழப்பத்தை கொண்டிருக்கின்றனர். இந்த பயத்தில் இருந்து பெண்கள் வெளிப்பட , உலக சுகாதார நிறுவனம் , சில முக்கிய  தகவல்களை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்காக வெளியிட்டுள்ளது. 

கொரோனா மற்றும் கர்ப்பிணி பெண்கள் :

கர்ப்பிணி பெண்கள் மீதான கொரோனா தொற்று தாக்கம் குறித்து ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தரவுகள்  குறைவாக இருந்தபோதும் , பொது ஜனங்களைவிட அதிக  அபாயம் கர்ப்பிணிகளுக்கு இருப்பதாக தெரிவிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும் உடலில் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக கர்ப்பிணி பெண்கள் சுவாச தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படலாம் என்று தெரிய வருகிறது.   ஆகவே கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் , காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நேரத்தில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது :

கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் விரும்பினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் அவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அவை ,

  • உணவு உட்கொள்ளும்போது சுவாசம் தொடர்பான சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். தேவைப்படும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
  • குழந்தையை தொடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • அவர்கள் வழக்கமாக தொடும் இடங்களை சுத்தமாக கிருமி நீக்கம் செய்து  வைத்துக் கொள்ள  வேண்டும். 

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான தடுப்பு முறைகள் :

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றவர்களை போல் கொரோனா பாதிப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள வழிகள் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள  முடியும்.

  • அவ்வப்போது ஆல்கஹால் அடிப்படைக்கு கொண்ட ஹாண்ட் வாஷ் , அல்லது சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி  கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • மற்றவர்களிடம் இருந்து நீங்கள் சற்று விலகி இருப்பது நல்லது.
  • உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை  அடிக்கடி தொடாமல் இருப்பது நல்லது.
  • இருமும்போது அல்லது தும்மும்போது கைமூட்டு பகுதியில் வாயை மூடிக் கொள்வது அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது போன்ற  பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு டிஷ்யூ பேப்பரை உடனடியாக குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள்.
  • உங்களுக்கு காய்ச்சல், இருமல் , மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். மருத்துவரிடம் செல்வதற்கு முன் மருத்துவரிடம் தொலைபேசியில் பேசுங்கள் மற்றும்  உங்கள் இடத்தில்  உள்ள சுகாதார துறையினரின் அறிவிப்புகளை பின்பற்றுங்கள். 
  • கர்ப்பிணிப் பெண்கள் , சமீபத்தில் தாயான பெண்கள் , அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அவர்களுடைய வழக்கமான பரிசோதனையைப் பின்பற்ற  வேண்டும்.