கீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

பலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் நாம் நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

கீரையின் வகைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

கீரையில் பல சத்துக்கள் உள்ளது. நம் முன்னோர் நோய் வராமல் தங்களை பாதுகாக்க உணவையே மருந்தாக பயன்படுத்தினர். அதனால் தான்  அவர்களின் உணவில் கீரை முக்கியமான ஒன்று. நாமும் நம் முன்னோரின் உணவு பழக்கங்களை பின்பற்றி உணவு உட்கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. சில உணவுகள் நோய் வருவதற்கு முன்னர் தடுக்கும், சில உணவுகள் நோய் வந்த பிறகு குணப்படுத்தும், ஆனால் கீரை மட்டும்தான் நோய் வருவதற்கு முன்னரும், நோய் வந்த பின்னரும் நோயை குணமாக்கும் ஆற்றல் பெற்று இருக்கின்றது. இக்கட்டுரையில் சில கீரையின் தனித்துவத்தையும்,  மருத்துவ குணத்தையும் பற்றி பார்ப்போம். 

அகத்திக்கீரை:

 சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், மாவுச்சத்து, புரதம். 

பயன்கள்: நரம்புகளுக்கு நல்லது, குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யும், மலச்சிக்கலைப் போக்கும், சரும சம்பந்தப்பட்ட  அரிப்பு, சொறி, சிரங்கு போன்ற நோய்களை போக்கும், பல் மற்றும் எலும்பு வளர்ச்சி பெற உதவும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

அரைக்கீரை :

சத்துக்கள் : புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம். 

பயன்கள்: அரைக்கீரை நரம்பு தளர்ச்சியை போக்கும், ரத்தத்தை அதிகரிக்கும், கண்களுக்கு நல்லது, தாய்ப்பாலை  அதிகம் சுரக்கச் செய்யும். 

புளிச்சக்கீரை: 

சத்துக்கள் : வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம். பயன்கள்: வாதத்தைப் போக்கும், சரும பிரச்சனைகளான சொறி, சிரங்குகளை போக்கும், மலச்சிக்கலைப் போக்கும், பசியை தூண்டும். 

வெந்தயக்கீரை: 

சத்துக்கள்: புரதம், கால்சியம், இரும்பு சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ். 

பயன்கள்: மாதவிடாய் கோளாறுகளை நீக்கும், வாய்வு பிரச்சனையை குணமாகும், மூளைக்கு நல்லது, நல்ல செரிமானத்தை கொடுத்து சோம்பலை போக்கும், சரும பிரச்சனைகளை குணமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பசலைக்கீரை:

 சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ், புரதம், இரும்புச் சத்து, கால்சியம்.

பயன்கள்: நோய் தொற்றை போக்கும், வாய்ப் புண்களை குணமாக்கும், ரத்தத்தை அதிகரிக்கும், நீர்  சம்பந்தமான தொந்தரவுகளை போக்கும், மலக்கட்டை உடைக்கும், சரும பிரச்சனைகளை குணமாக்கும். 

முருங்கைக்கீரை:

சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்பு சத்துக்கள், நார்ச் சத்துக்கள். 

 பயன்கள்: தாய்ப்பால் அதிகமாக சுரக்க வைக்கும், மலச்சிக்கலைப் போக்கும், இளநரையைப் போக்கும், கண் பார்வைத் திறனை அதிகரிக்கும், முடி உதிர்தலை தடுக்கும், ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். 

முடக்கத்தான் கீரை:

 சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள். 

பயன்கள்: எலும்புகள் உறுதிபெறும், கை, கால் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும், மூட்டு வலியை போக்கும், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் சரி செய்யும். 

மணத்தக்காளிக் கீரை:

 சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ், தாது உப்புக்கள், பயன்கள்: கருப்பை பிரச்சனைகளை குணமாக்கும், உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும், கல்லீரலுக்கு நல்லது, தூக்கத்தை உண்டாக்கும், மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் புண்களையும், வாய்ப்புகளையும் சரி செய்யும். 

வல்லாரைக் கீரை:

 சத்துக்கள்: கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, தாது உப்புக்கள், பயன்கள்:  ஞாபக சக்தியை அதிகரிக்கும், குஷ்ட ரோகத்தை கட்டுப்படுத்தும், உடல் சோர்வை நீக்கும், ரத்தத்தை சுத்தம் செய்யும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யும், ஆட்டிசம் குழந்தைகளுக்கு இது நல்லது. 

சிறுகீரை:

 சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், தாது உப்புக்கள். பயன்கள்: சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், கல்லீரலுக்கு நல்லது, சருமத்தை பலபலவென்று மின்ன வைக்கும், உடம்பில் உள்ள பல நோய்களை போக்கும், உடல் வளர்ச்சிப் பெற உதவுகிறது. 

பொன்னாங்கண்ணிக் கீரை:

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு சத்து, தாது உப்புக்கள். 

பயன்கள்: கண்ணில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும், மாலைக்கண் நோயை குணமாக்கும், நரம்பு சம்பந்தமான பிரச்சனையையும் குணமாக்கும், எலும்பு வலிமை பெற செய்யும், முடியை நன்றாக வளர வைக்கும், சருமத்தை பலபலவென்று மின்ன வைக்கும். 

கொத்தமல்லி:

 சத்துக்கள்: வைட்டமின் பி1, பி2, சி, புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம்.

 பயன்கள்: அதிகமாக ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும், பித்தத்தை நீக்கும், சருமத்தை பொலிவடைய செய்யும், சிறுநீரகத்தை சுத்தம் செய்யும், ரத்தத்தை சுத்தம் செய்யும்,  ரத்த சோகையை குணப்படுத்தும். 

தூதுவளை:

 சத்துக்கள்: வைட்டமின் சி, இரும்பு சத்துகள், தாது உப்புக்கள்.

 பயன்கள்: சளியைப் போக்கும், இருமலை குணப்படுத்தும், நுரையீரலை சுத்தப்படுத்தும், நரம்பை வலுப்படுத்தும், தொண்டையில் சளியால் ஏற்படும் தொற்றுக்களை குணமாகும், தொண்டை வலியை சரி செய்யும்.

மேல் குறிப்பிட்டுள்ள கீரைகளை மட்டுமின்றி இன்னும் பலவகையான கீரைகளிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவில் கீரைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் நாம் நோயின்றி ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.