ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாம்பி வைரஸால் மனிதர்களுக்கு ஆபத்தா

புவி வெப்பமடைதலின் விளைவாக புதிய தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்கும் என்றும் அதனால் இந்த உலகமே பேர் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாம்பி  வைரஸால் மனிதர்களுக்கு ஆபத்தா

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸால் மனிதர்களுக்கு ஆபத்தா    

ரஷ்யாவில் உள்ள உறைந்த சைபீரியா ஏரியில் இருந்து

பிரெஞ்சு விஞ்ஞானிகள் 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸை கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி அனைவரையும் பீதியடைய வைத்திருக்கின்றது ஏன்னென்றால் இந்த வைரஸ்கள் பரவினால்  உலகம் முழுவதும் ஒரு தொற்றுநோய் உருவாகலாம் என்பதால் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா இந்த வைரஸ்கள்  

உலகம் வெப்பமடைதலின் விளைவாக சைபீரியா ஏரியில் உள்ள  (பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து) பனிக்கட்டிகள் உருகி வருகின்றது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் ஏரியின் அடிப்பகுதியில் 48,500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்றது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சி குழுக்கள், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள  பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சில வைரஸ் மாதிரிகளைப் பெற்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் விஞ்ஞானிகள் 13 புதிய நோய்க்கிருமிகளை புத்துயிர் அளித்து அடையாளம் கண்டுள்ளனர். அவைகளில் சில  'ஜாம்பி வைரஸ்கள்' என்று கண்டுபிடித்துள்ளனர். 

ஜாம்பி

ஜாம்பி தொற்றுநோய் 48,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகும். இது ஒரு விசித்திரக் கதை அல்ல விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வைரஸ் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மூளையின் செயல்பாட்டை இழக்க செய்து அதனுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. இந்த நோயால் பாதிக்கப்படும் உயிரினத்தின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருக்கும்.

ஆராய்ச்சியின் முடிவு

ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஆய்வு செய்த வைரஸ் அமீபா நுண்ணுயிரிகளை மட்டுமே தாக்கும் என்பதை தெரிவித்துள்ளனர். அவர்கள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் வைரஸ்களை ஆராயும் போது  புத்துயிர் கொடுப்பது இல்லை ஏனென்றால் அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், ஆனால் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் அந்த செயலற்ற வைரஸின் மீது எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் பனிக்கட்டிகள் (பெர்மாஃப்ரோஸ்ட்) உருகுவதால் விலங்குகள் அல்லது மனிதர்களை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் புத்துயிர் பெற்று சுற்றுச்சூழலில் வெளியிடப்படலாம், அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்த பனியில் வாழ்ந்தாலும், அதன் தன்மை அப்படியே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்களின் கூற்று. ஆனால் புதைந்து கிடக்கும் வைரஸின் தாக்கம் பற்றிய தகவல்கள் சரியாக தெரியவில்லை. அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த தகவல் மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கின்றது. 

வைரஸ் எவ்வளவு விரைவில் தொற்றுநோயாக மாறும், அதை எவ்வாறு தடுப்பது மற்றும் ஒருவர் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதை இப்போது துல்லியமாகக்  கணிக்க முடியாது. ஆனால் புவி வெப்பமடைதலின் விளைவாக புதிய தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்கும் என்றும் அதனால் இந்த உலகமே பேர் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு தீர்வாக புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியான சூரிய சக்தி, காற்று சக்தி பயன்படுத்துவது, மரங்களை வளர்த்தல், நெகிழியை தவிர்த்தல் போன்றவை மூலம் உலக வெப்பமயமாதலை குறைப்பதோடு, பேர் அழிவிலிருந்தும் உலகத்தை காப்பாற்றும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.