திருமணப் பொருத்தம்

காலம் காலமாக இந்த திருமண பந்தம் தொடரும் என்பதால் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்

காலம் காலமாக இந்த திருமண பந்தம் தொடரும் என்பதால் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். இப்போது அந்த திருமண பொருத்தங்கள் என்னவென்பதை பற்றி பார்ப்போம். 

10 திருமண பொருத்தம்:

தினப் பொருத்தம்:  

இந்த பொருத்தம் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் விருத்தியடையும். பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆணுடைய நட்சத்திரம் 2,4,6,8,9, 11, 13,15, 18, 20, 24,26 ஆக இருந்தால்  நல்ல பலனை தரும். அதுவே 3,5,7,12,14,16,21,23,25 ஆக இருந்தால் கெட்ட பலனை தரும். ஒரே ராசியாக இருக்கலாம், ஆனால் ஒரே நட்சத்திரமாக இருக்கக் கூடாது, ஒருவேளை நட்சத்திர பாதம் மாறி இருந்தால் உத்தமம். 

கணப் பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் மங்கலம் உண்டாகும். கணங்கள் முன்று  வகையாக பிரிக்கப்படுகிறது. அவை தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கணங்களை குறிக்கும். 

பெண் மற்றும் ஆண் ஒரே

கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட பெண் எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த பெண் மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக மாட்டார்.

மகேந்திர பொருத்தம்: இந்த பொருத்தம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக இருந்தால் பொருத்தம் இருக்கும், மற்ற எண்ணில் உள்ள நட்சத்திரங்கள் பொருந்தாது.

ஸ்த்ரீ தீர்க்கம்:

இந்த பொருத்தம் இருந்தால் சகல சம்பத்தும் கிடைக்கும். திருமணத்திற்கு பின் பெண்ணின் ஆயுட்காலம் மற்றும் ஆரோக்கியம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை தீர்மானிக்கும் பொருத்தம். பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் பெண்ணிற்கு தீர்க்க பொருத்தம் உண்டு. இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின் மிக மிக தீர்க்க பொருத்தம் உண்டு.

யோனி பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே தாம்பத்தியம் ருசிக்கும், ஒற்றுமை மேம்படும். ஆண் மற்றும் பெண் பகை மிருகங்களாக இருந்தால் யோனி பொருத்தமில்லை, மற்றவை ஒன்றுக்கொன்று இணைந்தால் யோனி பொருத்தம் உண்டு.

ராசி பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் வம்ச விருத்தி அடையும். பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 1,2,3,4,5,6 மற்றும் 8 ஆக இருந்தால் பொருத்தம் இல்லை. பெண் ராசியில் இருந்து ஆண் ராசி 7,8,9,10,11,12 ஆக இருந்தால்  பொருத்தம் உண்டு. 

ராசி அதிபதி பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் வம்சம் விருத்தியாகும். கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமம் மற்றும் பகை என்னும் நிலையில் இருப்பார்கள். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதியாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் ராசி அதிபதி ஆணின் ராசி அதிபதியுடன் நட்பாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் பொருத்தம் இருக்கும், பகையாக இருந்தால் பொருத்தம் இருக்காது.

வசிய பொருத்தம்: 

இந்த பொருத்தம் இருந்தால் கணவன் மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

எந்த ராசிகள் இனணந்தால் வசிய பொருத்தம் இருக்கும்: 

மேஷம்- சிம்மம், விருச்சிகம்

ரிஷபம்- கடகம், துலாம்

மிதுனம்- கன்னி, சிம்மம்

கடகம் - விருச்சகம்,  தனுசு

சிம்மம் - மகரம், துலாம்

கன்னி-  ரிஷபம், மீனம்

துலாம்- கன்னி, மகரம்

விருச்சகம் - கடகம், கன்னி

தனுசு - மிதுனம்,சிம்மம்

மகரம் - மேஷம், கும்பம்

கும்பம் - மேஷம், மீனம்

மீனம் - மகரம், கன்னி

இந்த ராசிகள்  இணைந்தால்  வசிய பொருத்தம் இருக்கும்.

ரஜ்ஜூ பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் பெண்ணுக்கு தீர்க்கசுமங்கலி பாக்கியம் உண்டாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ரஜ்ஜூவாக இல்லாமல் இருந்தால் பொருத்தம் இருக்கும். 10 பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தமே மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

வேதை பொருத்தம்:

இந்த பொருத்தம் இருந்தால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வராமல் இருக்கும். இல்லை என்றால் சிறிது காலம் கூட மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள்.

இந்த 10 பொருத்தமும் இருந்தால் திருமண வாழ்க்கை மிக  சிறப்பாக அமையும். 10 திருமண பொருத்தத்தில் 6க்கு மேல் இருந்தால் திருமணம் செய்யலாம், ஆனால் இந்த 6 பொருத்தத்தில் மிக முக்கியமாக 5 பொருத்தங்கள் இருக்க வேண்டும். இந்த பொருத்தங்கள் இருந்தால் இருமணங்கள் இணையும், இருமணங்கள் இணைவது தான்  திருமணம்.