வேலையில் முழு கவனத்தை செலுத்த எளிய 5 வழிகள்

இன்றைய நாட்களில் பிசினஸ் என்பது  பிசியாக இருப்பது என்று பொருள் படுகிறது. நாள் முழுதும் மீட்டிங் , மீட்டிங் , மீட்டிங் தான்.  மீட்டிங் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய மீட்டிங் , மற்ற அழைப்புகள், விளக்கங்கள் போன்றவை நாள் முழுதும் வழக்கமாக உள்ளன.

வேலையில் முழு கவனத்தை செலுத்த எளிய 5 வழிகள்


பிசினஸ்-ல் மூச்சு விட நேரம் கிடைப்பதும் அபூர்வமான விஷயம் தான். ஒரு வித தன்னியக்க தன்மையுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணருவதே இல்லை என்று கூறலாம். இந்த செயல்கள் நாம் விரும்பும் இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். 

ஆனால் இது முற்றிலும் தவறான எண்ணம் என்று மனோதத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. அப்படி என்றால்  நாம் என்ன செய்ய வேண்டும்? எதையும் ஆத்மார்த்தமாக பார்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதனை செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை. நமது அன்றாட பணியில் சில மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள விரும்ப வேண்டும். அதுவே போதும். 

உங்கள் நாளை தொடங்குவதற்கு முன், சற்று நேரம் அமைதியாக இருக்கவும்:
மற்றொரு கடினமான நாள் உங்கள் கண் முன்னே நிற்கிறது. இதற்காக நீங்கள் ஒரு நிமிடம் அமைதி காத்து உங்களை சுற்றியுள்ள விஷயங்களை உற்று நோக்கக் கூடாது என்ற அவசியம் இல்லை. நீங்கள் இதுவரை கவனிக்காமல் விட்ட விஷயங்களை பார்க்கவும் கேட்கவும் தொடங்குங்கள் . இதனை செய்ய தொடங்கிய சில நாட்களுக்கு, இதனால் எந்த ஒரு மாற்றமும் இல்லாதது போல் தோற்றமளிக்கும். ஆனால் இந்த பழக்கத்தை தொடர சொல்வதற்கு காரணம், உங்கள் பழைய அன்றாட பணியில் இருந்து வெளிவந்து, புதிய விஷயங்களுக்கு இடம் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வருவதற்காகத்தான். இதனால் சில நல்ல ஆக்கபூர்வமான பழக்கங்கள் ஏற்படும். 

உங்கள் உடலின் மாற்றங்களை உணருங்கள் :
நீங்கள் அலுவலகத்தில் ஒரு எதிர்மறை சந்தர்ப்பத்தை எதிர்கொள்ளும்போது, உதாரணத்திற்கு, உங்கள் வேலையை பற்றிய ஒரு மோசமான விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது, உங்கள் உடல் எப்படி அந்த நிலையை எதிர் கொள்கிறது என்பதை உற்று நோக்குங்கள். அதே நேரம், உங்கள் வேலையை உங்கள் முதலாளி பாராட்டும்போது, உங்கள் உடலில் உண்டாகும் மாற்றத்தை  கவனிக்க தயாராகுங்கள். இதனை கவனிக்க தொடங்குவதால், வெவ்வேறு சூழல்களில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் அன்றாட அலுவல்களில் மாற்றத்தை கொண்டு வரலாம். ஒரு பரபரப்பான விமர்சங்கள் கொண்ட மீட்டிங்கிற்கு பிறகு, ஒரு சிறிய நட பயிற்சி, அல்லது ஒரு சூடான டீ  எடுத்து , அல்லது வேறு  எதாவது வழியில் உங்கள் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்து, பின் அடுத்த வேலையில் ஈடுபடலாம். 

உங்களுடன் வேலை பார்ப்பவர்களை புரிந்து கொள்ளுங்கள், அவர்களை எடை போட வேண்டாம்.
ஒரு தொழில் முறை அமைப்பில், சக தொழிலாளர்களுடன் இணைந்து வேலை பார்க்கும் சூழ்நிலையில், அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஒரு மிகவும் கடினமான வேலையாகும். அதே சமயம் அவர்களை மிக எளிதில் எடை போட முடியும்.சில நேரங்களில் உங்கள் சக தொழிலாளரிடம் இருந்து வெளிப்பட்ட சில யோசனைகளை அவர்களின் உற்சாகத்தின் வெளிப்பாடு என்றும் தவறாக எண்ணி, அவர்களில் உண்மையான ஈடுபாட்டை அவர்களை பற்றிய தவறான புரிதலால் புறக்கணித்திருக்கலாம். 

விமர்சன சிந்தனை மற்றும் ஆரோக்கியமான விவாதம் போன்றவை சக தொழிலாளர்களுடன் இருப்பது மிகவும் தேவையான ஒரு விஷயமாகும். ஆனால் அதே சமயம், இந்த விவாதங்கள் மற்றும் சிந்தனையை வைத்துக் கொண்டு உங்கள் சக  தொழிலாளர் பற்றிய ஒரு தீர்மானத்திற்கு நீங்கள் வர வேண்டாம். அவர்களை பற்றி தீர்மானிப்பது உங்கள் வேலை இல்லை.

உங்கள் குறைகளை கொண்டு உங்களை எடை போடாதீர்கள் :
சுய மதிப்பீடு என்பது முக்கியம் தான், ஆனால் பிரச்சனை  என்ன வென்றால், நம்மில் பலர், தவறுகள் நடக்கும் போது சுய மதிப்பீடு செய்து கொள்வர். இப்படி தோல்வியுறும் போது சுய மதிப்பீடு செய்வதால், நம்மை பற்றி நமக்கே ஒரு சந்தேகம் தோன்றுகிறது, இதனால், வாழ்வில் ஒரு அழுத்தம் உண்டாகிறது. வாழ்க்கையில் வளர்ச்சி அடைவது பற்றியும், இத்தனை நாள் நீங்கள் சாதித்தது பற்றியும், நீங்கள் செய்த நல்ல செயல்களை பற்றியும் நீங்கள் யோசிக்கும்போது, உங்களுக்கு ஒரு சம சீரான எண்ணம் மனதில் தோன்றும். நீங்கள் இதுவரை கடந்து வந்த பாதையை பற்றிய ஒரு நேர்மறை எண்ணம் தோன்றும்., அந்த பாதையில்  நீங்கள் கடந்து வந்த சிறு சிறு தோல்வியை தாண்டி இவ்வளவு தூரம் வந்திருப்பது மனதிற்கு ஒரு வித தெம்பை தரும். 

எதிர்கால வெற்றியை கற்பனை செய்து பாருங்கள் :
உங்களிடம் இருந்து மிக சிறந்தவற்றை வெளிப்படுத்தும் விதத்தை கற்பனை செய்து பாருங்கள். இது ஒரு மிகப்பெரிய வெற்றியை தராது, ஆனால் இதனை தொடர்ந்து செய்யும் போது, நமது எதிர்காலத்தில் நேர்மறை வெற்றியை பெற உதவும் சாவியாக இந்த கற்பனை செயல்படுகிறது. விளைவு எதுவாக இருந்தாலும் நேர்மறை  எண்ணத்தோடு இருக்க இந்த முயற்சி உதவுகிறது. எல்லாவிதமான கருத்துகளையும் அதனால் கிடக்கும் சாதனைகளையும் ஏற்றிக்கொள்ள முடிகிறது. அதே நேரம், எதாவது தோல்வி ஏற்படும்போது அதனையும் எளிதாக கடந்து செல்ல முடியும் .