எய்ட்ஸ் பற்றிய கட்டுகதைகளும், அதற்கான விளக்கங்களும்!

அறிவியல் வளர்ந்து வரும் இந்த காலங்களிலும், அறியாமையும் ஒருபக்கம் இருக்கிறது.வரும் டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுவதை ஓட்டி,இந்த நோயை பற்றி பரப்பப்டும் பொதுவான வதந்திகளை பற்றி இங்கே பார்ப்போம்.

எய்ட்ஸ் பற்றிய கட்டுகதைகளும், அதற்கான விளக்கங்களும்!

நம்மூரில் யாராவது ஒருவருக்கு எச்.ஐ.வி (ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸ்) மற்றும் எய்ட்ஸ் (அக்யூர்ட் இம்யூனோ டிஃப்சியன்சி ஸிண்ட்ரோம்) நோய்கள் இருப்பது தெரிந்தால், இந்த சமூகம் அவரை நடத்தும் விதம் கொடூரமானதாக இருக்கிறது. எச்.ஐ.வி உள்ள எவருக்கும் வாழ்க்கை இல்லை என முற்றுப்புள்ளி குத்திவிடுகின்றனர். இதனால் மக்கள்  இந்த நோயைப் பற்றிய தவறான புரிதல்களால், பல வதந்திகளை நம்ப தொடங்கிவிடுகின்றனர். சரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம், எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுவதை கட்டுபடுத்த முடியும். 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட UNAIDS ஆராய்ச்சியின் படி, புதிய எச்.ஐ.வி நோய்கள் 46% குறைந்துள்ளன, எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இந்தியாவில் 2010 ம் ஆண்டு முதல் 22% குறைந்துள்ளன. வரும் டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.அதையொட்டி, எய்ட்ஸ் பற்றி பொதுவாகக் பரப்பப்படும் சில கட்டுக்கதைகளின் உண்மைநிலையை பற்றி பார்ப்போம்.

 

 

 

கட்டுக்கதை 1:

 

எச்.ஐ.வி பாதித்த நபர்களுடன் இருந்தால் ஆபத்தா?

 

 

எச்.ஐ.வி பற்றி மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால், தொடுதல், வியர்வை அல்லது உமிழ்நீர் வழியாக இது பரவும் என்பது தான். 

 

கீழே கூறிப்பிடப்பட்ட எந்த வழியிலும் எச்.ஐ.வி பரவாது என்று ஆராய்ச்சி கூறுகிறது: 

 

 

எச்.ஐ.வி பாதித்த நபர் தங்கியிருக்கும்பகுதியில் தங்குவது

 

எச்.ஐ.வி பாதித்த நபர் தொட்ட எந்த பொருளையும் தொடுவது

 

ஒரே தண்ணீர்  பாட்டிலில் குடிப்பது

 

எச்.ஐ.வி பாதித்த நபருடன் கை குலுக்குவது அல்லது கட்டிப்பிடிப்பது

 

 

அவர்களுடன் ஒரே பாத்திரங்களைப் பகிர்வது

 

 

கட்டுக்கதை 2: ஒருவரை பார்த்தே அவருக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம்

 

ஒரு நபரை  வெறுமனே பாரத்து அவருக்கு எச்.ஐ.வி + அல்லது எய்ட்ஸ் உள்ளதா என்பதைப் சொல்ல முடியாது. எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ்க்கான அறிகுறிகள் பல ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் கூட போகலாம், ஏனெனில் இந்த அறிகுறிகள் பொதுவான பல நோய்கள் போலவே இருக்கிறது. ஒருவருக்கு எச்.ஐ.வி இருக்கிறதா என்பதை அறிய ஒரே வழி பரிசோதனையை மேற்கொள்வது தான். 

 

கட்டுக்கதை 3: எச்.ஐ.வி பாதித்த மக்கள் பாதுகாப்பாக குழந்தைகளைப் பெற முடியாது 

 

 

எச்.ஐ.வி கண்டறியப்பட்ட ஒரு பெண், குழந்தைகள் பெற்று கொள்ளலாம். குழந்தைக்கு இந்த வைரஸ் பரவும் அபாயங்கள் இருக்கின்றன, ஆனாலும் சரியான சிகிச்சையைத் தொடங்கினால், குழந்தைக்கு தாயிடமிருந்து எச்.ஐ.வி வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். எச்.ஐ.வி பாதித்த தாய் தனது கர்ப்பம் முழுவதும் மற்றும் குழந்தை பிறப்புக்கு பிறகும் 4-6 வாரங்கள் வரை தொடர்ந்து  மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலம், குழந்தைக்கு  எச்.ஐ.வி வரும் அபாயத்தை குறைக்க முடியும். 

 

 

கட்டுக்கதை 4: எச்.ஐ.வி யும் எய்ட்ஸும் ஒன்று 

 

 

எச்.ஐ.வி என்பது ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸையும், எய்ட்ஸ் என்பது அக்யூர்ட் இம்யூனோ டிஃப்சியன்சி ஸிண்ட்ரோம் நோயையும் குறிக்கிறது. எச்.ஐ.வி வைரஸ் தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம் என்றாலும், இரண்டுமே ஒன்று தான் என்று அர்த்தமல்ல. எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார். இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மோசமடைய செய்துவிடும். முன்கூட்டியே கண்டறிவதன் மூலமும் மற்றும் உரிய மருந்துகள் மூலமும், எய்ட்ஸ் அபாயத்தை குறைக்க முடியும்.