வாழ்வில் மாற்றங்கள் வேண்டுமா?

20 முதல் 34 வயது தான், உலகத்தை அனுபவபூர்வமாக பார்க்க தொடங்கும் வயது. இந்த வயதில் ஏற்படும் பழக்க வழக்கங்கள் தான் வாழ்வின் இறுதி வரை நம்மை வழிநடத்தும். அப்படிப்பட்ட நல்ல பழக்க வழக்கங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

வாழ்வில் மாற்றங்கள் வேண்டுமா?

குறுக்குவழிகள் வேண்டாமே:

எதையும் யோசிக்காமல், உங்கள் வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். உங்கள் இலட்சியத்தை அடைய, எப்போதும் உங்களின்

ஆழ்மனம் தயாராகவே இருக்கும். அதனால் குறுக்குவழிகள் பற்றி சிந்திக்கவே வேண்டாம்.

கற்றல்:

கல்விக்கு மட்டும் முடிவேயில்லை. எனவே எந்த வயதாக இருந்தாலும், கற்றுக்கொள்ள போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.

சாக்குப்போக்கு வேண்டாம்:

உங்களுக்கு நீங்களே சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்தி பாருங்கள்.வியக்கத்தக்க மாற்றங்கள் வரும்.

உங்கள் அச்சங்களை எதிர்கொள்ளுங்கள் :

நீங்கள் இதுவரை எதிர்கொள்ளாததை நினைத்து மட்டும் தான் பயப்படுவீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் பயங்களை என்னவென்று அடையாளம் கண்டு தெரிந்து கொள்ளுங்கள். பின் அவற்றை எதிர்கொள்ளுங்கள். அப்போது தான் பயம் ஒரு

மாயை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

சவால்கள்:

உங்களால் சமாளிக்க கூடிய சிறிய சிறிய சவால்களை எடுத்து கொள்ளுங்கள். இப்படி செய்து பார்க்கும் போது, முதலில் எல்லாம் தவறாக போவது போல் இருக்கும்.ஆனால் நீங்கள் கற்றுக் கொள்ளவும், வளரவும் இது தான் வழி.

நிகழ்காலம்:

கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு பார்த்து வருந்துவது , யோசிப்பது என எல்லாமே தவறு தான். கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் எப்போதும் மனித மனம் தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேஇருக்கிறது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் வையுங்கள்.

ஏற்றுக்கொள்ளுதல்:

நம்மால் ஒரு விஷயத்தை மாற்ற முடியாவிட்டால், அதை ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

விரும்பியதைச் செய்யுங்கள்:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை சரி என்று சொல்வார்கள், இதனால் குழம்ப வேண்டாம். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்.