சிறந்த ஐந்து குழந்தை நட்சத்திர படங்களின் லிஸ்ட் இதோ!

வரும் நவம்பர் 14, குழந்தைகள் தினம் வருவதையொட்டி, சிறந்த குழந்தை நட்சத்திர படங்களின் லிஸ்ட் இங்கே தந்துள்ளோம். படித்து என்ஜாய் பண்ணுங்க!

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, குழந்தைகள் தினமாகக் எல்லாராலும் கொண்டாடப்படுகிறதுஇந்த நேரத்தில்குழந்தை பருவத்தின் பல்வேறு அழகையும்அதன் அப்பாவித்தனத்தையும்,அதிலுள்ள இன்னல்களையும் ஆராயும் சிறந்த ஐந்து படங்கள் இங்கே தரப்பட்டுள்ளனகுடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற இந்த படங்களை குழந்தைகள் தினத்தில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க. 

 

பாலராஜு கதை (1970) (தெலுங்கு) :

சத்திராஜு "பாபுலட்சுமிநாராயணா இயக்கிய இந்த கிளாசிக் தெலுங்கு படம்சிறந்த படத்திற்கான மதிப்புமிக்க நந்தி விருதைப் வென்றுள்ளதுஇது பாலராஜு (மாஸ்டர் பிரபாகர்என்ற சிறுவனின் கதையைச் சொல்கிறதுபடத்தின் கதை என்னவென்றால் பாலராஜுதனது குடும்பத்தின் வறுமையை போக்க சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்கிறான்இந்த சூழ்நிலையில் குழந்தை இல்லாத தம்பதிகள் பாலராஜுவை தத்தெடுக்க விரும்புகிறார்கள்பின் என்ன நடந்தது என்பதை படத்தில் அழகாக காட்டியுள்ளார்கள்.

 

மை டியர் குட்டிச்சாத்தான் (1984) (மலையாளம்):

 

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 3டி படம் இதுவாகும்ஜிஜோ புன்னூஸ் இயக்கிய இந்தத் திரைப்படத்தில்குட்டிச்சாத்தன் என்ற கண்ணுக்குத் தெரியாத ஆவிதான் முக்கிய கதாபாத்திரம்படத்தில் இந்த குட்டிச்சாத்தான்,ஒரு மந்திரவாதியால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கும் . பின் மூன்று குழந்தைகளுடன் இந்த குட்டிச்சாத்தானுக்கு நட்பு ஏற்படுகிறது.இதை சுற்றி கதை நகர்கிறது.சோட்டா சேத்தன் (1997) என்ற ஹிந்தித் திரைப்படம் இந்தப் படத்தின் ரீமேக் ஆகும்.

 

 

பேட்டடா ஹூவு (1985) (கன்னடம்) :

இந்த படத்தில் ராமு (புனீத் ராஜ்குமார்வறுமையான நிலையில் இருக்கும் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காகதனது புத்தகத்தின் மீதான காதலையும்கல்வியின் மீதான ஆசையையும் தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்ஷர்லி எல்அரோரா எழுதிய “வாட் தென்ராமன் “ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை என்.லட்சுமிநாராயணன் இயக்கியுள்ளார்சமீபத்தில் மறைந்த ராஜ்குமார்மொத்தம் இரண்டு தேசிய விருதுகளை இப்படத்தில் நடித்ததற்காக பெற்றார். 

 

 

மினி (1995) (மலையாளம்) :

 

பி.சந்திரகுமார் இயக்கிய மினி திரைப்படம் குடும்ப நலன் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றதுகுடிப்பழக்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சனைகளை இப்படம் எதார்த்தமாக கூறுகிறதுபடத்தில் 10 வயது சிறுமி ஒருத்தி (ஆரத்தி ஞானஷ்யம்தினமும் குடித்துவிட்டு தன் தாயை அடிக்கும் அப்பாவை மாற்ற ஒரு முடிவு எடுக்கிறாள்இதை சுற்றி கதை அருமையாக நகர்கிறது.

 

காக்கா முட்டை (2015) (தமிழ்) :

 

எம்.மணிகண்டன் இயக்கிய தேசிய விருது பெற்ற இப்படம்பீட்சாவை ருசிக்க ஆசைப்படும் இரண்டு ஏழை சிறுவர்களின் (ஜேவிக்னேஷ்விரமேஷ்கதையைச் சொல்கிறதுஇந்த சராசரி ஆசையால்அவர்கள் வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் பற்றி படம் அழகாக சொல்கிறது.