சுமேரிய திருமணத்திற்கும் இந்து திருமணத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமை

அண்மைக் கிழக்கு நாடுகளில் நடக்கும் திருமணத்திற்கும் இந்து மத திருமணத்திற்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பதாக அறியப்படுகின்றன. அண்மைக் கிழக்கு நாடுகள் என்பது, சுமேரியா, பாபிலோனியா, மெசபடோமியா நாகரீகங்களைத் தழுவியதாகும். 

சுமேரிய திருமணத்திற்கும் இந்து திருமணத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமை

அண்மைக் கிழக்கு கலாச்சாரத்தை அறிந்து கொள்ள, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தால் வெளியிடப்பட்ட பண்டைய அண்மைக் கிழக்கு பற்றிய அகராதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விமர்சனங்கள் தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

1. திருமணம் தந்தையால் நிச்சயிக்கப்படுகிறது, தந்தை இல்லை என்றால், உறவினர்கள் நிச்சயம் செய்கிறார்கள்:

இந்து மத திருமணங்களில், தந்தை தான் திருமண பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி முடிவு செய்வார். ஒரு பெண்ணின் தகப்பன் மட்டுமே மாப்பிள்ளையிடம் தாரை வார்த்து கொடுக்கும் சடங்கு இந்து மத திருமணத்தில் உள்ளது. இந்து பிராமண திருமணத்தில் மணப்பெண்ணை அவளின் தந்தை  தன் மடியில் அமர்த்தி அவருடைய மாப்பிளைக்கு தனது மகளை கன்யா தானம் செய்து கொடுப்பார்.

2. பதின் பருவத்தில் பெண்ணுக்கு திருமணம் நடைபெறும், ஆணுக்கு பெண்ணை விட 10 வயது அதிகம் இருக்கும் :

இந்து மத திருமணத்தில், பெண்கள் பூப்பெய்தவுடன் திருமணம் நிச்சய்க்கப்படும். பெண்ணுக்கு நிச்சயிக்கப்படும் ஆணுக்கு பெண்ணை விட 10-15 வயது அதிகமாக இருக்கும். ஆனால் இன்றைய நாட்களில் அனைத்தும் மாறிவிட்டது.

3. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதி கடைபிடிக்கப்பட்டது. ஒருவேளை முதல் மனைவிக்கு குழந்தை இல்லாவிட்டால், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்:

மனு தர்மமும் , இதர இந்து  நீதி நூல்களும் இரண்டாவது மனைவி பற்றி இதே கருத்தை கூறுகின்றன.

4. திருமணத்தில் ஒப்பந்தம் முதன் திருமணம் வரை பல கட்ட சம்பிரதாயங்கள் உள்ளன:

இந்து மத திருமணத்திலும் பல கட்டங்கள் உள்ளன. முதலில் நிச்சயதார்த்தம் நடைபெறும். இதில் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, திருமண நாள் நிச்சயம் செய்யப்படும். இதில் நிச்சயம் செய்த நாளிலிருந்து திருமண நாளுக்கு ஆறு மாதம் முதல் ஒரு வருட இடைவெளி இருக்கும்.


5. திருமண சட்டங்கள் உண்டு. பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்கப்பட்டது   :

பெற்றோரின் தகுதிக்கேற்ப மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கும் முறை இந்து திருமணத்தில் இருந்து வந்தது. பிற்காலத்தில் பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணை ஆணுக்கு கொடுக்க வேண்டிய நிலையாக மாற்றம் பெற்றுவிட்டது. பண்டைய தமிழ் மற்றும் சமஸ்க்ருத நூல்கள் மணப்பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்கும் முறை இருந்ததை கூறுகின்றன.

6. திருமண விழா, ஐந்து முதல் ஏழு நாட்கள் நடைபெறும்:

இந்து மத திருமணங்கள் 5 நாட்கள் நடைபெறும். அதிலிருந்து அடுத்த ஒரு வருட காலம், புது மனத் தம்பதியருக்கு பல்வேறு விழாக்களும், கொண்டாட்டங்களும் இருக்கும். 

7. கணவனுக்கு முன்  மனைவி இறக்க நேர்ந்தால், அவளுடைய வரதட்சனைப் பொருட்கள் குழந்தைகளுக்கு போய்ச்சேரும்:

இந்து குடும்பங்களில் கணவன் சொத்துகளைக் காப்பவனாக இருப்பான். ஆனால் அவனுக்குப் பின் அவன் குழந்தைகளையே போய்ச்சேரும்.

8. திருமணம் பற்றிய இதர சடங்குகள் பற்றிய விளக்கங்கள் விரிவாக இல்லை என்றாலும், மணப்பெண்ணின் முக்காடை மணமகன் மட்டுமே எடுத்து விடுவார்.

மணப்பெண்ணின் முகத்தை மறைக்கும் முக்காடு அணிவது அல்லது மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையில் திரை போட்டு மறைப்பது இந்து திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு முறையாகும்.
  
9. மணமகளின் தோழியர், அவளின் கற்பிற்கு பொறுப்பாளியாக இருந்தனர்:

இந்து திருமணத்தில், . மணமகளை முதலிரவு அறைக்கு அனுப்பி வைப்பது மணமகளின் தோழிகள். மறுநாள் காலை அவர்களின் அறைக் கதவைத் திறந்து விடுவது அவர்கள் தான். முதலிரவிற்கு பின் மணமக்களின் ஆடைகளை நாவிதருக்கு கொடுப்பது வழக்கம். பழங்காலத்தில் நாவிதர்கள் மருத்துவமும் பார்த்து வந்தனர். அவர்களின் மனைவியர்கள் பிரசவம் பார்த்து வந்தனர்.

10. நூல்கள், பொதுவாக நூசி நூல்கள், கருவுறுதல் மற்றும் மனஅழுத்தம் பற்றி குறிப்பிடுகின்றன. அவற்றுள், திருமணத்தின் முக்கிய நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 

இதனை இந்து நூல்களும் உறுதிபடுத்துகின்றன. ரகு வம்சத்தின் சிறந்த குணங்களைக் காளிதாசர் குறிப்பிடுகிறார். மேலும் அவர், ரகு வம்சத்து அரசர்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே திருமணம் செய்ததாக கூறுகிறார்.

11. ஹம்ரூபியில் உள்ள ஒரு விதியில், ஒரு மனைவி தன் கணவனுக்கு, தனக்கு பதிலாக ஒரு பெண் அடிமையை வழங்கலாம் என்று கூறுகிறது.

இந்து மதத்தில் இவ்வாறு கூறப்படுவதில்லை.  ஆனால் மனைவி தன் கணவனின் நெருங்கிய உறவுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம் . அம்பா மற்றும் அம்பாலிகாவிற்கு திருதராஷ்டிரர் மற்றும் பாண்டு பிறக்க வியாசர் உதவினார். 

12. நூசி நூல்களில் உள்ள ஆவணங்கள் கூறுவது, ஒரு பெண் தன் தந்தை வீட்டில் கணவனுடன் வசிக்கும்போது, கணவன் இறக்க நேர்ந்தால், அவளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், அந்தப் பெண்ணின் மாமனார், தனது மகன்களில் ஒருவருக்கு இவரை மறுமணம் செய்து வைக்கலாம் என்று கூறுகிறது.

இந்து மதத்தில் விதவைத் திருமணம் இடம்பெறவில்லை. ஆனால், மனைவி இறந்தால், குறிப்பாக அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால், கணவன் மறுமணம் செய்து கொள்ள முடியும். மனைவியின் சகோதரியை அவர் திருமணம் செய்து கொள்ளலாம்.


இந்து மதத்தில், மனைவி தனது தாய் வீட்டை நீங்கி, கணவனுடன் அவர் குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும்.

14. உகாரித் நகர மன்னன் அர்ஹல்பா , தனது மாணவி தன் சகோதரனைத் தவிர வேறு யாரையும் மணமுடிக்கக் கூடாது என்று விரும்பினான். 
ஹிடிட் சட்டம், திருமணம் செய்து கொள்ளாமல், ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழலாம் என்று கூறுகிறது. இரண்டு அல்லது நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவுடன் அவர்கள் உறவு சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இந்த முறை இந்து மத திருமண சட்டத்தில் இல்லை.
 
15. அண்மைக் கிழக்கு சட்ட நூல்களில், விவாகரத்து, சொத்து பிரிப்பு ஆகியவை இடம்பெறுகின்றன.

இந்து மத நீதி நூல்களில், குறிப்பாக மனுஸ்மிரிதி ஆகியவை சொத்து பிரிப்பு குறித்து விளக்குகின்றன.

மேலே கூறியவற்றுள் வேற்றுமைகளை விட ஒற்றுமைகள் அதிகமாக உள்ளன. 

"தலாக் தலாக்" போன்ற விரைவான விவாகரத்து எதுவுமில்லை என்பது பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது  மற்றும் முஸ்லீம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியைக் கொண்ட பலதாரமணம் இந்த கலாச்சாரத்தில் இல்லை.