குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் ?

குளிர்கால சரும பராமரிப்புகளை பற்றி அறிய இங்கே படியுங்கள் ‌.

குளிர்காலத்தில்  சருமத்தை எப்படி பராமரிக்கலாம் ?

குளிர்காலத்தில் எப்படி ஜலதோஷம், காய்ச்சல் சாதரணமாக ஏற்படுகிறதோ, அதே மாதிரி சரும பிரச்சினைகளும் சாதரணமாக ஏற்படுகிறது . முறையான சரும பராமரிப்பு மூலம் இந்த பிரச்சினையை குறைக்க முடியும். .

வறண்ட சருமம், அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகளை, குளிர்காலத்தில் எல்லோரும் எதிர் கொள்கிறார்கள். சருமம் மிகவும் வறண்டு போவதைத் தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

க்ளென்சர்கள்:

சோப்பு பயன்படுத்துவதை விட க்ளென்சர்களைப் சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் தோலில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் பசையை இது பறிக்காது. மற்றும் தோலுக்கு மென்மையை கொடுக்கும். ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதை விட இது நல்லது. சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷில் இருக்கும் இரசாயனங்கள் குளிர்காலத்தில் சருமத்தை மேலும் வறட்சியடைய செய்யும்.எனவே அவற்றை குளிர் காலத்தில் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள்.

மாய்ஸ்சரைசர்:

குளிர்காலத்தில் மாய்ஸ்சரைசரின் பங்கு தவிர்க்கப்பட முடியாதது. இந்த பருவத்தில், லோஷன்கள் பயன்படுத்துவதை விட கிரீம்கள் பயன்படுத்துவது சிறந்தது. எண்ணெய்கள் பயன்படுத்துவதை அதிகமாக்கி கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை குளிப்பதற்கு முன் சருமத்தில் எண்ணெய் தடவி வந்தால் சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் சருமத்தை மென்மையாக வைக்கவும் இது உதவும். தேங்காய் எண்ணெய், அல்லது எள் எண்ணெய் போன்றவைகளை இதற்கு பயன்படுத்தலாம். குளித்த பின் சருமம் சிறிது ஈரமாக இருக்கும் போது மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். இதனால் சருமம் வறண்டு போகாமல் பொலிவாக இருக்கும். மாய்ஸ்சரைசர் தேர்ந்தெடுக்கும் போது பெட்ரோலியம்/கிரீம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

நீண்ட நேரம் குளிக்க கூடாது:

மணிக்கணக்கில் ஷவரில் நின்று குளிக்கும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். நீண்ட நேரம் குளித்தால் சருமம் கடினமானதாகவும், வறட்சி அடைந்ததாகவும் மாறிவிடும்.

சரும பராமரிப்பு என்பது உங்கள் முகத்தோடு மற்றும் முடிவடையாது. உங்கள் பாதங்கள், கைகள் மற்றும் உதடுகளுக்கும் பராமரிப்பு தேவை. பாதங்கள் மற்றும் உதடுகளில் வெடிப்பு மற்றும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க, பெட்ரோலியம் சார்ந்த லிப் பாம் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.

வைட்டமின் டி :

குளிர்காலத்தில், இயற்கையான சூரிய ஒளியின் வெளிப்பாடு குறைகிறது, மேலும் இதனால் உங்கள் உடலில் உள்ள வைட்டமின் டி அளவு குறைகிறது. இந்த சமயங்களில் மருத்துவரிடம் கலந்தாலோசித்து வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.

ஹியுமிடிஃபையர்:

குளிர்காலங்களில் காணப்படும் வறண்ட காற்று, உங்கள் தோலில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். வீடுகளில் ஹியுமிடிஃபையர் பயன்படுத்தும் போது, இது சரியாகும்.

தோல் மருத்துவர்:

நீங்கள் எவ்வளவு பக்குவமாக இருந்தும், உங்கள் சருமத்தில் ஏதேனும் தோல் பிரச்சினைகள் ஏற்பட்டால், அது மேலும் மோசமடையும் முன் , மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.