எந்த எண்ணெய் சிறந்தது?

கடுகு எண்ணெய் மற்றும் ரீஃபைன்டு ஆயில் எனப்படும் சுத்தீகரிக்கப்பட்ட வெஜிடபிள் எண்ணெய் - இவற்றில் எது சிறந்தது ?

எந்த எண்ணெய் சிறந்தது?

கடுகு விதைகளில் இருந்து பெறப்படுவது கடுகு எண்ணெய், ஆனால், கச்சா எண்ணெய்யை சுத்தீகரித்து பெறப்படுவது ரீஃபைன்டு எண்ணெய் . நல்ல எண்ணெய்யைப்  பயன்படுத்துவது நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் உடலுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கும். சந்தையில் பல விதமான எண்ணெய்கள் விற்கப்படும் போது  சிறந்த எண்ணெய் எது என்பதை அறிந்து அதனை வாங்குவது எளிதான காரியம் அல்ல. கடுகு எண்ணெய் சிறப்பான எண்ணெய் இல்லை என்று ஒரு சிலர் கூறும்போது வேறு சிலர்  ரீஃபைன்டு எண்ணெய் சிறந்தது அல்ல என்று கூறுவர். 

அடர் மஞ்சள் நிறம் கொண்ட கடுகு  விதைகள் நல்ல கொழுப்புகள் கொண்டுள்ளன . ஆகையால் இவை இரத்த நாளங்களில் படிவதில்லை. ரீஃபைன்டு எண்ணெய் என்பது பதப்படுத்தப்பட்டு தயாரித்த எண்ணெய் என்பதால் சுவாச மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இனி நாம் கடுகு எண்ணெய் குறித்த நன்மைகளை பார்ப்போம்.

  1. இதயத்திற்கு நல்லது :

ஒற்றை நிறைவுறாத  கொழுப்பு அமிலம் கொண்ட கடுகு எண்ணெய் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ஒற்றை நிறைவுறாத  கொழுப்பு அமிலம் குறைவாக எடுத்துக் கொள்வதைக்  காட்டிலும் அதிக அளவு எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் உடல் கொழுப்பு குறைகிறது என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு காரணமாக இதய நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம். அவகேடோ எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அதிக கொழுப்பு அமிலங்கள் கொண்டவையாகும்.

  1. அழற்சி எதிர்ப்பு பண்புகள் :

கடுகு எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் , எரிச்சலூட்டும்  குடல் நோய்க்குறிக்கான நிலையை குறைக்க  உதவுகிறது. வயிற்றில் உண்டாகும் அழற்சியை குறைத்து குடல் பாதிப்புகளை தடுக்கிறது. கடுகு எண்ணெய்யில் அல்லில் ஐசோதியோசைனைட் என்னும் கூறு உள்ளது. இந்த கூறு அழற்சியைக் குறைக்க  உதவுகிறது. கடுகு எண்ணெய்யில் இருக்கும் இந்த கூறு பல்வேறு அறிகுறிகளுக்கு காரணமாக இருக்கும் அழற்சியைக் குறைக்க உதவுவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

  1. ஊட்டச்சத்து மதிப்பு :

கடுகு எண்ணெய்யில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன . மற்றும் இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கடுகு எண்ணெய்யில் க்ளுகோசினோலேட் உள்ளது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது. கடுகு எண்ணெய்யில் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஓலிக்  அமிலம், லினோலிக் அமிலம், இருசிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. மேலும் குடல் , சிறுநீர் பாதை , செரிமான மண்டலம் போன்ற இடங்களில் உண்டாகும் தொற்று பாதிப்பை எதிர்த்து போராடுகின்றது.

  1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :

கடுகு எண்ணெய்யில் உள்ள ஊக்கிகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்ட இரத்தத்தை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு மிக விரைவாக தருகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலில் இருந்து இரைப்பை சாறுகள் மற்றும் பித்தம் சுரப்பதை ஊக்குவிப்பதால் செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது.

  1. கபத்தைத் தடுக்கிறது:

கடுகு எண்ணெய் ஒரு வெதுவெதுப்பான பொருள் என்பதால், உடலுக்கும் ஒட்டுமொத்த சுவாச அமைப்பிற்கும் வெதுவெதுப்பைத் தந்து கபம் உற்பத்தி மற்றும் படிதலைத் தடுக்கிறது. சுவாசத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி போன்ற சுவாசம் தொடர்பான பல்வேறு கோளாறுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இதன் ஊக்குவிக்கும் தன்மை சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

கடுகு எண்ணெய்யின் பக்க விளைவுகள்:

கடுகு எண்ணெய் பயன்பாட்டில் சில பக்க விளைவுகள் இருந்தாலும், இவை ரீஃபைண்ட் எண்ணெய்யைப் போல் பெரும் தீங்கை உண்டாக்குவதில்லை. கடுகு எண்ணெய்யில் இருசிக் அமிலம் அதிகம் இருப்பதால் இரத்தசோகை அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதனால் சில சரும பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக கடுகு எண்ணெய்யை மிதமான அளவு எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் மேற்கூறிய அபாயங்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கடுகு எண்ணெய்யுடன் ஒப்பிடும்போது ரீஃபைண்ட் எண்ணெய் அதிக தீங்குகளை உண்டாக்குகிறது. இதற்கு காரணம் இவற்றைத் தயாரிக்கும்போது ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் இதில் அழுக்குகள் அதிகம் உள்ளன. ரீபைண்ட் எண்ணெய் தயாரிப்பில் சருமம், சுவாச மண்டலம், கல்லீரல் போன்றவற்றை பாதிக்கும் நிக்கல் உள்ளது. செரிமான மண்டலத்திற்கு தீங்கு உண்டாக்கும் சோடியம் ஹைடிராக்ஸைடு மற்றும் இதர பதப்படுத்தும் பொருட்கள் , எண்ணெய்யை பதப்படுத்தும்போது  சேர்க்கப்படுகிறது. எனவே இயற்கையான கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்துவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் அதன் உட்கொள்ளல் அளவை கண்காணிப்பது அவசியம். ஒருவேளை உங்களுக்கு இதனை பயன்படுத்துவதால் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகலாம் . இதனைப் பயன்படுத்துவதால் உங்கள் உடலுக்கு எந்த ஒரு தீங்கும் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.