குடல் புழுக்களுக்கான சிகிச்சையில் சிவப்பு வெங்காயம்
குடல் புழு என்பது ஒரு குறிப்பிட்ட வயிறு பாதிப்பைக் குறிப்பதாகும்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வழியாக சில குறிப்பிட்ட பாதிப்புகள் உடலில் உண்டாகின்றன. சில வகை பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிய வரும். ஆனால் எது எப்படி இருந்தாலும், இத்தகைய பாதிப்புகளை முடிந்த வரை விரைவாக போக்குவது நல்லது. அந்த வகையில் நாம் இன்று சிவப்பு வெங்காயத்தை பயன்படுத்தி குடல் புழுக்களைப் போக்குவது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.
வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கூறுகளுடன் இதர மூலப்பொருட்களைச் சேர்ப்பதால் , குடல் புழுக்களைப் போக்கி, வேகமான நிவாரணத்தை அளிக்க உதவுகிறது.
குடல் புழுக்கள் என்றால் என்ன?
இது ஒரு ஒட்டுண்ணி மூலம் ஏற்படுகிறது, இது பொதுவாக எண்ட்ரோபியஸ் வெர்மிகுலர்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
இதனை ஊசிப் புழு என்றும் கூறலாம். இதன் மூலம் ஏற்படும் தொற்றை ஊசிப்புழு தொற்று என்று கூறுவார்கள்.
குடல்புழுவின் அறிகுறிகள் என்ன?
குடல் புழுக்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு பொதுவான உண்டாகும் அறிகுறிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன..
1. தொடர் வயிற்று வலி
2. வயிறு வீக்கம் மற்றும் வாய்வு
3. எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் சோர்வு உண்டாவது
4. அந்தரங்க உறுப்பில் அரிப்பு
5. வயிற்றுப் போக்கைத் தொடர்ந்து மலச்சிக்கல்
6. மலத்தில் வெள்ளை திட்டுக்கள்
7. எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் எடை குறைப்பு
8. உணவில் தீவிர மாற்றங்கள்
9. மலம் கருமையாக இருப்பது
குடல் புழுவைப் போக்க சிவப்பு வெங்காயம் கொண்டு சிறந்த தீர்வுகள்
மேலே கூறிய அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக இதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக, வெங்காயத்திற்கு பல்வேறு மருத்துவ பலன்கள் உண்டு. ஆகவே இந்த நிலையில் இருந்து மீள, ஒரு சிறந்த சிகிச்சையைத் தர சிவப்பு வெங்காயம் உதவுகிறது.
1. வெங்காயம் , பூண்டு மற்றும் அவகாடோ சாலட் :
சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் மற்றும் ப்லேவனைடு போன்றவை பல் வேறு தீங்கு விளைவுக்கும் கூறுகளை வெளியேற்ற உதவுகிறது. பூண்டு மற்றும் அவகாடோவுடன் சேர்ந்த இந்த சிவப்பு வெங்காயம், குடல் புழுக்களைப் போக்குவதில் நல்ல பலன் தருகிறது.
- தேவையான பொருட்கள்:
ஒரு சிவப்பு வெங்காயம்
1 அவகாடோ
3 பூண்டு பற்கள்
நட்ஸ்(சுவைக்கேற்ப)
10 பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகள்
செய்முறை:
வெங்காயத்தைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அவகாடோவை பிரித்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப அரிந்து கொள்ளவும்.
2 அல்லது 3 பூண்டு பற்களை நசுக்கிக் கொள்ளவும்.
பூசணி அல்லது ஸ்குவாஷ் விதைகளை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
எல்லா மூலப்பொருட்களையும் சேர்த்து கலந்து தேவைபட்டால் சிறிது நட்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது சாலட் தயார்.
2. வெங்காய ஜூஸ் :
சிவப்பு வெங்காய ஜூஸ் குடல் புழுக்களை துரிதமாக வெளியேற்றுவதால் குடல் போக்குவரத்து அதிகரிக்க ஒரு சிறந்த தேர்வாகும். ஆகவே இந்த ஜூச பருகுவது ஒரு சிறந்த தீர்வாகும்.
- தேவையான பொருட்கள் :
6 சிவப்பு வெங்காயம்
தண்ணீர் (தேவைக்கேற்ப)
செய்முறை:
வெங்காயத்தை நறுக்கி, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
ஒரு இரவு முழுக்க இதனை ஊறவிடவும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை ஒரு கப் எடுத்து பருகவும்.
ஒரு வாரம் தொடர்ந்து இதனை செய்து வரவும்.
3. பாலுடன் பெப்பர்மின்ட் மற்றும் வெங்காயம்:
பாலுடன் பெப்பர்மின்ட் மற்றும் சிவப்பு வெங்காயம் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை, குடல் புழுக்களைப் போக்க ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது ஒரு இயற்கை குடல் புழு நீக்க மருந்தாகும்.
- தேவையான பொருட்கள்:
பெப்பர்மின்ட் காம்பு 4, இலைகள் 10
1/2 கிளாஸ் பால்
ஒரு ஸ்பூன் தேன்
ஒரு சிவப்பு வெங்காயம்
செய்முறை:
பாலை ஒரு பேனில் ஊற்றி, அதில் பெப்பர்மின்ட் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
இந்த கலவையை நன்றாக கலக்கவும். பாலைக் கொதிக்க விடவும்.
பிறகு அதில் தேன் சேர்க்கவும்.
காலை உணவிற்கு முன், வெதுவெதுப்பான இந்த பாலை பருகவும்.
7 நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரவும்.
4. பப்பாளி, ரூடா, மற்றும் வெங்காய ஜூஸ்
குடல் புழுக்களைப் போக்கும் மருந்தாக செயல்படும் ரூடா, பப்பாளியுடன் சேர்ந்து நல்ல பலன் தருகிறது. பப்பாளியில் அதிக அளவு ப்லேவனைடு உள்ளதால், கிருமிகளை எதிர்த்து போராட ஊக்குவிக்கிறது. இவை இரண்டும் சிவப்பு வெங்காயத்துடன் சேர்வதால் குடல் புழுவைப் போக்கும் சிறந்த மருந்தாகிறது.
- தேவையான பொருட்கள்:
ஒரு சிவப்பு வெங்காயம்
1/2 ஸ்பூன் பப்பாளி விதைகள் (7கிராம்)
ஒரு ஸ்பூன் காய்ந்த ரூடா இலைகள்(15 கிராம்)
ஒரு கப் தண்ணீர் (250 மிலி)
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பப்பாளியை பாதியாக நறுக்கி அதன் விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் இவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த கலவையை வடிகட்டி, வெதுவெதுப்பாக பருகவும். நாள் முழுவதும் தொடர்ந்து இதனை பருகலாம்.
5. வோர்ம் வுட் மற்றும் வெங்காய டீ :
வோர்ம் வுட்டில் ஒட்டுண்ணிகளைப் போக்கும் தன்மை உள்ளது. சிவப்பு வெங்காயத்தில் உள்ள சல்பர் கூறுகள் மற்றும் ப்லவனைடு போன்றவற்றுடன் இதனை சேர்ப்பதால், குடல் புழுக்களைப் போக்கும் சக்திமிக்க தீர்வு தயாராகிறது.
- தேவையான பொருட்கள்:
1/4 வெங்காயம்
4 கப் தண்ணீர் (1 லிட்டர்)
2 ஸ்பூன் வோர்ம் வுட் (30 கிராம்)
செய்முறை:
கால் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீருடன் சேர்த்து அதனை கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் வோர்ம் வுட் சேர்த்து மறுபடி கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்தவுடன், அந்த நீரை வடிகட்டி, ஒரு நாளில் மூன்று முறை அதனைப் பருகவும்.
பொதுவாக குடல் புழுக்கள் மனித உடலில் சில அசௌகரியத்தை உண்டாக்கும். இவற்றை சரி செய்யாமல் விடும்போது, பல்வேறு மோசமான உடல் பாதிப்புகள் உண்டாகலாம்.
ஆகவே இந்த எளிய தீர்வுகளை பின்பற்றி குடல் புழுக்களைப் போக்கலாம். நிச்சயம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணமுடியும்.