உங்கள் தமனிகளை சுத்தம் செய்ய உதவும் 7 உணவுகள்

தமனிகளில் உள்ள அடைப்பைப் போக்கி, ஆரோக்கியமான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கும் சில உணவு குறித்த பட்டியலை இப்போது நாம் காணலாம்.

உங்கள் தமனிகளை சுத்தம் செய்ய உதவும் 7 உணவுகள்

இதய ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் மற்றும் கொழுப்பு படிவதைக் குறைப்பதில் உணவு ஒரு முக்கிய  பங்காற்றுகிறது. உணவு அட்டவனையைத் தொடங்கி அதன்படி உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற குறிப்பிட்ட கால நேரம் ஒன்றும் தேவை இல்லை. எப்போது விரும்பினாலும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். உங்கள் உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டால் அதனைப் போக்குவதற்கு ஏற்ற  உணவுப் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதய நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும், தமனிகளை சுத்தம் செய்யவும் பல விதமான உணவுகள் உதவுகின்றன. 

1. அவகாடோ:
இரத்த கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடு அளவைக் குறைக்கவும், அவகாடோ பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம் என்று பல ஆய்வுகளின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த சுவை மிகுந்த பழத்தில், புரதம், நார்ச்சத்து, வைட்டமின், அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளன. உங்கள் சான்ட்விச் அல்லது சாலட் போன்ற உணவில் இந்த பழத்தை சேர்த்து சுவைக்கலாம். அவகாடோ எண்ணெய்யை உங்கள் தினசரி உணவில் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. சியா விதைகள்:
இதய நோயைத் தடுக்கவும், தமனிகளில் உள்ள அடைப்பைப் போக்கவும், இந்த சின்னஞ்சிறிய விதைகள் நல்ல தீர்வைத் தருகின்றன. இவற்றில் உயர் அன்டி ஆக்சிடென்ட் , ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் , தமனிகளில் படியும் கொழுப்பை நீக்க இவை உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் , ட்ரை க்ளிசரைடு அளவைக் குறைக்கவும் , நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன.

3. ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து , கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் உறிஞ்சப்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் காரணமாக இரத்த அழுத்தம் சீராக வைக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்தில் ஆக்சிஜனேற்ற சேதத்தைத் தடுத்து தமனிகளைப் பாதுகாக்க ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது.
 
4. காபி :
கபைன் உடலுக்கு மோசமான பாதிப்பை உண்டாக்குவதில்லை. காபி பருகுவதால் இதய நோய் வளர்ச்சியின் அபாயம் 20% வரை குறைக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. காபி பருகும் அளவைக் குறைத்துக் கொள்வதால் பல்வேறு சிக்கல்கள் குறைக்கப்படுகின்றன என்பதை மட்டும் நினைவில் கொள்வது அவசியம். மிக அதிக அளவு கபைன் எடுத்துக் கொல்வதால் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பதாகவும் இதனால் இதய நோய்க்கான பாதிப்புகள் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது.

5. மாதுளை:
மாதுளம் பழத்தில் அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. இதனால் தமனிகளின் சுவற்றை சுற்றி கொழுப்புகள் படியாமல் தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால் தமனிகளில் அடைப்பு தடுக்கப்படுகிறது மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க முடிகிறது.


6. நட்ஸ்:
நட்ஸ் ஒரு ஆரோக்கிய சிற்றுண்டியாகும். நிறைவுற்ற கொழுப்புகள், வைட்டமின் ஈ , நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை அதிக அளவில் உள்ளன. பாதாம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். வால்நட் இந்த சத்துகளின் மற்றொரு ஆதாரமாகும். இதனால் இரத்த அழுத்தம் மேம்பட்டு, அழற்சி குறைகிறது மற்றும் தமனிகள் சுத்தமாகின்றன.


7. ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் நிறைவுற்ற அமிலத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு சரியாக நிர்வகிக்கப்படுகிறது. அதனால் உணவு சமைக்க இந்த எண்ணெய் ஒரு ஆரோக்கியமான எண்ணெய்யாக பரிந்துரைக்கப்பட்டு பரவலாக பயன்பாட்டில் உள்ளது. தொடர்ச்சியாக ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தி வருவதால் இதய நோய் தாக்கும் அபாயம் குறைவதாக சில ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இதனை உணவு சமைக்க பயன்படுத்தலாம் அல்லது சாலட் போன்றவற்றில் மேலே ஊற்றி சாப்பிடலாம்.

முடிவுரை:
தமனிகளில் உள்ள அடைப்பை நீக்கி ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ பல ஆரோக்கிய வழிகள் உள்ளன. நீங்கள் மேலே கூறிய உணவுப் பொருட்களை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் இதய நோய்த் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கலாம். மேலும் இந்த உணவுகள் உங்கள் பட்ஜெட்டில் அடங்கும் மற்றும் மலிவான விலையில் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.