நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயற்கை கருப்பை!

இந்த ஆய்வகத்தில் ஒரு ஆண்டுக்கு செயற்கை கருப்பை மூலம் 30,000 குழந்தைகள் வரை உருவாக்க முடியும்.

நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செயற்கை கருப்பை!

செயற்கை கருப்பை

ஹஷேம் அல்-கைலி எக்டோலைஃப் (Ecto Life) ஆராய்ச்சி குறித்த மாதிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 

செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் 50 ஆண்டுகளாக உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் உருவாக்கிய இந்த ஆய்வகத்தில் ஒரு ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்க முடியும் என்று ஹஷேம் அல்-கைலி கூறியிருக்கிறார்.

பயன்கள்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 300,000 பெண்கள் கர்ப்ப சிக்கல்களால் இறக்கின்றனர். எக்டோலைஃப் செயற்கைக் கருப்பை குழந்தை இல்லா தம்பதிகளின் துன்பத்தைப் போக்க உதவும். கருப்பை பிரச்சனை, புற்றுநோய் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளால்  கருப்பை அகற்றப்பட்ட பெண்களுக்காகவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார். 

செயற்கை கருப்பை எவ்வாறு  செயல்படும்

ஹஷேம் அல்-கைலி இந்த செயற்கை கருப்பையை பற்றி கூறுகையில் இந்த கருப்பை ஒரு பெண்ணின் கருப்பையின் சரியான நிலையை பிரதிபலிக்கும் மற்றும் நோய்த்தொற்று இல்லாத சூழலை தரும். செயற்கை கருப்பைகளில் மனித கருக்களை வளர வைப்பதற்கான ஆராய்ச்சி தொடங்குவதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் இது சாத்தியப்படும் என்றும், அதனால் இந்த ஆய்வகத்தில் ஒரு ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்க முடியும். இதில் உள்ள வசதி என்னவென்றால், குழந்தையின் இதயத் துடிப்பு, ஆக்ஸிஜனேற்றம் செறிவூட்டல், வெப்பநிலை, சுவாசம் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கும் சென்சார்கள் கருப்பையில் பொருத்தப்பட்டுள்ளன, அதனால் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிசெய்து பராமரிக்கப்படுகின்றன. ஒரு செயற்கை தொப்புள் கொடியின் மூலம் பனிக்குடம் நீர் போன்ற திரவ கரைசலை செலுத்துகிறது. இரண்டாவது செயற்கை தொப்புள் கொடி மூலம்  குழந்தையின் கழிவுப்பொருட்கள் அகற்றப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனது தேவைகளுக்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களைப் பெறும். குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் 360 டிகிரி கேமரா பொருத்தபட்டியிருக்கும். இதில் பதிவான குழந்தையின் ஒவ்வொரு  வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றோரின் தொலைபேசிக்கு நேரடியாக அனுப்பப்படும். இதன் மூலம் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும், அசைவுகளையும், துடிப்பையும் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு செயற்கை கருப்பையிலும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கென கொடுக்கப்பட்ட ஆப் மூலமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தை எந்த இசை கேட்க வேண்டும் என்பதை தேர்வு செய்து அனுப்பலாம் மற்றும் தங்களின் குரல்களையும் பதிவு செய்தும் அனுப்பலாம்.

எடிட்டிங் கருவி மூலம் மரபணு மாற்றப்படும்

கருவை செயற்கை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு 300க்கும் மேற்பட்ட மரபணுக்களை மாற்றுவதற்கான வாய்ப்பை பெற்றோருக்கு வழங்குகிறது. உதாரணமாக குழந்தையின் முடி,  கண்களின் நிறம், உயரம், நுண்ணறிவு நிலை மற்றும் மரபணு நோய்களை தடுப்பது, தோல் நிறம் போன்றவற்றை பெற்றோர்கள் தேர்வு செய்யலாம். இதில் CRISPR-Cas 9 மரபணு எடிட்டிங் கருவி மூலம் தேர்வு செய்ததை மாற்றிக் கொடுக்கப்படுகிறது.

குழந்தை முழுமையாக வளர்ந்த பிறகு பெற்றோர் தாங்கள் விரும்பும் நாளில் ஒரு பட்டனை அழுத்தினால் பனிக்குடம் வெளியேறி  குழந்தை பிறந்துவிடும். இது குழந்தையில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றிய விமர்சனங்கள் வந்தவண்ணமே இருக்கிறது. சிலர் பாராட்டினாலும், பலர் இது இயற்கைக்கு மாறானது என்று தங்களின் எதிர்புகளை வெளிபடுத்திவருகின்றனர்.