குடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது - ஆண்களா ? பெண்களா?

குடி குடியைக் கெடுக்கும் . இதில் ஆண் என்ன? பெண் என்ன?

குடிப்பழக்கத்தால் அதிகம் பாதிப்படைவது  - ஆண்களா ? பெண்களா?

குடிப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் , அதுவும் குறிப்பாக ஆண்களின் வாழ்வை சீரழிக்கும்.  குடி பழக்கம் அதிகமாக  இருக்கும் இளம் வயது ஆண்களின் மூளையில் பலவித மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிகமான குடி பழக்கம் இருக்கும் பெண்களின் மூளையில் ஏற்படும்  மாற்றத்தை விட இது மிகவும் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள், ஆண்  மற்றும் பெண் , குடிப்பழக்கம் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களின் மூளை செயலாற்றலை காந்த புள்ளிகள் வழியாக தூண்டப்பட்டு பரிசோதித்தனர். இதன் முடிவுகள்  மிகவும் வியக்கும் விதமாக இருந்தது. ஆண்கள் மூளையின் மின் செயல்பாட்டில்  அதிகமான மாற்றங்களை உணர முடிந்ததாக கூறுகின்றனர்.  மது பழக்கம் கொண்ட பெண்களின் மூளை செயல்பாட்டைவிட அதிக மாற்றங்களை கொண்டது ஆண்களின் மூளை செயல்பாடு. 

மது பழக்கம் அதிகமுள்ள 11 ஆண்கள் மற்றும்  16 பெண்கள் கொண்ட ஒரு குழுவும், மது பழக்கம் இல்லாத 12 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அவர்களை பரிசோதித்தனர். அவர்கள் அனைவரும் 20 வயதில் உள்ளவர்கள். ட்ரான்ஸ் கிரானியல் மேக்னெட்டிக் ஸ்டிமுலேஷன்(Transcranial Magnetic Stimulation ) என்ற முறையில் இவர்களை பரிசோதித்தனர். ஒரு மின் காந்த காயிலை அவர்களின் தலையில் பொருத்தினர் . அது மூளை செல்களை தூண்டி செய்திகளை அனுப்புகிறது. EEG  மூலம் அவர்களின் மூளை செயல்பாடுகளை ஆராய்ந்தனர் .

பெண்களின் மூளையை விட அதிக அளவில் ஆண்களின் மூளையின் மின் இயக்கங்கள் GABA நரம்பியகடத்திகளோடு இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. GABA என்பது மூளையில் இயற்கையாக இருக்கும் நரம்பியகடத்தியாகும். இது மத்திய நரம்பு மணடலத்தை சீரமைக்கிறது, மூளையின் செயலாற்றலை அமைதி படுத்துகிறது, பதட்டம் மற்றும் மனச்சோர்வை கட்டுப்படுத்துகிறது. GABAவின்  இரண்டு வகைகள்   A மற்றும் B என்பதாகும். ஆண்களின் நீண்ட நாள் மது பழக்கம் , GABA வின் இரண்டு வகைகளையும் பாதிக்கிறது. பெண்களுக்கு GABA-‘A’ மட்டும் பாதிப்படைகிறது. குடிப்பழக்கம் GABA-’A’ செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும். ஒட்டுமொத்த ஆல்கஹால் அருந்துதலின் விருப்பம் GABA - B யில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தால் மூளையின் பிரச்சனைகள் தோன்றுவதோடு மட்டும் இல்லாமல், கல்லீரல் நோய், இதய நோய், தூக்கத்தில் கோளாறு போன்றவையும் ஏற்படுகிறது.