எடை குறைப்பிற்கான ஆன்லைன் வழிமுறைகள்

இன்று ஆப் ஸ்டோர்களில் எடை குறைப்பு சம்மந்தமான பல ஆப்கள் கிடக்கின்றன

எடை குறைப்பிற்கான ஆன்லைன் வழிமுறைகள்

ஸ்மார்ட்போன் வந்த பிறகு அனைவரும் அனைத்து வேலைகளுக்கும் கைபேசியை நாடுகிறோம். பல நிர்வாகங்களும் அவர்களின் உற்பத்தியை அனைவரும்  பயன்படுத்தும் வகையில் ஆப்களை  உருவாக்க தொடங்கிவிட்டனர்.  மக்கள் அவர்களின் தேவைக்கு உகந்த ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி விட்டனர். அந்த வகை  ஆப்களில் முக்கியமானதொரு ஆப் - எடை குறைப்பு ஆப் . அவற்றுள் அதிக பதிவிறக்கம் கொண்ட சில ஆப்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றை பற்றி தெரிந்து கொண்டு பயனடையுங்கள்.

லூஸ் இட் (Lose It ):
இது பயன்படுத்த மிகவும் எளிமையானது. கலோரி எண்ணிக்கைமற்றும்  எடை கண்காணிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

7 மில்லியன் உணவு வகைகள், உணவு விடுதியின் பெயர்கள் மற்றும் பிராண்ட்கள்  கொண்ட டேட்டா பேஸ் கொண்டது இந்த ஆப். எடை, வயது மற்றும் ஆரோக்கிய குறிக்கோள் போன்றவற்றை ஆய்வு செய்து தனிப்பட்ட எடை குறைப்பு திட்டத்தை உங்களுக்கு வழங்குகிறது.
உங்கள் திட்டம் கிடைக்கப்பட்டவுடன், நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு  பற்றிய தகவலை அதில் பதிவு செய்யலாம். நீங்கள் உண்ணும் உணவின் கலோரி அளவை தினசரி மற்றும் வாரத்திற்கு ஒரு முறை உங்களுக்கு தெரியப்படுத்தும்.

எடை கண்காணிக்க பயன்படுத்தும்போது, உங்கள் எடை மாற்றத்தை ஒரு க்ராப் மூலம் தெரியப்படுத்தும் . “ஸ்னாப் இட்” என்ற ஒரு அம்சம் இதில் உண்டு. நீங்கள் உண்ணும் உணவை படம் பிடித்து பார்த்து கொள்ளலாம். இதனால் சரியாக நீங்கள் எவ்வளவு உண்ணுகிறீர்கள் என்பதை கணிக்க முடியும். இது எடை குறைப்பிற்கு  மிகவும் உதவுகிறது.
மற்றொரு சிறப்பு அம்சம் என்னெவென்றால், நீங்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் கலந்து கொள்ள முடியும், சந்தேகங்கள் மற்றும் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும்.

ஸ்பார்க் பீப்புள் (Spark People ) :
இந்த ஆப்பில் நுழைந்து உங்கள் தினசரி உணவு, எடை மற்றும்  பயிற்சிகளை பதிவு செய்ய வேண்டும்.
இதில் 3,000,000 வகையான உணவு வகைகள் கொண்ட டேட்டா பேஸ் உள்ளது இதன் சிறப்பம்சமாகும். பேகேஜ்ட் உணவுகளை   கண்காணிக்க  பார்கோட் ஸ்கேனர் ஒன்று இருக்கிறது.

ஸ்பார்க் பீப்புள் உள் நுழைந்ததும், அங்கு உடற்பயிற்சிக்கான  விளக்க பட்டியல் ஒன்று தரப்பட்டுள்ளது. இதில் பொதுவான உடற்பயிற்சியின் படங்களும், விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்து, நாம் செய்யும் பயிற்சிகள் சரியானது தானா  என்று அறிந்து கொள்ள முடியும்.
உங்களுடைய பழக்கங்களை நீங்கள் பதிவு செய்து, குறிக்கோள்களை எட்டும் போது, சில பாயிண்டுகள் உங்களை ஊக்குவிப்பதற்காக  வழங்கப்படுகிறது. 

மை பிட்னெஸ் பால் :
இதன் டேட்டா பேஸ் 5 மில்லியன் உணவுகளை கொண்டது. பல உணவு விடுதிகளில் உள்ள உணவை பற்றிய தகவலும் இந்த டேட்டா பேஸ் கொண்டுள்ளது.

உங்களின் தினசரி கலோரி தேவைகளை இந்த ஆப் கணக்கிட்டு காட்டுகிறது. இந்த ஆப்பில்  நுழைந்து நீங்கள் அந்த நாள் முழுதும் சாப்பிட்ட உணவுகளின் தகவலை  குறிப்பிட வேண்டும். உங்கள் தகவலை ஏற்று கொண்டு, உங்கள் உணவில் உள்ள  கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் கணக்கை அது உங்கள் முன் சமர்ப்பிக்கும். 
உங்கள் உணவின் புரதம் மற்றும் கொழுப்பின் அளவையும் சார்ட் வடிவத்தில் காட்டும்.
உங்கள் எடையை இந்த ஆப்பின்  மூலம் கண்காணிக்க முடியும். 

க்ரோனோ மீட்டர் :
உடல் தகுதி, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை கண்காணிக்க இந்த ஆப் பயன்படுத்தப்படுகிறது.

50,000 வெவ்வேறு உணவுகளின் பட்டியலை கொண்டுள்ளது . கலோரிகளின் எண்ணிக்கையை கண்காணிக்கும் அம்சம் இந்த ஆப்பில் உள்ளது. 
கலோரிகலை கட்டுப்படுத்தி, ஊட்டச்சத்துகளை பெறுவதே இந்த ஆப்பின் குறிக்கோளாகும். 60 வகையான ஊட்டச்சத்துகளை இது கண்காணிக்கிறது. உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இவற்றில் கட்டாயம் அடங்கி இருக்கும்.

இந்த ஆப்பில் “ட்ரென்ட்ஸ்” என்ற ஒரு அம்சம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பின்னர் உங்கள் எடை நிர்வாக வளர்ச்சியை இது காட்சிப்படுத்துகிறது.
இதில் “ஸ்னாப் ஷாட்” என்ற மற்றொரு அம்சம் உள்ளது. உங்கள் எடை குறைப்பு பயணம் முழுவதும் உள்ள உங்கள் உடல் எடை மாற்றத்தினை போட்டோவாக பதிவேற்றம் செய்யலாம்.
பல்வேறு ஊட்டச்சத்து தொடர்பான கலந்துரையாடல்களை இந்த ஆப் வரவேற்கிறது.
கலோரிகள் குறைந்தால் எடை குறைந்திருக்கிறது என்பது நம்பப்படும் உண்மை ஆகும். இதுபோன்ற எடை குறைப்பு ஆப்களினால் பல நன்மைகள் கிடைக்கின்றன.  ஆனால் நேரமும் செலவாகும் . சில பயிற்சிகளை செயல்முறை படுத்தி பார்த்து தான் நமது உடலின் தேவைக்கு ஏற்ற ஒரு தீர்வை பெற முடியும்.