இல்லறம் இனிமையாக சில குறிப்புகள்

இந்த புத்திசாலித்தனமான, அறிவை வளர்க்கக் கூடிய விதிகள் பெற்றோரால் பரிசோதித்து ஒப்புதல் வழங்கப்பட்டவையாகும்.

இல்லறம் இனிமையாக சில குறிப்புகள்

பிள்ளைகளுக்கு நாம் சில நல்ல விஷயங்களைக் கற்று கொடுப்பதால் அவர்கள் சிறந்தவர்களாக வளர முடியும். அவ்வாறு வளர்வதற்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன. முடிந்தவரை அனைத்தையும் பின்பற்ற முயற்சிக்கலாம்.

1. ‘மூடிய கதவை  திறப்பதற்கு முன்  கதவை  தட்ட வேண்டும்’ என்ற பண்பை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 

2. இரவு உணவு மேஜையில் அன்றைய நாளில் அவரவர் வேலை பற்றி பேசிய பின், உரையாடலை மாற்ற வேண்டும் .

3. வேலைக்கு சென்று திரும்பிய பின், வீட்டு வேலையில் கவனம் செலுத்துவதற்கு முன், உங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் தனிமையில் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். இது உங்களுக்கான நேரம். அந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்கு அவர்களுக்கு உணர்த்துங்கள். 

4.  நடக்கும் எந்த ஒரு விஷயத்திற்காகவும் கவலைபடத் தேவையில்லை. அவை வெறும் விபத்துகள்.

5. "நீங்கள் பிரச்சனையை தீர்ப்பவரா அல்லது பிரச்சனையை உண்டாக்குபவரா ?" இதனை ஒரு மந்திர கேள்வியாக ஏற்றுக் கொள்வோம் . எதிர்மறை எண்ணங்களை நீக்க ஒரு மிகச் சிறந்த வாக்கியமாக இது உள்ளது. 

6. "மற்றவர்களுக்கு முதலிடம் கொடுங்கள்" . பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போது இந்த வாக்கியத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் செய்கை பாஷை சொல்லிக் கொடுங்கள். நம் விரலை அடுத்தவரை நோக்கி முதலில் காண்பித்து பின் அதே விரலை நேராக உயர்த்திக் காண்பிப்பது தான் அந்த செய்கை. வருங்காலத்தில் அவர்கள் சிறந்தவர்களாக மாறுவார்கள். 

7. "பள்ளி நாட்களின் இரவு நேரங்களில் கம்ப்யுட்டர் கேம்ஸ்க்கு "நோ"" சொல்லி பழகுங்கள். பள்ளி பாடங்களுக்கு முன்னுரிமை  கொடுக்க இவற்றை பழக்குங்கள். 

8. உங்கள் பிள்ளைகளுக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு உணவை இரவு உணவாக சாப்பிடக் கொடுக்கும்போது, "நன்றி, எனக்கு வேண்டாம்" என்று கூறி, கொடுக்கப்பட்ட உணவை ஒரு பிடியாவது எடுத்து உண்ண வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்கு  கற்றுக் கொடுங்கள். 

9. "நீங்கள் அடுக்கி வைத்தால் நீங்களே சுமந்து செல்லுங்கள்" - ஒரு நாள் வெளியில் பயணம் மேற்கொள்ள தேவையான பொருட்கள் என்ன என்பது நமக்கு தெரியும். அந்த வேலையை நம்மை செய்ய விடாமல், தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து குறுக்கீடு செய்பவர்களுக்கான வாக்கியம் தான் மேலே சொல்லப்பட்டது. 

10. "காலையில் அல்லது வேலை நாட்களில் தொலைக்காட்சி பார்க்கக் கூடாது". காலை நேரங்கள் பெரும்பாலும், பல் துலக்குவது, குளிப்பது, உடைகள் உடுத்துவது  போன்ற வேலைகளில் மட்டும் ஈடுபட வேண்டும். இதனால் சரியான நேரத்திற்கு வெளியில் கிளம்ப முடியும். இதனால் ஒரு நாளின் அட்டவணை சரியாய் பயணிக்கும்.

11. "முழுவதும் காலி செய்யுங்கள்". பொங்கி வழியும் குப்பை தொட்டி, கழுவும் இடத்தில் நிரம்பியிருக்கும் பாத்திரங்கள், அழுக்கு துணிகள் இருக்கும் பெட்டி , தட்டில் இருக்கும் உணவு  இவை எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நமது மனநிலைக்கும் கூட இதே விதி பொருந்தும்.

12. "எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வையுங்கள்". இதனால் பொருட்கள் கலையாமல் அது இருக்கும் இடத்தில் மட்டுமே இருக்கும்.

13. எந்த வேலையும் ஆணுடைய வேலை , பெண்ணுடைய வேலை என்று இல்லை. எல்லாமே வேலை மட்டும் தான். அதனை முடிக்கும் வரை அனைவரும் சேர்ந்து அந்த வேலையை செய்வோம்.