சென்னையில் இருந்து கொல்லி மலை வரை

 உங்கள் வார விடுமுறை நாட்களை ஒரே இடத்தில் இருந்து கழிக்க விரும்பாமல், இயற்கையின் அழகை ரசிக்க வெளியில் கிளம்பும் எண்ணம் கொண்டவர்கள், நிச்சயமாக கொல்லி மலைக்கு வரலாம்

சென்னையில் இருந்து கொல்லி மலை வரை

சென்னையில் இருந்து கொல்லி மலைக்கு எப்படி வர வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படியுங்கள்.

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் கொல்லி மலையில் , நீர்வீழ்ச்சியும், கோயிலும் அமைத்திருப்பதால் வருடம் முழுதும், அது ஒரு அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது ஒரு மலை தொடர் என்பதால், சாகச பிரியர்களுக்கும் இந்த இடம் ஒரு பெரும் வரவேற்ப்பை தருகிறது. நீங்கள் மலை ஏற்றத்தை  விரும்புபவராக இருந்தால், அந்த சாகச அனுபவத்தை பெற்று மகிழ இந்த வார இறுதி பயணத்திற்கான ஒரு சிறந்த இடமாக இந்த கொல்லி மலை இருக்கும். இந்து மதத்தை சார்ந்தவர்கள், இந்த மலையில் இருக்கும் அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்வர். இந்த இடம் ஒரு ஆன்மீக தலமாகவும், சுற்றிலும் ஒரு தெய்வத்தன்மை இருக்கும் இடமாகவும் திகழும். 

கொல்லி மலையை காண சிறந்த நேரம் :
வருடம் முழுதும் காணக்கூடிய இடமாக இந்த மலை தொடர் இருப்பதால் வருடத்தில் எந்த நேரத்திலும் இங்கு செல்லலாம். குறைந்த தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் குளிர் காலங்களில், சிறிது அசௌகரியம் உண்டாகும் என்று நினைப்பவர்கள் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மற்றும் மார்ச் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில் கொல்லி மலையை காண திட்டமிடலாம். இந்த காலகட்டத்தில், பருவ நிலை சாதகமாக இருப்பதால் நம்மால் பல இடங்களுக்கு சௌகரியமாக சுற்றி திரிய முடியும்.

சென்னையில் இருந்து கொல்லி மலைக்கு எப்படி செல்ல வேண்டும் :
விமான பயணம்  :
சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் மூலம் பயணித்து அங்கிருந்து ஒரு வாடகை காரை புக் செய்து கொல்லி மலையை அடையலாம். கொல்லி மலையில் இருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையம் 110 கிமீ தூரத்தில் உள்ளது. 
இரயில் பயணம் :
சென்னையில் இருந்து நேரடி இரயில் கொல்லி மலைக்கு இல்லை. இருந்தாலும், சென்னையில் இருந்து சேலத்திற்கு இரயிலில் சென்று, அங்கிருந்து வாடகை காரில் கொல்லி மலை செல்லலாம். சேலம் சந்திப்பில் இருந்து கொல்லி மலை 45 கிமீ தூரம் ஆகும். 
சாலை வழி :
சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்தில் உள்ளது கொல்லி மலை. சென்னை மற்றும் பிரதான நகரங்களில் இருந்து கொல்லி மலை செல்லும் சாலை வழி மிகவும் எளிதாக இருக்கும். சென்னையில் இருந்து கொல்லி மலைக்கு வாடகை கார் மூலம் சென்று வரலாம். நீங்கள் உங்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது, கீழே குறிப்பிட்ட வழிகளை தேர்வு செய்யலாம். 
வழி 1 :
சென்னை - செங்கல்பட்டு - விழுப்புரம் - கொல்லி மலை 
வழி 2 :
சென்னை - காஞ்சிபுரம் - சேலம் - கொல்லி மலை . 
இதில் முதல் வழி வேகமாக செல்லக் கூடியது . ஆகவே நீங்கள் முதல் வழியை தெரிவு செய்யலாம். விரைந்து கொல்லி மலையை அடைய முதல் வழியே உங்களுக்கு சௌகரியமாக இருக்கும். நீங்கள் கொல்லி மலை செல்லும் வழியில், சிறிது இடைவேளை எடுத்து, உங்களை புத்துணர்ச்சி அடைய செய்ய சில இடங்கள்  உண்டு. அதனை இப்போது பார்க்கலாம்.

செங்கல் பட்டு :
செங்கல்பட்டு என்றாலே நினைவுக்கு வருவது கொலவை ஏரி . இந்த ஏரி ஒரு சிறந்த நீர் தேக்கமாக கருதப்படுகிறது. வெயில் காலங்களில் இந்த ஏரியை சுற்றியுள்ள நகரங்களுக்கு இந்த நீர் பெரிதும் பயன்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய நகரங்களுள் ஒன்றான செங்கல்பட்டு, பல பயணிகளாலும் போற்றப்படும் ஒரு இடமாக திகழ்கிறது. தூய்மையான காற்று, மாசுபடாத சுற்றுசூழல், போன்றவற்றால் இந்த இடம் இன்றும் புத்தம் புதிதாக திகழ்கிறது. இதற்கு இங்கு உள்ள ஏரி மிகபெரிய காரணமாகும்.

 
விழுப்புரம்:
தமிழ்நாட்டின் மிக பெரிய மாவட்டங்களுள் விழுப்புரமும் ஒன்று. சோழர் காலத்தில் இந்த மாவட்டம் மிக பெரிய அரசியல் மற்றும் வணிக மையமாக இருந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. இன்று விழுப்புரத்தில் இருக்கும் ஜின்ஜி கோட்டை மற்றும் சில கோயில்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இருக்கின்றன. விழுப்புரம் சென்று இந்த பழமையான வரலாற்றை சற்று தெரிந்து கொள்ளலாம்.
 

கொல்லி மலையில் பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள் :
நீங்கள் கொல்லி மலையின் எல்லையை நெருங்கியவுடன் உங்கள் சுற்றி பார்க்கும் ஆவலை தணிக்க பல வழிகள் உள்ளன. கொல்லி மலையின் அடர்ந்த காடுகள் , வளமான தாவரங்கள் போன்றவற்றை அனுபவிப்பதோடு, புகழ்பெற்ற கோயில்கள், தோட்டம் மற்றும் நீர்வீழ்ச்சியையும் கண்டு ரசிக்கலாம். கொல்லி மலையை அடைந்தவுடன் நீங்கள் காண வெடிய இடங்களை இப்போது பார்க்கலாமா ?

 
ஆகாச கங்கா நீர்வீழ்ச்சி :
கொல்லிமலை அரபலீஸ்வரர் ஆலயத்திற்கு அருகே உள்ள ஆகாஷ் கங்கா நீர்வீழ்ச்சியை நீங்கள் ரசிக்கும் வேளையில் கிழக்கு தொடர்ச்சி மலையின் அழகை கவனிக்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள். கோடை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கோடையின் வெப்பத்தை மறந்து, அழகான குளிர்ந்த வானிலையை உணர கூடிய இந்த நேரத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும். நீர்வீழ்ச்சியின் அருகே இருப்பதால் சுற்றிலும் குளிர் நம்மை தழுவ முற்றிலும் நாம் சென்னையை மறந்து இருப்போம் என்பது உறுதி. ஆகாச கங்கை நீர்வீழ்ச்சியில் சற்று நேரம் குளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது ஒரு மிக பெரிய ஆனந்தத்தையும் அமைதியையும்  தரும். இந்த தருணத்தை அனுபவிக்க வேண்டும் இல்லையா ? உடனே புறப்படுங்கள் கொல்லி மலையை நோக்கி...

அரப்பளீஸ்வரர் கோயில் :
கொல்லி மலைத்தொடர் ஒரு புனிதத்தலமாக அறியப்படுவதற்கு முக்கிய காரணம் அங்கு அமைந்திருக்கும் அரப்பளீஸ்வரர் ஆலயம் தான். பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆண்டு முழுவதும்  அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். அவர்கள் கொல்லி மலையின் அடர்ந்த காட்டு பகுதி வழியே மலையேறி வருகின்றனர். சங்க காலம் முதல் இந்த கோயில் இங்கு அமைந்திருப்பதாக வரலாறு கூறுகிறது. அன்று முதல் இந்த இடம் ஒரு புனிதத்தலமாக வழிபடப்பட்டு வருகின்றது. இங்கு இருக்கு சிவலிங்கத்தை வழிபட்டு அமைதியை தேடுவதற்காக பலர் அனுதினம் வருகின்றனர்.

போட்டனிகள் பூங்கா :
கொல்லி மலை தொடரின் நிஜமான அழகை மேலும் அதிகரித்து காட்டுவதற்காக இங்கு அமைந்துள்ள இடம், இந்த போட்டனிகள் பூங்கா. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள இடம் அழகிற்கு இலக்கணமாக திகழ்வது. ரோஜா தோட்டம் , படகு சவாரி என்று ஒவ்வொன்றும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தும் விதமாக அமைத்திருக்கும். கொல்லி மலையில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் ஒரு தெய்வீக ஒளி, நிச்சயம் நமது அனுபவத்தை புதுப்பிக்க வைக்கக் கூடியதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

கொல்லி மலை செல்ல உடனடியாக திட்டமிட்டு சென்று வாருங்கள். உங்களுக்கு நீங்களே இயற்கை அன்னையின் மிக பெரிய பரிசை கொடுத்துக் கொள்வதாக இந்த பயணம் அமையட்டும்.