துலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல் வாழ்க்கை

துலாம் ராசியில் சுக்ரன் இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் மன வலிமை உள்ளவர்கள்.

துலாம் ராசியில் காதல் கிரகம் சுக்ரன் இருப்பவர்களின் காதல் வாழ்க்கை

துலாம் ராசியில் சுக்கிரன் இருப்பவர்கள், தன் காதலரை கோபப்பட வைத்து ரசிப்பார். தன் காதலருக்கு கண்களில் கவர்ச்சி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்த கவர்ச்சி அவர்கள் கண்களில் குறையும்போது, இவர்களின் காதலும் சிறிது சுவாரஸ்யத்தை இழக்கும் . துலாம் ராசியில் சுக்ரன் இருப்பவர்கள், தனது துணைவர்  மிகவும் சாதுர்யமானவராக, பிரகாசிக்கும் கண்களுடன் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று விரும்புவர். பொதுவாக ஒரு அழகான வெளிப்புற தோற்றம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சுக்ரனின் சொந்த வீடு துலாம் ஆகும். இவர்களுக்கு அழகியலில் மிகப்பெரிய நாட்டமிருக்கும் . தோற்றத்தின் மீது அதிக அக்கறை உள்ளவராக இருப்பார்கள். சில நேரம் நகைச்சுவை தன்மையுடன் இருந்தாலும், அசல் தன்மையை அதிகம் பாராட்டுவார்கள். 

காதலில் விழுந்த துலாம் ராசிகாரர்களை எளிதில் கடுபிடித்துவிட முடியும்., காரணம், சுக்ரன் என்பது ஒரு காதல் கிரகம் . காதல் வயப்பட்டதை நமக்கு காட்டும் ஒரு குறியீடு தான் இந்த சுக்ரன். ஆனால் ஒவ்வொரு ராசிக்கும் இது மாறுபடுகிறது.


துலாம் ராசியில் சுக்ரன் இருக்கும் ஆண் மற்றும் பெண்கள் மன வலிமை உள்ளவர்கள். எதையும் துவக்கி வைக்கும் திறமை உள்ளவர்கள். சமூக ஆக்கிரமிப்பு சிந்தனை கொண்டவர்கள் பெரும்பாலும் இந்த ராசியினராக இருப்பார்கள். அவர்களின் கவர்ச்சி மற்றும் காந்த தன்மையை பயன்படுத்தி மக்களை அவர்கள் வசம் இழுப்பார்கள். 

சுக்ரன் தன் வீடாகிய துலாமில் இருக்கும்போது, அந்த ராசிக்குரியவர்கள், காற்றில் மிதப்பது போல் உணர்வார்கள். ரொமான்ஸ் நிலையிலேயே இருப்பார்கள். பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் பற்றிக் கொள்வது போல், இந்த நிலையில் சுக்ரன் உச்சமாக இருக்கும். 

துலாமில் சுக்ரன் - மேஷத்தில் சுக்ரன் 

வலிமையான மேஷ ராசியினரால் துலா ராசியின் சுக்ரன் ஈர்க்கப்படும். அதன் பிறகு அவர்களின் கவனம் சிதறலாம். எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பதற்கு ஏற்ப சில  நாட்களில் ஒருவர் மற்றவரை தந்திரங்கள் மூலம் வெற்றி கொள்ள பார்ப்பார். நான் என்ற உச்சத்தில் இருந்தவர்கள் திடீரென்று நாம் என்ற உச்சத்தில் இருப்பார்கள். இந்த பார்வை அவர்களின் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.

துலாமில் சுக்ரன் - ரிஷபத்தில் சுக்ரன் 
இரண்டு ராசிகளுமே சுக்ரனின் ஆட்சிக்கு உட்பட்டவை. இதமான, சுவையான மற்றும் நன்றாக நுண்ணிய வேலைப்பாடுடன் வடிவமைக்கப்பட்ட பொருட்களின் மீது அதிக பற்றுடையவர்கள் . நல்ல பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர்கள். துலா ராசியினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவர்களை தன் தோளில் சுமக்கவும் தயாராக இருப்பவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் அன்பை உணர்ச்சிமிக்க , உலக வழியில் வெளிபடுத்தும் போது, துலா ராசிக்காரர்கள் அவர்களின் தொடர் பேச்சால் அதனை நிறுத்திவிடலாம். 

துலாமில் சுக்ரன் - மிதுனத்தில் சுக்ரன் :
வாழ்க்கையில் ஒரு சக பயணியை போல் உங்களுடன் வருபவர்கள் மிதுன ராசிக்காரர்கள். இவர்கள், புதுமை மற்றும் நல்வாழ்வை தரும் ஒரு அன்பை பகிர்ந்து கொள்வார்கள். தினமும் சில உன்னத அனுபவங்களுக்காக காத்துக் கொண்டே இருப்பார்கள்.    இது நகைச்சுவை, வஞ்சப்புகழ்ச்சி  மற்றும் கிண்டல்  ஆகியவற்றில் மகிழ்ச்சிக்கும் ஒரு ஜோடி. அவர்கள் தங்களுக்க ஒரு ரகசிய மொழியை உருவாக்கி இருப்பார்கள்.

துலாமில் சுக்ரன் - கடகத்தில் சுக்ரன் :
கடகத்தில் சுக்ரன் இருப்பவர்கள் மிகவும் பரிவுள்ளவர்கள். இது அவர்களுடைய ப்ளஸ் . ஆனால் இவர்களின் மனநிலையில் கடல் அலை போன்ற ஏற்ற தாழ்வுகள் துலா ராசியில் சுக்ரன் உள்ளவர்களை கடினப்படுத்தும். கடக ராசியில் சுக்ரன் உள்ளவர்கள் நெருக்கமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள் ஆனால், துலா ராசியில் சுக்ரன் உள்ளவர்கள்  கிண்டல் மூலமாக அன்பை வெளிபடுத்துவார்கள். இத்தகைய உணர்ச்சி சார்ந்த அன்பால் துலா ராசியில் சுக்ரன் உள்ளவர்கள் இயல்பாக இருக்க முடியாத நிலை உண்டாகிறது.  

துலாமில் சுக்ரன் - சிம்மத்தில் சுக்ரன் :

உன்னதமான செயல்கள், சமூகத்தின் மீதுஅக்கறை போன்ற நல்ல பண்புகளால் ஒரு தனித்தன்மையான ஸ்டைலை பெற்று ஒரு நம்பகமான ஜோடியாக இவர்கள் போற்றப்படுவார்கள். ஒருவர் மீது ஒருவர் அளவில்லாத சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டாலும் ஒருவரின் கவனத்தை ஒருவர் எப்போதும் விரும்புவார்கள். இந்த அறிகுறிகள் அவர்களின் நிலையை பொறுத்து அமையும் , மற்றும் அவர்களை ஒரு சிறந்த ஜோடியாக வெளிகாட்ட உதவும். துலாமில் சுக்ரன் உள்ளவர்கள், பிறருடைய அனுபவத்தால் பாடம் கற்று கொள்பவர்கள் .

துலாமில் சுக்ரன் - கன்னியில்  சுக்ரன் :
இரண்டு ராசிகளும் சென்சிடிவ் நரம்பு மண்டலத்தை கொண்டுள்ளன . எல்லாம் நன்றாக அமைந்தால், இவர்களால் இந்த குழம்பிய உலகில் அழகான பயணத்தை மேற்கொள்ள முடியும். எல்லாமே மிகவும் சரியானதாக இருக்க வேண்டும் என்ற இவரது எண்ணத்தால் சில முக்கிய நிகழ்வுகள் நல்ல பலனை கொடுக்க முடியாமல் போகலாம். துலாமில் சுக்ரன் உள்ளவர்கள், சமநிலை சீர்குலைக்க, புதிய உயரங்களை தொட, வழக்கமான விஷயங்கள் தவிர்க்க, ஒரு உளவாளி போல் மாறலாம். கன்னியில்  சுக்ரன் உள்ளவர்கள்  இவர்கள் மேல் முழு நம்பிக்கை இருந்தால், இவர்களை இப்படியே விட்டு விடலாம்.

துலாமில் சுக்ரன் - துலாமில் சுக்ரன் :
ஒருவரின் தேவையை மற்றவரால் உணர முடியும். ஒரு கண்ணாடியை போல் ஒருவரின் அக மற்றும் புற அழகை மற்றவரால் உணர்ந்து கொள்ள முடியும். அவர்கள் இருவருமே சமூக உறவுகள் மற்றும் உறவுகளில் இருமடங்காக இருக்குமாறு ஒரு பொருத்தமான ஜோடி. எந்த விஷயத்தை பற்றியும் அதிகமாக பேசாமல் இருப்பதை முயற்ச்சித்தால் கலை, இசை மற்றும் நினைவுகள்  சார்ந்த விஷயங்களில் அவர்களின் கவனத்தை திருப்பலாம். அவர்கள் இருவரும் சேர்ந்து சொர்க்கத்தை உருவாக்கலாம். இருவருக்குமே ஒன்றாக இருப்பது பிடிக்கும் என்பதால் அவர்களின் தேவை அதற்கான நேரம் மட்டுமே.

துலாமில் சுக்ரன்  - விருச்சிகத்தில் சுக்ரன் 
துலாமில் சுக்ரன் இருப்பவர்களுக்கு கவர்சிகரமான கண்களை பிடிக்கும். அதுவே விருச்சிகத்தில் உள்ளவர்களின் கண்கள் ஆன்மாவிற்குள் ஊடுருவி செல்லும் அளவிற்கு சக்திமிக்கதாக இருக்கும். விருச்சிக ராசிகாரகள் தீவிரமாக நடந்து கொள்ளும்போது, துலாமில் சுக்ரன் உள்ளவர்கள் அந்த நிலைமையை தலைகீழாக திருப்பி விடுவார்கள். 
இருவருமே வலிமையானவர்கள் தான், இருந்தாலும் விருச்சிகத்தில் சுக்ரன் உள்ளவர்கள் சத்தமில்லாத சூழ்நிலையை விரும்புவார்கள். ஒரு வித காந்த இணைப்பை கொண்ட இவர்கள் இணைத்தால் எல்லா சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கும் மிகவும் வித்தியாசமான ஒரு ஜோடியாக தெரிவார்கள்.

துலாமில் சுக்ரன்  - தனுசில் சுக்ரன் :
இங்கே அமைதியற்ற இரட்டையர்கள் இருவரும் மனதைப் போலவே பயணம் செய்கிறார்கள், பொதுவாக சமூக ஆர்வம் கொண்டவர்கள். மனதில் தோன்றியதை செய்ய விரும்புபவர்கள் துலாமில் சுக்ரன் உள்ளவர்கள். தன் எண்ணத்தை நோக்கி செயல்படுபவர்கள் தனுசில் சுக்ரன் உள்ளவர்கள். மக்கள், உலகம் , வாழ்க்கை போன்றவற்றை பற்றிய துல்லிய நோக்கை கொண்டிருப்பார்கள். துலாமில் சுக்ரன் உள்ளவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைபாட்டை கொண்டிருப்பவர்கள். தனுசில் சுக்ரன் உள்ளவர்கள் பலரிடமும் கடலை போடுகிறவர்கள்.


துலாமில் சுக்ரன்  - மகரத்தில் சுக்ரன் :
எதிர்வினைகளின் கூட்டணி இது. ஒரே கோட்டில் எளிய வேலை செய்பவரும் பளு தூக்குபவரும் பயணம் செய்வதை போல் தான் இவர்கள் இருவரும். துலாமில் சுக்ரன் உள்ளவர்கள், வீணாக பொழுதை கழித்து விட்டு, கடைசி நேரத்தில் அழுத்தங்களை சுமந்து வேலையை முடிப்பார்கள், மகரத்தில் சுக்ரன் உள்ளவர்கள், அவர்கள் விரும்பிய வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி அதனை முடிப்பார்கள். சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ, இருவருக்குமே முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உண்டு. 

துலாமில் சுக்ரன் - கும்பத்தில் சுக்ரன் :
குறுகிய மனப்பான்மை கொண்ட மக்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்ப்பார்கள். ஆனால் முரண்பாடான கருத்துகளை கொண்டவருடன் போட்டி போடுவார்கள். பண்பாடுகளை மீறுபவராக கும்ப ராசியில் சுக்ரன் உள்ளவர்கள் இருப்பதால் துலாமில் சுக்ரன் உள்ளவர்கள் கோபம் அடையலாம். இரண்டு பேருக்குமே அவர்களுக்கான  ஒரு வெளி தேவைப்படுகிறது. இவர்களுடன் ஒத்து போவது துலாமில் சுக்ரன் உள்ளவர்களுக்கு சிறிது கஷ்டமாக இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக, புதிய கோணங்களில் மற்றும் வியக்கத்தக்க பரந்த பார்வையுடன் ஈர்க்கப்படுவார்கள் .

துலாமில் சுக்ரன் - மீனத்தில் சுக்ரன் :
துலாமில் சுக்ரன் உள்ளவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள், மாறாக மீனத்தில் சுக்ரன் உள்ளவர்கள் பேசவே மாட்டார்கள் . இது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். 
இவர்களின் இருவரின் வாழ்க்கை தீமையில் ஒரு நன்மை  போல் சில நேரம் இருக்கலாம். காதல் கிரகமான சுக்ரனை கடலுடன் இணைப்பதால் ஒரு அர்த்தமுள்ள இணைப்பாகவும் இதனை உணர முடிகிறது. அவர்கள் ஆன்மாவைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு ஒரு பரிசைப் பகிர்ந்துகொள்கிறார்கள், இது அவர்களுக்கு மனதிற்கும்  ஆன்மாவிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த உதவுகிறது.