கீல்வாதத்திற்கான உணவுகள்

கீல்வாதத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான உணவு அட்டவணை இதோ..

கீல்வாதத்திற்கான உணவுகள்

நமது முன்னோர்கள் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை காரணமாக தற்போது நாம் அனுபவிக்கும் பல நோய்களை அனுபவிக்கவில்லை. புதிய உணவுகள், பாரம்பரிய உடற்பயிற்சி முறைகளான யோகா, தியானம் போன்றவை, மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கைமுறை, சூரிய ஒளியில் வேலை செய்வது போன்ற செயல்கள் அவர்கள் உடலை ஆரோக்கியமாக இருக்க வைத்தன. ஆனால் இன்றைய நிலைமை வேறு.

இந்த காலத்து முதியோர்கள் பலர் அவதிப்படும் ஒரு முக்கிய பாதிப்பு கீல்வாதம். வயது அதிகரிக்கும்போது தானாகவே இந்த பாதிப்பு பலருக்கும் வந்துவிடுகிறது. எலும்பு சீர்குலைவு காரணமாக வீக்கம் உண்டாகிறது, இதனைத் தொடர்ந்து வலி உண்டாகிறது. இதற்கு  காரணம், உடல் பருமன், காயம் என்று எதுவாகவும் இருக்கலாம். இந்த நிலை மிகவும் அதிக வலியைத் தரக்கூடியது. ஆகவே இந்த வலியைக்  கட்டுப்படுத்த சில குறிப்பிட்ட உணவு அட்டவணையை பின்பற்றுவது  நல்லது. ஆகவே கீல்வாதம் பாதித்தவர்கள் அவர்கள் வலியை சிறந்த முறையில் நிர்வகிக்க கீழே உள்ள பதிவைப்  படித்து அந்த உணவு அட்டவணையை தெரிந்து கொள்ளுங்கள்.

புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் :

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்  மற்றும் மினரல் அதிகம் இருப்பதால் இவற்றை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். காரோட்டின் சத்து உள்ள பசலைக்  கீரை, பச்சை இலையுடைய காய்கறிகள் , பெர்ரி  போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் 2-3 பழங்கள் மற்றும் 5 காய்கறிகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புளிப்பு பழங்களான நெல்லிக்காய் , எலுமிச்சை போன்றவற்றை உணவுக்கு பின் எடுத்துக் கொள்வது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ளுங்கள் :

பேக்கரி உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளன சமோசா , பக்கோடா , பூரி, பாஸ்திரி , சிப்ஸ், குக்கி, மிக்ஸர்,மற்றும் இதர சிற்றுண்டி வகைகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளன. பொரித்த உணவுகள், குறிப்பாக ஆரோக்கியமற்ற கொழுப்புகளைக் கொண்ட உணவுகள் அழற்சியுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆகவே இவற்றை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மேலும் இந்த வகை உணவுகள் மூட்டுகளில் எடையை அதிகரிக்கின்றன. அதனால் உங்களால் நடக்கவோ, நகரவோ முடியாமல் போகலாம்.

எடையைக் குறையுங்கள் :

உடைந்த நாற்காலியில் அதிக பாரத்தை ஏற்றுவது போன்ற நிலைதான் கீல்வாதம் உள்ளவர்கள்  உடல் எடை அதிகரிப்பது. ஆகவே எப்போதும் நடந்து  கொன்டே இருங்கள். இரத்தத்தில் வைட்டமின் டி 3 அளவு சரியான அளவில் இருப்பதை  உறுதி செய்து கொள்ளுங்கள்.

கீல்வாதம் பற்றிய ஆய்வு :

சல்பராபென் என்னும் கூறு முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் உள்ளது. இது கீல்வாத வளர்ச்சியை குறைக்கிறது மற்றும் மூட்டு பகுதிகளில் உண்டாகும் சேதங்களைத் தடுக்கிறது  என்று  கீவாதம் பற்றி 2013 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆயவு குறிப்பிடுகிறது. . காலையில் வெந்தய நீர் பருகுவதால் இயற்கையாகவே அழற்சி குறைய உதவுகிறது. ஆகவே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் அரை க்ளாஸ் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை பருகவும். இல்லையென்றால் அதனை மென்றும் சாப்பிடலாம்.

கீல்வாத வலியைக் குறைக்க, செய்யவேண்டிய சில உடற்பயிற்சிகள் :

சரியில்லாத எண்ணெய்களை பயன்படுத்துவது  ,பெரும்பாலான அழற்சிக்கு காரணமாக இருக்கலாம். கடுகு எண்ணெய் , வேர்க்கடலை எண்ணெய் போன்ற சுத்தமான மற்றும் ஆர்கானிக் எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்யை  சமையலில் பயன்படுத்தவும். ஆர்கானிக் அல்லது கோல்டு கம்ப்ரெஸ் என்று லேபிளில் எழுதப்பட்ட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். அடர் நிறம் கொண்ட பாட்டில்கள்  அலல்து கண்ணாடி பாட்டில்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.

அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒமேகா 3 :

மூட்டு வலிகளை  ஓரளவிற்கு  குறைக்க DHA மற்றும் EPA சத்துகளின் மிகச்சிறந்த ஆதாரமாக விளங்கும் மீன் மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளைப்  பயன்படுத்தலாம். சியா விதைகள் , வால்நட், பசலைக்கீரை, பரட்டைக்கீரை , ஆளி விதைகள் போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளலாம். கீல்வாத நோயாளிகள் தினமும் 300கிராம் மீன் உட்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் மீனை  பொரித்து உட்கொள்ளாமல் வேகவைத்து அல்லது பேக் செய்து உட்கொள்ளலாம்.

கீல்வாதம் தொடர்பான ஆதாரபூர்வமான ஆராய்ச்சியின் வழிகாட்டுதல் படி மேலே உள்ள உணவு  பற்றிய விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இந்த வலியைக் குறைக்க சிலர்  மருத்துவ உதவியை நாடுகின்றனர், சிலர் ஆயுர்வேத சிகிச்சையை பின்பற்றுகின்றனர். நேச்சுரோபதி , அக்குபஞ்சர் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வலியை குறைக்க முயற்சிக்கின்றனர். இவை அனைத்தும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமாகும்.