கழுத்து தசை வலியை குறைக்கும் வழிகள் !

கழுத்தில் உள்ள தசைகள் மிகவும் முக்கியமானது. இவற்றை கொண்டுதான் நமது தலையை திருப்பவும், ஆட்டவும் முடியும்.கழுத்து தசைகளை வலிமையாகவும், சிரம படுத்தாமலும் வைத்துக் கொள்வது நல்லது.

கழுத்து தசை வலியை குறைக்கும் வழிகள் !

உடல் என்பது எலும்புகள் மற்றும் தசைகளால் உருவானது. மனித உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது இந்த எலும்புகளும் தசைகளும் தான். நமது உடலில் இருக்கும் எலும்புகள் பல்வேறு வகையான ஸ்டீல்களை விட  பலமானது என்பது உங்களுக்கு  தெரியுமா? மனித உடலில் 206 எலும்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தசைகளின் சரியான  எண்ணிக்கை என்ன என்பது நமக்கு தெரியாது . 

உடலில் தசைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நமது கைகள், கால்கள், கழுத்து போன்றவை தானாக இயங்க இவை மிகவும் முக்கியம். தசைகள் புரதத்தால் ஆனவையாகும். 
துரதிஷ்டவசமாக, வயது முதிர்வு, மற்றும் அழுத்தத்தின் காரணமாக இந்த தசைகள் பலவீன மடைகின்றன. இதனால் தினசரி வேலைகளை செய்ய கடினமான நிலை உண்டாகிறது. பொதுவாக இந்த அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகும் தசைகள், கை , கால், தொடை, மேல் முதுகு, கழுத்து போன்றவற்றில் இருக்கும் தசைகள் ஆகும். குறிப்பாக இவற்றில் அதிகம் பாதிக்க படுவது கழுத்து தசைகள் தான். நாள் முழுதும் நமது கழுத்து பகுதி மட்டும் அதிக அளவில், சுருங்கி, விரிந்து கொன்டே இருக்கும் தண்மை கொண்டது. உடலில் மிக வலிமையான பகுதி  இந்த கழுத்து பகுதியாகும்.  கழுத்து என்பது 7 சிறு சிறு டிஸ்க்குகளால் ஆனது. இந்த டிஸ்குகளுக்கு  இடையில் ஒரு திரவம் படர்ந்திருக்கும். 

கழுத்தில் உள்ள தசைகள்  தலை உயர்த்தி பிடிப்பதோடு மட்டும் இல்லாமல், மூளையின் இரத்த ஓட்டத்திற்கும், சுவாசத்திற்கும்  உதவி புரிகிறது. ஆகவே கழுத்து தசைகளை வலிமையாகவும், சிரம படுத்தாமலும் வைத்துக் கொள்வது நல்லது. சில விபத்துகள், காயங்கள், அல்லது மன அழுத்தம் கூட, கழுத்து தசைகளை சிரம படுத்தலாம். வயது முதிர்ச்சியின் காரணமாகவும் கழுத்து தசைகளில் வலி ஏற்படலாம். இவை நாட்பட்ட வலியாகவும் மாறலாம். கழுத்து தசைகளில் ஏற்படும் இத்தகைய நாட்பட்ட வலி “செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ்” என்று அழைக்கப்படுகிறது. செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் என்பது கழுத்து தசைகளில் வயது முதிர்வு அல்லது தொடர்ந்த அழுத்தம்  காரணமாக ஏற்படும் காயமாகும்.  இந்த நோய் ஏற்பட வேறு சில காரணங்கள் இருந்தாலும் இவை இரண்டும் முக்கியமான காரணமாக உள்ளது. அதிக எடை, ஒழுங்கற்ற வாழ்க்கை  முறை, முதுகுத்தண்டில் முன்பு எப்போதாவது ஏற்பட்ட காயம், போன்றவை செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் உருவாக காரணமாக இருக்கலாம். சிலருக்கு பாரம்பரியமாகவும் இது உண்டாகலாம். ஒருமுறை இந்த நோய் உண்டானால், மறுபடி கழுத்து தசைகளுக்கு பழைய வலிமை கிடைக்காது. மாத்திரைகளால் அதன் வலியை குறைக்க அல்லது கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆகவே, இந்த நோய் வராமல் தடுக்கும்  முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். 

எடை குறைப்பு:
எடை குறைப்பு என்பது செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் நம்மை நெருங்காமல் இருக்க ஒரு நல்ல தீர்வாகும். எடை குறையும் போது கழுத்து பகுதியில் இருக்கும் அழுத்தம் குறைகிறது. இதனால் அந்த பகுதி காயம் ஏற்படாமல் தடுக்க படுகிறது.

சமச்சீர் உணவு:
பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சமச்சீர் உணவை எடுத்துக் கொள்வதால் செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் தடுக்க படுகிறது. கால்சியம், பொஸ்போரோஸ், வைட்டமின் டி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை அடைந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. சாலட் அல்லது வேக வைத்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வதால் செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் வராமல் தடுக்கலாம்.

ஒத்தடம்:
கழுத்து வலி ஏற்படும்போது, அதனை குறைக்க வெந்நீர் அல்லது குளிர்ந்த நீர் ஒத்தடம் செய்வது நல்ல பலனை கொடுக்கும். கழுத்து பகுதியில், வெந்நீரையும் குளிர்ந்த நீரையும் மாற்றி மாற்றி ஒத்தடம் கொடுக்கும்போது, இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து  பகுதியில் உள்ள தசைகள் ரிலாக்ஸ் ஆகின்றன. கழுத்தில் வீக்கம் அல்லது சிவப்பு நிறமாக தோன்றும்போதும் இதனை முயற்சிக்கலாம். ஒத்தடம் தருவதால் வலி குறையும்.

எப்சம் உப்பு:
எப்சம் உப்பில் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இதனால் உடலில் pH  அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. வலிமை இழந்த தசைகளில் உண்டாகும் வீக்கம் மற்றும் சோர்வை குறைக்க உதவுகிறது. எப்சம் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் செர்விக்கல் ஸ்பாண்டிலோஸிஸ் தடுக்கப்படுகிறது.

பூண்டு:
வீக்கத்தை குறைக்கும் தன்மை பூண்டிற்கு இயற்கையாகவே உண்டு. ஆகவே கழுத்து தசைகளில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க பூண்டை உணவில் சேர்த்துக்  கொள்ளலாம் . இது ஒரு இயற்கை தீர்வாகும். பூண்டு எண்ணையை கழுத்து பகுதியில் தடவுவதால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டு எண்ணெய்யை சூடாக்கி, கழுத்து பகுதியில் தடவுவதால் வலி குறையும். தினமும் காலையில் 2-3 பூண்டு பற்களை கடித்து மென்று விழுங்கிவிட்டு 1 ஸ்பூன் தேனை பருகலாம். பூண்டு எண்ணெய்யுடன் சேர்த்து தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் தடவலாம்.

இஞ்சி:
இஞ்சிக்கும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உண்டு. இது கழுத்து பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, வலியை குறைக்கிறது. 1 துண்டு இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக மேலும் கொதித்தவுடன் அதனை எடுத்து வடிகட்டி குடிக்கும்போது கழுத்து வலி குறையும்.