பல்லாண்டு வாழ காபி குடியுங்கள் !

காபி பிரியர்களின் பலருக்கும் அவர்களின் 45 வயதிற்கு மேல் இன்னும் அதிகமாக காபியின் மீது ஈர்ப்பு வரும். 

பல்லாண்டு வாழ காபி குடியுங்கள் !

காபி  குடிப்பது என்பது இன்றைய நாட்களில் ஒரு கெட்ட பழக்கமாக பார்க்கப்படுகிறது. அதிகமாக காபி குடிக்கும் பெரியவர்களை  அவ்வாறு குடிப்பது உடலுக்கு கெடுதல் என்று சொல்லி கொன்டே இருப்போம். பெரியவர்களுக்கு காபி குடிக்காமல்  இருப்பது கை  ஒடிந்தது  போல் இருக்கும்! நிறைய  காபி குடிப்பது தவறா? இல்லை! 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் காபி குடிப்பது தவறே இல்லை ; உடலுக்கு நல்லது. இதுதான் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு !

ஒரு கப் காபி என்பது 16 டேபிள் ஸ்பூன் அளவு கொண்டதாகும். 

பார்சிலோனாவில் உள்ள யுரோப்பியன் சொசைட்டி ஆப் கார்டியோலஜி காங்கிரஸ் நடத்திய 10 வருட ஆய்வில், ஒவ்வொரு நாளும் 4 கப் காபி அருந்துவோருக்கு இறப்பின் அபாயம் 64% குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தினசரி எடுத்து கொள்ளும் 2 கப் காபி அவர்களின் இறப்பின் அபாயத்தை 30% வரை குறைப்பதாக கூறுகிறது. இந்த முடிவுகள் இளைஞர்களுக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

தினசரி 1 கப் காபி பருகியவர்களை மேலும் 2 கப் அதிகமாக பருக சொல்லி ஆராய்ச்சி செய்ததில் அதன் முடிவுகள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. அதிகமாக  பருகிய இரண்டு கப் காபி ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு ,  அனைத்து விதமான இறப்புகளும் 22% வரை குறைத்திருப்பதாக  ஆய்வுகள் கூறுகின்றன. 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சொல்லி கொள்ளும்படியான மாறுதல்கள் ஏற்பட வில்லை. 

அதிகம் காபி குடிப்பவர்களுக்கு இதய அபாயங்கள், ஸ்ட்ரோக் , செரிமான நோய்கள், போன்றவை 7-12% குறைந்து காணப்படுகிறது. காஃபின் இல்லாமல் காபி குடிப்பவர்களுக்கு இது பொருந்தும். காபி  குடிப்பது ஆற்றலை அதிகரிக்கிறது. டோபமைன் போன்ற நரம்பியகடத்திகளை ஊக்குவித்து அதிக நியூரோன்களை எரிக்க உதவுகின்றன. இதனால் மூளையின் செயல் திறன் மேம்பட்டு , அறிவாற்றல் பெருகுகிறது. காபி கொழுப்பை எரிபொருளாக மாற்ற  உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  உடல் நிலையை மேம்படுத்துகிறது. காபி குடிப்பதால், உலக அளவில்  300மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட டைப் 2 நீரிழுவ நோய் கட்டுப்படுகிறது. காபியின் ஒவ்வொரு கப்பிலும் ரிபோபிளவின், பேன்தொதெனிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் நியாசின் உள்ளது.  

ஒரு நாளில் 4 கப்புகளுக்கு மேல் பருகும்போது மனச்சோர்வு கட்டுப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. பலவகை  புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதயநோய் அல்லது ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது. அதிகமான அன்டி ஆக்ஸிடென்ட்களை கொடுக்கிறது. எந்த சுவையூட்டிகளும் சோடாக்களும் சேர்க்கப்படாத வெறும் காபி ஒரு சிறந்த ஆன்டிஅண்டாக்ஸிடென்ட் ஆகும். இதனால் பல வித நோய் அபாயம் குறைக்கப்படுகிறது. 

இனி வீட்டில் உள்ள பெரியர்வர்கள் விரும்பி காபி கேட்டால் வேண்டாம் என்று சொல்லாமல் கொடுங்கள். அவர்கள்  பல்லாண்டு வாழட்டும்.