கவிஞராகக் கூடிய ராசிகள்

கவிதை எழுதும் திறன் எந்த ராசிக்காரர்களுக்கு உண்டு என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்

கவிஞராகக் கூடிய ராசிகள்

உங்களுக்கு கவிதை எழுதத் தெரியுமா? கவிதை உங்களுக்கு அருவி மாதிரி கொட்டுமா? அல்லது வார்த்தைகளைத் தேடித் தேடி கலைத்து விடுவீர்களா? கவிதை எழுதுவது உங்கள் பொழுதுபோக்கா அல்லது உங்கள் நண்பர்கள் ஆசைக்காக கவிதை எழுதுவீர்களா? ஏன் இதையெல்லாம் கேட்கிறோம் என்று குழப்பமா? உண்மையில், சில குறிப்பிட்ட ராசியை சேர்ந்தவர்கள் கவிதைநயத்துடன் பேசுவார்கள், அழகாக கவிதை எழுதுவார்கள், சுருக்கமாக சொல்லப் போனால் சிறந்த கவிஞராக இருப்பார்கள். நீங்கள் எப்படி என்று அறிந்து கொள்ளத்தான் இந்த அடுக்கடுக்கான கேள்விகள். கவிஞருக்கான அம்சங்கள் உள்ள ராசிகள் என்னவென்று இப்போது பார்க்கலாமா?

மீன ராசி :
மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் , ஆழ் மனதுடன் அதிக தொடர்பு கொண்டவர்கள் மீன ராசியினர்.  இவர்களுக்குக் கற்பனைத் திறன் மிக அதிகம். அவர்களுடைய கற்பனைத் திறனை வார்த்தைகளாக மாற்றும் திறன் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. உலகை அவர்கள் பார்க்கும் பார்வை பல நேரங்களில் வித்தியாசமாக இருக்கும். மிகவும் அழகான, தனித்தன்மை பெற்ற கவிதைகளை அவர்கள் படைப்பார்கள்.

கடக ராசி :
எதையும் மறைக்கும் சுபாவம் கடக ராசியினருக்குக் கிடையாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரு வலிமையான கருத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கருத்தைக் கவிதை வடிவத்தில் வெளிபடுத்த கடக ராசியினர் முயற்சிப்பார்கள். கடக ராயினரிடம் நீங்கள் சென்று உங்களுக்கு பொருத்தமான ஒரு கவிதையைக் கேளுங்கள். அது அவராக எழுதியதாக இருக்கலாம் அல்லது கேள்விப்பட்ட கவிதையாக இருக்கலாம் என்று கூறுங்கள். உங்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் உங்களுக்கு மிகவும் பொருந்தும் வகையில்; அவர்கள் உங்களுக்காக ஒரு கவிதைத் தொகுப்பை வழங்குவார்கள்.

விருச்சிக ராசி :
விருச்சக ராசியினரின் கவிதையில் எதுகை மோனை இல்லாமல் இருந்தாலும், கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்பது உறுதி. பழைய நினைவுகளும் விருச்சிக ராசியினருக்கு அழகாகத் தோன்றும். மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் சூழ்நிலை, இவர்களுக்கு மிகுந்த அழகாகத் தோன்றும். இதனை அவர்கள் கவிதையாக மொழிபெயர்ப்பார்கள்.

துலாம் ராசி :
கலைகளை ரசிக்கும் குணம் கொண்ட துலாம் ராசியினர், சின்னச் சின்ன விஷயங்களிலும், சம்பவத்திலும் அழகைக் காண்பார்கள். ஒரு சூழ்நிலையில் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களை தெளிவாக ஆராய்ந்து நல்லதின் மீது கவனம் செலுத்துவார்கள். ஒரு விஷயத்தில் உள்ள நல்லது மற்றும் கெட்டதை குறித்த அழகான வரிகளைக் கொண்ட கவிதையை உருவாக்கி அதில் நல்ல விஷயத்தை அடிக்கோடிட்டு வெளிபடுத்தும் திறமை அவர்களுக்கு உண்டு.

மிதுன ராசி:
சிறந்த தகவல் தொடர்பாளராக இருப்பவர் மிதுன ராசியினர். வார்த்தைஜாலம் மிக்கவர்கள் இவர்கள் என்றும் கூறலாம். பேசுவதை விட எழுதுவதின் மூலம் அவர்களின் உணர்வுகளை சிறப்பாக வெளிபடுத்தும் தன்மைக் கொண்டவர்கள் மிதுன ராசியினர். இவர்களின் வார்த்தைகள் மட்டும் கவிதையாக மாற்றம் பெறுவதில்லை, இவர்களின் மனமும் பல நேரங்களில் கவிதைத்துவமாக யோசிக்கும்.