கண் நோய்

கண் நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், வாரத்திற்கு ஒரு முறை சனி நீராடுவதையும் பழக்கப்படுத்திக் கொண்டால் முதுமையிலும் தெளிவான பார்வையோடு இருக்கலாம். 

கண் நோய்

கண் நோய்

கண் பிரச்சனைகள் தூசிகளினாலும், கிருமிகளினாலும், சத்துக் குறைபாட்டினாலும் கண்களுக்கு போதிய ஓய்வை தருவதில்லை போன்ற காரணங்களினாலும் ஏற்படுகிறது. கண் பிரச்சினைகளுக்கான தீர்வை இக்கட்டுரையின் மூலம் காணலாம். 

கண் பிரச்சனைகளுக்கான நிவாரணம்:

  • கண் எரிச்சல் நீங்க: அதிமதுரம், கடுக்காய், திப்பிலி மற்றும் மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறையும். 
  • கண்கள் குளிர்ச்சி பெற: கடுக்காய்த் தோல் மற்றும் நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பொடியாக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் குளிர்ச்சி பெறுவதோடு, உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலையும் குணமாக்கும். 
  • கண் வலி போக்க: திராட்சைப் பழங்கள், ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் சீரகத்தையும் சேர்த்து அரைக்கவும். அந்த கலவையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர கண் வலியை போக்கும். 
  • கண் வீக்கம் குறைய:ஒரு கப் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் சோம்பை போட்டு அது பாதியாக குறையும் வரை கொதிக்க விடவும். இதை ஒரு டீஸ்பூன் காலையிலும், மாலையிலும் எடுத்துக் கொள்ள கண் வீக்கம் குறையும். 
  • பார்வை குறைபாடுகளை போக்க: அதிமதுரத்தையும், சீரகத்தையும் சரிசமமாக எடுத்து பொடியாக்கி  வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு நாளும் கால் டீஸ்பூன் அளவிற்கு இந்த பொடியை ஒரு டீஸ்பூன் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள பார்வையில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் நீங்கும்.
  • கண்பார்வை கூர்மை பெற: தான்றிக்காய் பொடியை கால் ஸ்பூன் தேனில் குழைத்து காலையில் சாப்பிட்டு வர கண்பார்வை கூர்மை பெறும். 
  • கண் நோய் நீங்க:  வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளித்து வந்தால் பல கண் பிரச்சனைகளை குணமாக்கும். வைட்டமின் ஏ, இ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் உள்ள உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டு வர கண் நோய் குணமாகும். 
  • மாலைக்கண் குணமாக: வேப்பங்கொழுந்து, ஓமம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். 
  • கண் விழி விறைப்பை குணக்க: மாஅருகம்புல் சாறு மற்றும் கேரட் சாற்றையும் சமமாக எடுத்து  ஒன்றாக கலந்து ஓரிரு மாதங்களுக்கு தினமும் ஒரு முறை குடித்துவர கண் விழி விறைப்பு நோய் குணமாகும். 
  • கண்ணில் நீர் வருதலை தடுக்க: தினமும் 5 அல்லது 10 நாவல் பழங்களை சாப்பிட்டு வர கண்ணில் இருந்து நீர் வருதலை தடுக்கும். 
  • கண்புரை குணமாக: முதல் நாள் இரவே ஊறவைத்த 8 அல்லது 10 பாதாம் பருப்புடன் ஒரு டீஸ்பூன் மிளகையும் சேர்த்து அரைத்து ஒரு கப் தண்ணீரில் இந்த கலவையை கலந்து தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது தேனையும்  இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதை தினமும் ஒருமுறை குடித்துவர ஆரம்ப நிலையிலுள்ள கண் புரையை நீக்கும். 
  • தெளிவான பார்வை பெற: தேனில் கலந்து நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர தெளிவான பார்வை கிடைக்கும். 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இயற்கையானது. இவைகளை உபயோகிப்பதால் கண்ணுக்கும், உடலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கண் நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதுடன், வாரத்திற்கு ஒரு முறை சனி நீராடு வதையும் பழக்கப்படுத்திக் கொண்டால் முதுமையிலும் தெளிவான பார்வையோடு இருக்கலாம்.