புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள் 

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு. புகைபிடித்தல் புற்று நோயை உண்டாக்கும். இது எல்லா திரைப்படத்தின் ஆரம்பத்திலும்  ஹீரோவால் பேசப்படுவதாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள் 

புற்று நோயால் இறப்பவர்களில் கால் பங்கு எண்ணிக்கை புகை பிடிப்பவர்கள் தான். யுகே வில் நடந்த ஒரு ஆய்வில் , அந்த நாட்டில் 10 மில்லியன் மக்கள் புகை பிடிப்பதாகவும் , அதில் 3-4 மில்லியன் மக்கள் அதனை விட முயற்சிப்பதாகவும் கூறுகிறது. அந்த அரசாங்கம் புகையிலை தடுக்கும் திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தி 2022ம் ஆண்டுக்குள்  புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

புகைபிடிப்பதை விடுவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

கோல்டு டர்கி (Cold Turkey):
புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட இது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். புகைபிடிக்கும் பழக்கத்தை உடனடியாக விட வேண்டும் என்று நினத்தவர்களில் 25% பேர் வெற்றி அடைந்துள்ளனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. இந்த வெற்றியாளர்களின் எண்ணிக்கை, நாளடைவில் இந்த பழக்கத்தில் இருந்து விடு பட முயற்சிப்பவர்களை விட அதிகம்.
கோல்டு டர்கி முறையை கையாள நினைப்பவர்கள் , ஒரு நாளை முடிவு செய்து, அந்த நாளில் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நீங்கள் முடிவு செய்யும் நாளில் எந்த ஒரு மன அழுத்தம் தரும் வேலைகள் மற்றும் பார்ட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். 

ஒருமுறை கூட புகைபிடிக்க கூடாது என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக எந்த ஒரு தேடலும், 5 நிமிடத்திற்கு மேல் சலனத்தை ஏற்படுத்தாது என்பது அறிவியல் ஆய்வின் முடிவு. ஆகவே புகை பிடிக்க வேண்டும் என்ற சலனம் மனதில் எழும்போது அடுத்த 5 நிமிடங்கள் தீர்மானமாக அதை செயல் படுத்தாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றியடைகிறீர்கள்.

பேட்ச், கம் மற்றும் மாத்திரைகள்:
சிகரெட்டின் மேல் உள்ள ஈடுபாட்டை தவிர்க்க, அதில் இருக்கும் நிக்கோட்டினை வேறு விதங்களில் உடலில் பரவ செய்வது நிகோடின் மாற்று சிகிச்சை  ஆகும். இன்றைய நாட்களில் இந்த சிகிச்சைக்கு பேட்ச் , இன்ஹேலர் ,கம், மற்றும் மாத்திரைகள் பயனப்டுத்தப்படுகின்றன. இதனை பயன்படுத்தும்போது விரைவில் புகைப்பழக்கத்தில்  இருந்து மீளும்  வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 

இந்த முறையில் நிகோடின் மட்டுமே உடலுக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால் சிகரெட்டில் நிக்கோட்டினுடன் சேர்த்து தார் ,மற்றும் கார்போன் மோனோ ஆக்சைட் போன்றவையும் உள்ளே செல்கின்றன. நிக்கோட்டினையே விட ஆபத்து விளைவிப்பது இந்த இரண்டு பொருட்களும். ஆகையால் நிகோடின் மாற்று சிகிச்சை சிகரெட் பழக்கத்தை விட மேலானது. ஆனாலும், ஒரு போதைக்கு மாற்றாக இன்னொரு போதை என்பது தவறான செயலாகும். ஆகவே இந்த சிகிச்சை நீண்ட நாடுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

எலக்ட்ரானிக் சிகரெட் :
எலக்ட்ரானிக் சிகரெட் என்பது ஒரு கையடக்க எலக்ட்ரானிக் சாதனம் ஆகும். புகை பிடிக்கும் ஆவலை நிறைவேற்ற பயன்படுத்தும் ஒரு பொருளாகும்.  இதில் நிக்கோட்டின்  திரவ வடிவத்தில் கொடுக்கப்பட்டு, அதனை சூடாக்கி  நுகரும் போது ஆவியாகி உள்ள செல்லும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தும் போது உடல் செல்களில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், இது மிகவும் நவீனமுறை என்பதால், இதன் பாதிப்புகள் இன்னும் வெளிச்சத்துக்கு வர வில்லை. எனினும் இதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.

ஹைப்னோடிசம் :
இந்த முறையில் பல ஆயிரம் பேர் புகை பழக்கத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். நிகோடின் உடலில் இருந்து வெளியேறுவதற்கு சில தினங்களே ஆகும். அதன் பிறகு மனதின் சலனத்தை கட்டுப்படுத்துவதே சவாலான விஷயம். அதனை ஹைப்னாட்டிசம் எளிதாக செய்யும். மனதை தளர்த்தி சிகரெட்டிற்கான தேடலை கட்டுப்படுத்தும்.

சிகரெட் பழக்கத்தை கைவிடும் போது கீழே குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை விட்ட,
* 20 நிமிடம் கழித்து  உங்கள் நாடி துடிப்பு அளவு இயல்பாகும்.
* 8ம் மணி நேரம் கழித்து உங்கள் ஆக்சிஜென் அளவு இயல்பிற்கு திரும்பும் மற்றும் நிகோடின் , கார்போன் மோனோ ஆக்சைட் அளவு பாதியாக குறையும்.
* 48 மணி நேரம் கழித்து உடலில் இருந்து நிகோடின் முழுமையாக வெளியேறி இருக்கும் . ருசித்தல்  மற்றும் நுகர்தல் ஆகியவை மேம்பட்டிருக்கும் . மாரடைப்பின் அபாயம் குறைந்திருக்கும்.
* 2-12 வாரங்கள் கழித்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
* 3-9 மாதங்கள் கழித்து, நுரையீரல் செயல்பாடு 10% மேம்பட்டிருக்கும்  , இருமல் குறைந்திருக்கும்.
* 1 வருடம் கழித்து , இதய நோயின் தாக்கம் புகை பிடிப்பவர்களை விட பாதி அளவு குறைந்திருக்கும்.
* 10 வருடம் கழித்து நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயம் புகை பிடிப்பவர்களை காட்டிலும் பாதியாக குறைந்திருக்கும்.
* 15 வருடங்கள் கழித்து, புகை பழக்கம் இல்லாதவருக்கு மாரடைப்பு வர இருக்கும் சாத்திய கூறுகளை ஒத்து இருக்கும்.

ஆச்ச்ர்யமாக இருக்கிறதா? இன்றே  புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். அடுத்த வினாடி முதல் மேற்கூறிய மாற்றங்களை உணரலாம்.