இரவு நேர வேலை செய்வதால் மார்பக புற்று நோய்

ஒவ்வொரு முறையும் புற்று நோய் மருத்துவமனையை கடக்கும்போது மனம் அழும். எத்தனை ஊசிகள்,எத்தனை மருந்துகள், எத்தனை வலிகள்.

இரவு நேர வேலை செய்வதால் மார்பக புற்று நோய்

புற்று நோய் என்பது யாருக்கும் வரக் கூடாத ஒரு நோய். புற்று நோயின் விளைவுகளை நினைத்து பார்க்க கூட பயமாக தான் உள்ளது. இன்றைய நாட்களில் சிறு குழந்தைகள் கூட புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது வேதனை அளிக்க கூடிய ஒரு விஷயம்.

புற்று நோய் என்பது அணுக்களின் அசாதாண வளர்ச்சி. கட்டுப்படுத்த முடியாத படி  இவை வளர்ந்து பரவும் தன்மை உடையது. மற்றும் புற்று  நோய் என்பது, ஒரு நோய் அல்ல. நூறு பல தரப்பட்ட நோய்களை ஒருங்கே கொண்டு உருவாவது. உடலின் எந்த திசுவிலும் இந்த நோய் உண்டாகலாம். ஒவ்வொரு உடல் பகுதியிலும் ஒவ்வொரு விதத்தில் இதன் வளர்ச்சி மாறுபடும். புற்று நோய் செல்கள் உருவாகும் இடத்தை கொண்டு, அதன் பெயர் வழங்கப்படுகிறது.

புற்று நோய், இறப்பிற்கான அறிகுறி அல்ல. பல வித புற்று நோய்களுக்கு மருந்துகள் உள்ளது. இவை குணப்படுத்தக் கூடியவையே. கட்டிகள் எல்லாம் புற்று நோய்க்கான அறிகுறிகள் இல்லை. வேகமாக பரவக்கூடிய வீரியம் நிறைந்த கட்டிகளே புற்று நோய் கட்டிகள். புற்று நோய் ஒரு தொற்று நோய் அல்ல. தோல் புற்று நோய் பொதுவாக ஆண் பெண் இருவருக்கும் ஏற்படக்கூடியதாகும். ப்ரோஸ்டேட் கேன்சர் என்று அழைக்கப்படும் ஆண்மை சுரப்பி புற்று நோய் ஆண்களுக்கு அதிகம் ஏற்பட கூடியதாகும். பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்று நோய் ப்ரெஸ்ட் கேன்சர்  என்று சொல்லப்படும் மார்பக புற்று நோய்.

மார்பக புற்று நோய் அறிகுறி:
உலக அளவில் பெண்கள் அதிகம் பேர் இந்த மார்பக  புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக திசுக்களில் உண்டாகும் கட்டி, மார்பக வடிவத்தில் ஏற்படும் மாற்றம், சருமத்தில் குழிகள் ஏற்படுவது, மார்பகத்தில் இருந்து நீர் வெளியேறுவது, மார்பகத்தில் சிவப்பு திட்டுக்கள்  தோன்றுவது போன்றவை மார்பக புற்று நோயின் அறிகுறியாகும்.

யாருக்கு ஏற்படும்?
மார்பக நோயால் இறக்கும் விகிதம் 1989-2015 வரை 39% வரை குறைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா கேன்செர் சொசைட்டி கூறுகிறது.  மார்பக புற்று நோய் ஏற்படுவது மற்றும் அதனால் ஏற்படும் இறப்பு விகிதம் லத்தின், ஆசியா நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு வெள்ளைக்கார பெண்களை விட குறைந்து காணப்படுகிறது, 
உடல் பருமன் உள்ளவர்கள், உடற் பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், மது அருந்துபவர்கள், மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் , முன்னோர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

நைட் ஷிஃப்ட் :
மார்பக புற்று நோய்க்கு இவற்றை தவிர தற்போது மற்றும் ஒரு அறிகுறி அறியப்பட்டுள்ளது. என்விரான்மென்டல் ஹெல்த் பெர்ஸ்பெக்ட்டிவ் என்ற நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்தின் படி, இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் வெளியிடப்படும் அதிக பட்ச ஒளி, ஹார்மோன் வளர்ச்சியை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தி , கட்டிகள் வளர்ச்சியை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. மெனோபாஸ் காலத்திற்கு முந்தய கால கட்டத்தில் இருக்கும் பெண்கள், புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், முந்தய காலத்தில் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தவர்கள், இரவில் அதிக வெளிச்சம் உமிழப்படும் இடங்களில் வசிப்பவர்கள் போன்ற பெண்களுக்கு மார்பக புற்று நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

மார்பக புற்று நோய் ஆய்வு:
ஹார்வாட் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான பீட்டர் ஜேம்ஸ் அவர்கள் கூறுவதாவது, மனித மூளையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இந்த ஹார்மோன், மார்பக புற்று நோயை ஏற்படுத்தும் கட்டிகளை குறைக்க உதவுகிறது. அதிகமான ஒளிக்கு மனித உடல் உட்படும்போது, இந்த ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. இதனால் ஒரு நாளின் சுழற்சி பாதிக்கப்படுகிறது. மார்பக புற்று நோயின் அபாயம் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுக்காக 110,000 பெண்களின் தகவல்கள் பரிசோதிக்கப்பட்டு. ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண் வசிக்கும் இடங்களின் படங்களை சேகரித்து, அவர்கள் இரவு வேலைக்கு செல்பவர்களாக  இருந்தால் அதன் தாக்கத்தை பற்றி சோதித்து அறிந்து அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்க கூடிய விதத்தில் இருந்தன. இரவு நேரத்தில் அதிகமான வெளிச்சத்து உட்படுத்தப்படுகிறவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் 14% அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் வெளிப்புற வெளிச்சம் அதிகம் படும்போது மார்பக புற்று நோயின் அளவு விகிதமும் அதிகரிக்கிறது. இதனை பற்றி அடுத்த கட்ட ஆய்வுகள் மேற்கொள்ள பட இருக்கின்றன. 

இன்றைய கார்ப்பரேட் உலகின்  24x 7 வேலை சூழலில், இரவு நேர வேலை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இருந்தாலும் இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அடிக்கடி மார்பக புற்று  நோய் பரிசோதனையை எடுத்துக் கொள்வது நல்லது. 

அக்டோபர் மாதம், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை ஏற்படுத்தியதற்கான குறிக்கோள் , மக்களிடையே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த புற்று  நோய் பற்றிய ஆய்வுக்காக நிதி வசூலிப்பதாகும்.