சிறந்த வகையில் வீட்டிலேயே தயாரிக்கும் கொசுவிரட்டிகள்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற சொற்றொடர் மனிதர்களுக்கு பொருந்துவதை விட கொசுக்களுக்கு அதிகமாக பொருந்தும்.

சிறந்த வகையில் வீட்டிலேயே தயாரிக்கும் கொசுவிரட்டிகள்

அந்த அளவிற்கு எல்லா ஊர்களிலும் வியாபித்திருக்கும் ஒரு இனமாக இன்று கொசு இருக்கிறது. இதன் காரணமாக, பல்வேறு கிருமி பாதிப்பு மற்றும் தொற்று பாதிப்பால் உண்டாகும் வியாதிகளை விட கொசுக்களினால் உண்டாகும் நோய்கள் இன்று மக்கள் மத்தியில் அதிகம் வளர்ந்து வருகிறது. கொசுக்கள்  வெளியில் வீட்டில் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லா இடத்திலும் நிறைந்து உள்ளன. அதனால் அவற்றை அழிப்பது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இதற்காக பலவித கொசு விரட்டிகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இரசாயனக் கலவைகள் கொண்டு இவற்றை தயாரிக்கப்படுவதால், இவற்றைப் பயன்படுத்துவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே வீட்டில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் மற்றும் இதர மூலப்பொருட்கள் கொண்டு வீட்டிலேயே இத்தகைய கொசு விரட்டிகளை தயார் செய்வதால் இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம் அல்லது அவை நம்மை கடிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்,  எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல்.. 

கொசுக்கள் காலை நேரங்களில் மந்தமாக காணப்படும். இரவு நேரத்தில் தான் அதன் சுற்றுப்பயணம் அதிகரிக்கும். கொசுக்களால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களைத் தாங்க முடியாது. அதிக சூரிய வெளிச்சம் கொசுக்களின் மீது படுவதால் அவற்றின் நீர்ச்சத்து குறைந்து இறக்கவும் நேரலாம். ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் இவை தலைகீழாக மாறிவிடும். சூரியனின் மறைவிற்கு பின் கொசுக்களின் வேட்டை ஆரம்பமாகி விடும். ஆகவே அந்த நேரத்தில் அவற்றை அழிப்பது கொசு விரட்டிகளால் மட்டுமே முடியும். ஆகவே இந்த பதிவை தொடர்ந்து படித்து இயற்கை முறையில் கொசு விரட்டிகளை தயாரிக்கும் முறையை அறிந்து அவற்றை அழிக்க முடியும். ஆகவே இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்...
 
வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கும் கொசு விரட்டிகள்  
 
எலுமிச்சை தைல எண்ணெய் 

தேவையான பொருட்கள் :
10 மிலி எலுமிச்சை தைல எண்ணெய்
90 மிலி  மற்ற எண்ணெய் (ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்)

செய்முறை:
ஒரு 100 மிலி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும். 
அதில் 10 மிலி எலுமிச்சை தைல எண்ணெய்யை சேர்க்கவும்.
மேலும் அந்த பாட்டிலில் 90 மிலி ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.
இந்த  எண்ணெய்யை நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கொசு கடித்த இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும்.
நீங்கள் வெளியில் செல்லும்போது அல்லது வீட்டில் இருக்கும்போதும் இந்த எண்ணெய்யை அடிக்கடி உங்கள் உடலில் தடவிக் கொள்ளலாம்.

இது ஏன் வேலை செய்கிறது ?
எலுமிச்சை தைல எண்ணெயில் சிட்ரோ நெல்லல் மற்றும் பி-மீத்தேன் 3, 8-டியோல் (PMD) போன்ற கூறுகள் உள்ளன. சிட்ரோ நெல்லல் கொசுக்களை ஓரளவிற்கு விரட்டும், ஆனால் PMD இத்தகைய சிறிய உயிரினங்களை கொள்வதில் சிறந்த தீர்வைத் தருகிறது.

குறிப்பு :
எலுமிச்சை தைல எண்ணெயில் PMD குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. ஆகவே இந்த எண்ணெய்யை பதப்படுத்தி சுத்தீகரிப்பதன் மூலம் இதில் உள்ள சிட்ரோ நெல்லல் ஒரு பகுதி, PMD யாக மாற்றம் பெறுகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்டு சுத்தீகரிக்கப்பட்ட எலுமிச்சை தைல எண்ணெய்யை உடலில் தடவுவதால் கொசுக்களை எதிர்த்து சிறந்த முறையில் இது போராடுகிறது.

புதினா எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையான பொருட்கள் :
12 துளிகள் புதினா எண்ணெய்
30 மிலி தேங்காய் எண்ணெய் 

செய்முறை :
புதினா எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும்.
உங்கள் கை மற்றும் கால்களில் இந்த எண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.
நீங்கள் வெளியில் செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை இந்த எண்ணெய்யை தடவலாம்.

கொசுக்களை விரட்டுவதில் புதினா எண்ணெய் மற்றொரு அற்புதமான எண்ணெயாகும். தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து புதினா எண்ணெய்யை பயன்படுத்துவதால், கொசுக்களை விரட்டும் இதன் தன்மை அதிகரிக்கிறது. புதினா எண்ணெயில் உள்ள லிமொனின் மற்றும் மெந்தால் கொசுக்களை விரட்ட உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் உள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் கூழ்மமாக்கிகள் போன்றவை புதினா எண்ணெய் ஆவியாகாமல் தடுக்க உதவுகின்றன.

வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையான பொருட்கள்:
10 துளி வேப்பெண்ணெய்
30 மிலி தேங்காய் எண்ணெய் 

செய்முறை:
வேப்பெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
கொசுக்கள் கடிக்கும் உடல் பகுதிகளில் நன்றாகத் தடவவும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை தடவலாம்.

வேப்ப மர கொட்டை மற்றும் பழத்தில் இருந்து வேப்பெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் கலவை மற்றும் வாசனையால் கொசுக்களை விரட்டும் தன்மை அதிகம் உள்ளதாக நம்பப்படுகிறது. உண்மையில், 2% வேப்பெண்ணெய்யுடன் , தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துவதால், பல இன கொசுக்களின் பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் அத்தியாவசிய எண்ணெய் ஸ்ப்ரே :

தேவையான பொருட்கள்:
50 மிலி ஆப்பிள் சிடர் வினிகர்
50 மிலி தண்ணீர் 
10-12 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் (கிராம்பு, சிட்ரோ நெல்லா அல்லது தைல எண்ணெய் )

செய்முறை:
தண்ணீர் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். 
இத்துடன் அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும்.
வெளியில் செல்வதற்கு முன் அல்லது கொசு அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த பாட்டிலில் இருந்து சிறிது எண்ணெய்யை ஸ்ப்ரே செய்து கொள்ளவும். 


அத்தியாவசிய எண்ணெய்களுக்கு கொசுக்களை விரட்டு தன்மையை அதிகரிக்கும் ஒரு சிறந்த செயலை ஆப்பிள் சிடர் வினிகர் செய்கிறது. அத்தியாவசிய எண்ணெயின் திரவ தன்மையை அதிகரிக்க மற்ற எண்ணெய்யை பயன்படுத்தும் போது, இரண்டு எண்ணெய்களும் சேர்ந்து ஒரு பிசுபிசுப்பு தன்மை உண்டாகும். அந்த தருணங்களில் ஒரு எண்ணெய் இல்லாத அடிப்படை மூலப்பொருளை பயன்படுத்துவதால் பிசுபிசுப்பு தன்மை தவிர்க்கப்படும். அதற்கு ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு நல்ல தீர்வு. ஆப்பிள் சிடர் வினிகர் சருமத்தின் pH அளவில் சிறிதளவு அமிலத் தன்மையை சேர்ப்பதன் மூலம், அத்தியாவசிய எண்ணெய்க்கு துரத்தும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களை கொசு கடிப்பது தடுக்கப்படுகிறது.

டீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்:

தேவையான பொருட்கள்:
10 துளிகள் டீ ட்ரீ எண்ணெய்
30 மிலி தேங்காய் எண்ணெய் 

செய்முறை:
டீ ட்ரீ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய்யை கலக்கவும்.
உங்கள் சருமத்தில் இந்த எண்ணெய் கலவையை தடவவும்.
நீங்கள் வெளியில் செல்வதற்கு முன் அல்லது வீட்டில் இருக்கும் போது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை தடவலாம்.

டீ ட்ரீ எண்ணெயின் மருத்துவ குணங்களுக்காக இது பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. டீ ட்ரீ எண்ணெயின் கிருமி நாசினி தன்மை மற்றும் அழற்சியைப் போக்கும் தன்மை கொசு கடியை எளிதில் குணமாக்குகிறது. டீ ட்ரீ எண்ணெய்யின் வலிமையான வாசனை, கொசுக்களை அண்ட விடுவதில்லை. இந்த எண்ணெய் மிகவும் கடுமையானது என்பதால் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கலந்து மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும். 

சிட்ரோ நெல்லா எண்ணெய் மற்றும் அல்கஹால் ஸ்ப்ரே :

தேவையான பொருட்கள் :
10 மிலி அல்கஹால்
10 துளி சிட்ரோ நெல்லா எண்ணெய்
90 மிலி தண்ணீர்

செய்முறை:
குறிப்பிட்ட அளவில் தண்ணீர் மற்றும் அல்கஹாலை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் சிட்ரோ நெல்லா எண்ணெயைக் கலக்கவும்.
இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
கொசுக்கடியால் பாதிக்கப்படும் இடங்களில் இந்த எண்ணெய்க் கலவையை ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.
வெளியில் செல்வதற்கு முன், இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

லெமன் கிராஸ் செடியின் இலைகளில் இருந்து சிட்ரோ நெல்லா எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெயில் சிட்ரோ நெல்லல், க்ரானியோல் , சிட்ரால் லிமொனின் போன்ற கொசுவை துரத்தும் தன்மைகள் கொண்ட கூறுகள் இந்த எண்ணெயில் உள்ளன. DEET என்னும் ரசாயன கொசு விரட்டியில் பயன்படுத்தும் இரசாயனத்தின் தீர்வை போன்ற சிறந்த தீர்வை தருவதாக இந்த எண்ணெய் இருக்கிறது. இத்தகைய நன்மைகள் கொண்ட சிட்ரோ நெல்லா எண்ணெயின் சிறப்பு, அல்கஹாலுடன் இணையும் போது அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், அல்கஹாலில் உள்ள தியாமின் , இதன் வாசனை , கொசுக்களை விரட்டும் .

லவங்க பட்டை எண்ணெய் ஸ்ப்ரே:
தேவையான பொருட்கள்:
10 துளிகள் லவங்க பட்டை எண்ணெய்
30-40 மிலி தண்ணீர்

செய்முறை:
லவங்க பட்டை எண்ணெயுடன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
இந்த கலவையை நன்றாகக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
உடலில் இந்த கலவையை வெளியில் செல்லும்போது தடவிக் கொள்ளவும்.

லவங்கப் பட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் லவங்க எண்ணெயாகும். கொசுவை விரட்டும் வீட்டுக் குறிப்புகளில் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. லவங்கப் பட்டையில் இருக்கும் நான்கு முக்கிய கூறுகளான சின்னமய்ல் அசிடேட், யுஜினால், சின்னமல் டீ ஹைடு , அநேதொல் ஆகியவற்றில் கொசுக்களை விரட்டும் தன்மை அதிகம் இருப்பதால் இவை ஏடிஸ் கொசுவை எதிர்த்து போராடுகின்றன. இவற்றில் சின்னமல் டீ ஹைடு மிக வலிமை வாய்ந்ததாக உள்ளது.

லாவெண்டர் எண்ணெய் , வெனிலா ,எலுமிச்சை சாறு ஸ்ப்ரே :

தேவையான பொருட்கள்:
10-12 துளிகள் லாவெண்டர் எண்ணெய்
3-4 ஸ்பூன்  வெனிலா சாறு
3-4 ஸ்பூன்  எலுமிச்சை சாறு

செய்முறை:
லாவெண்டர் எண்ணெயுடன் வெனிலா சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
இந்த கலவையில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
இந்த கலவையை நன்றாகக் குலுக்கி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உடலில் தடவவும்.
கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் நீங்கள் வசித்தால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை பயன்படுத்தலாம்.

லாவெண்டர் எண்ணெய், நமக்கு ஒரு இதமான உணர்வை தந்தாலும், கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டதாக உள்ளது. லிமொனின், லினலூல், யுகாலிப்டால், கற்பூரம் போன்ற கூறுகளைக் கொண்டது. இவை அனைத்தும் இயற்கையிலேயே கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை என்பதை நாம் அறிவோம். பூச்சிகளை எதிர்க்கும் தன்மை வெனிலா சாற்றுக்கு உள்ளது. எலுமிச்சை சாற்றில் உள்ள அதிக அமில தன்மை, கொசுக்களை விரட்ட உதவுகிறது.


லெமன் கிராஸ் மற்றும் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் :

தேவையான பொருட்கள்:
10 துளிகள் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்
10 துளிகள் லெமன் கிராஸ் அத்தியாவசிய எண்ணெய்
60 மிலி தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய்

செய்முறை:
தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெயுடன் அத்தியாவசிய எண்ணெய்யை சேர்ர்த்து கலக்கவும்.
இந்த கலவையை நேரடியாக உங்கள் உடலில் தடவவும்.
இந்த எண்ணெயுடன் 60 மி லி தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றியும் இதனை பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு தினமும் இரண்டு முறை இந்த எண்ணெய்க் கலவையை பயன்படுத்தலாம்.

லெமன் கிராஸ் மற்றும் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய் ஆகிய இரண்டிற்கும் கொசுக்களை இயற்கையாகவே விரட்டும் அற்புத தன்மை உண்டு. லெமன் கிராஸ் அத்தியாவசிய எண்ணெயில் கொசுக்களை விரட்டும் கூறுகளான லிமொனின், சிட்ரோ நெல்லா , போன்றவை உள்ளன. ரோஸ்மேரி எண்ணெயில் இருக்கும் கூறுகளான யுகலிப்டால் , கற்பூரம், லிமொனின் போன்றவற்றால் கொசுக்களை விரட்டும் தன்மை இந்த எண்ணெயில் அதிகம் உள்ளது.

மவுத் வாஷ் மற்றும் எப்சம் உப்பு ஸ்ப்ரே:

தேவையான பொருட்கள்:
ஒரு பெரிய பாட்டில் மவுத்வாஷ் (குறிப்பாக புதினா நறுமணம்)
மூன்று கப் எப்சம் உப்பு
12அவுன்ஸ் கேன் பீர் (தேவைப்பட்டால்)

செய்முறை:
கடையில் வாங்கிய மவுத் வாஷில் எப்சம் உப்பை சேர்க்கவும்.
உப்பு கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
கூடுதல் நன்மைக்காக இதில் 12அவுன்ஸ் பீர் சேர்க்கலாம்.
வீடு முழுவதும் இந்த கலவையை தெளிக்கவும்.
தினமும் இரண்டு முறை வீடு முழுவதும் இந்த கலவையை தெளித்து விடலாம்.


மவுத்வாஷில் யுகலிப்டால், மெந்தால், தைமல், போன்ற கூறுகள் உள்ளன. இவை கொசு விரட்டியாக பயன்படுகிறது. சில வகை மவுத் வாஷில் அல்கஹால் அளவு (எத்தனால் ) அதிகமாக இருக்கலாம். இவை கொசுவை விரட்ட உதவுகின்றன. கொசுக்களுடன் சேர்த்து மற்ற நுண்கிருமிகள் மற்றும் பூச்சிகளைப் போக்க எப்சம் உப்பு பயன்படுகிறது.


பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கொசு வலை :

தேவையான பொருட்கள்:
1 கப் வினிகர்
1/4 கப் பேக்கிங் சோடா

செய்முறை:
ஒரு காலி பாட்டிலை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாட்டிலின் அடிப்பகுதியில் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.
பாட்டிலின் மேல் பகுதியை புனல் போல் வைத்துக் கொள்ளவும்.
பாட்டிலின் அடிபகுதிக்கு மேல், மேல் பகுதியை கவிழ்த்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மேல் பகுதி கவிழ்க்கப்பட்ட பாட்டிலில் வினிகரை ஊற்றவும்.
இந்த கலவையை உங்கள் அறையின் வெளியில் வைக்கவும்.
உங்கள் வீட்டில் கொசுக்களின் வரவு அதிகரிக்கும் நாட்களில் இதனை செய்யலாம்.

வினிகருடன், பேக்கிங் சோடா கலக்கும் நேரம், இவை இரண்டும் இணைந்து வினை புரிவதால் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது. இந்த கார்பன் டை ஆக்சைடு கொசுக்களை கவர்ந்து, அழிக்கிறது.

அல்கஹால் ஸ்ப்ரே:

தேவையான பொருட்கள்:
10 துளிகள் அத்தியாவசிய எண்ணெய்
30 மி லி தண்ணீர்
ஒரு ஸ்பூன் அல்கஹால் 

செய்முறை:
கை, கால்கள் மற்றும் உடலின் மேற்புறத்தில் தடவுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு திரவம் ரப்பிங் (Rubbing) அல்கஹால்.
அத்தியாவசிய எண்ணெயுடன் இந்த அல்கஹாலை சேர்க்கவும். 
இதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கவும். 
இந்த திரவத்தை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
நன்றாகக் குலுக்கி, பின் உடலின் எல்லா இடங்களிலும் இதனை தெளித்து தடவவும். 
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை தடவலாம்.

இந்த வகை அல்கஹால் தண்ணீரை விட எண்ணெய்யை விரைந்து கரைத்து விடும். ஆகவே கொசுக்களை விரட்டும் தன்மை இந்த அல்கஹாலுடன் இணையும் போது எண்ணெய்க்கு அதிக அளவில் இருக்கும். கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட இடத்தில் ரப்பிங் அல்கஹால் தடவுவதால் நல்ல நிவாரணம் கிடைக்கிறது. வெஜிடபிள் எண்ணெயுடன் இந்த அல்கஹாலை கலந்து பயன்படுத்துவதால் மற்ற பூச்சிகள் மற்றும் வண்டுகள் கூட அழிக்கப்படுகின்றன.

பூண்டு ஸ்ப்ரே:

தேவையான பொருட்கள்:
5-6 பூண்டு பற்கள்
1 ஸ்பூன் மினரல் எண்ணெய்
1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
2 கப் தண்ணீர்

செய்முறை:
பூண்டை உரித்து நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் மினரல் எண்ணெயுடன் இதனை சேர்க்கவும்.
ஒரு இரவு முழுவதும் இந்த பூண்டு எண்ணெயில் ஊறட்டும்.
மறுநாள் காலை பூண்டை மட்டும் வடிகட்டி அதை தனியே வைத்து இந்த எண்ணெய்யை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
இந்த திரவத்தை வீடு மற்றும் தோட்டத்தில் தெளித்து விடவும்.
இந்த திரவத்தை உங்கள் உடலில் கூட தெளித்துக் கொள்ளலாம்.
தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இந்த திரவத்தை பயன்படுத்தலாம்.
 
பூண்டில் உள்ள அலிசின் என்னும் கூறு, கொசுக்களை எதிர்த்து போராடும் வலிமையான தன்மை கொண்டது. மேலும் பூண்டின் வாசனை, கொசுக்களை விரட்டக் கூடியதாக உள்ளது. இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத் தன்மை, கொசுக்களை விரட்டும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

கிராம்பு மற்றும் எலுமிச்சை :

தேவையான பொருட்கள் :
10-12 கிராம்பு 
1 எலுமிச்சை 

செய்முறை:
ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக  நறுக்கிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பாதி எழுமிச்சையிலும் 5-6 கிராம்பை சொருகி வைக்கவும்.
அதிக கொசுக்கள் இருக்கும் நாட்களில் உங்கள் அறையில் இந்த எலுமிச்சையை வைக்கவும்.
கிராம்பு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உடலில் தடவலாம். இது மற்றொரு வழியாகும்.
தினமும் ஒரு முறை இதனை செய்வதால் கொசுக்கள் அழியக் கூடும்.

கொசுக்களை விரட்ட இந்த முறை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கொசுக்கள் மற்றும் இதர பூச்சிகளை விரட்ட கிராம்பு ஒரு சிறந்த மூலிகை ஆகும். கிராம்பின் வலிமையான வாசனை மற்றும் இதில் இருக்கும் யுஜினால் என்னும் கூறு, கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவையாகும். கிராம்பு எண்ணெய் ஒரு தலை சிறந்த பூச்சிக் கொல்லி என்று பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை:
கிராம்பு எண்ணெயின் கடினமான வாசனையின் காரணமாக ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். ஆகவே இதனை மற்ற எண்ணெயுடன் கலந்து மட்டுமே உடலின் மேல்புறம் தடவ வேண்டும்.

மேலே கூறிய எல்லா குறிப்புகளும் கொசுக்களை விரட்ட தனித்தும் மற்ற குறிப்புகளுடன் இணைந்தும் நல்ல விளைவைத் தரும். சில வகை அத்தியாவசிய எண்ணெய், சருமத்தில் எரிச்சலை உண்டாக்கலாம் என்பதால் அவற்றைக் கையாளும்போது கவனம் தேவை. அத்தியாவசிய எண்ணெய்யை தனித்து பயன்படுத்தாமல், தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கலந்து உபயோகிக்கவும். இதுவே பாதுகாப்பானது. இந்த குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட இனியும் தாமதிக்க வேண்டாம். உங்கள் வெற்றி செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.