புடவை அணிவதால் உண்டாகும் நன்மைகள் 

இன்றைய நவ நாகரீக மங்கைகள், பல விதமான உடைகளில் இன்று அலுவலகங்களுக்கு வருகிறார்கள்

புடவை அணிவதால் உண்டாகும் நன்மைகள் 

பெண்கள் எந்த வகை உடையை அணிந்தாலும், புடை அணியும் போதும் அவர்களிடம் தோன்றும் ஒரு அழகு வேறு உடைகளில் காணப்படுவதில்லை. இது தமிழ் பாரம்பரிய மற்றும் கலாச்சாரா உடை என்பதற்காக இதை சொல்லவில்லை. புடவை கட்டிய பெண்களை பார்க்கும் சராசரி பார்வையாளராக இதனை கூற முடியும். 

புடவை சரசரக்க ஒரு பெண் அலுவலகத்தில் நடந்து வரும்போது நிச்சயம் அவரது செல்வாக்கு உயர்ந்து நிற்கும். 

ஒவ்வொரு புடவைக்கும் ஒவ்வொரு கதை உண்டு :
புடவை கட்டி ஒரு பெண் அலுவலகத்தில் நுழைந்தவுடன் ஒவ்வொருவரும் ஒரு கேள்வியாவது கேட்பார்கள். இவ்வளவு அழகான புடவை உனக்கு மட்டும் எப்படி கிடைக்குது? - ஒருவர். இந்த புடவை உன் அம்மாவோடது தானே? - மற்றொருவர் . உன்னோட சாய்ஸ் எப்பவுமே செம்ம! - இன்னொருவர். இந்த புடவையை எங்க வாங்கின? - இது வேறொருவர். இந்த கேள்வியில் நிச்சயம் ஒன்றையாவது ஒரு பெண் புடவை கட்டும்போது அவருடன் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள். இந்த கேள்விக்காகன பதிலாக சில கதைகள் தயராக இருக்கும். அந்த கதைகள் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

சிறப்பான  காலங்களுக்கு சிறந்த புடவை:
காட்டன் புடவைகள், பட்டு புடவைகள், டஸ்ஸர் புடவைகள், பகல்பூரி புடவைகள் என்று அலுவலகம் செல்லும் பெண்களுக்காகவே இன்றைய புடவைகள் நேர்த்தியான முறையில் வடிவமைக்க படுகின்றன. எம்பிராய்டரி , சம்கி , பாரம்பரிய கலை நயத்தோடு கூடிய பல வேலை பாடுகளுடன் கூடிய புடவைகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறுகின்றன. 

பண்டிகை காலங்களுக்கு ஏற்ற புடவைகளை  அலுவலக சிறப்பு விழாக்களுக்கு அணிந்து அதற்கு ஏற்ற வளையல்கள் மற்றும் கம்மல் அணிந்து ஒரு ராஜகுமாரியாக வலம் வரலாம்.

உயர்ந்த அந்தஸ்து:
கார்பொரேட் கம்பெனிகளில், மற்றும் எல்லா இடங்களிலும், உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்கள் அதிகபட்சமாக புடவை அணிந்தே வருவர். எதாவது ஒரு மீட்டிங் அல்லது கான்பெரன்ஸ் அரங்கத்தில் பெண்கள் புடவை உடுத்தி மிடுக்காக நடந்து வந்து பேசுவதை பார்த்திருக்கிறோம்.

நளினத்தை கொடுக்கிறது:
வீட்டில் அணியும் உடை நமது சவுகரியத்துக்கு ஏற்றவாறு இருக்கலாம். ஆனால் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான ஒரு நளினதோடு இருப்பதற்கு புடவை  உதவுகிறது.

காற்றோட்டம்:
வெயில் காலங்களில் புடவைகள் சிறந்த காற்றோட்டத்தை தருகிறது.

பாரம்பரியத்தின் அங்கம்:
நமது தாய், நமது பாட்டி ஆகியோர் உடுத்திய  புடவையை நாம் இன்று உடுத்தும் போது , அது அவர்களுக்கு ஒரு பெருமையை தரும். கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பல வித மாறுதல்களுக்கு இடையில் புடவை இத்தனை தூரம் வந்திருப்பது மகிழ்ச்சி . ஆனால் இது இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும். நாம் இன்று புடவை அணியும்போது பெரும் இன்பத்தை நமது சந்ததிகளும் பெற வேண்டும். நாகரீக மாற்றத்திற்கு ஏற்ற வகையில் பல உடைகளை அணியலாம். ஆனால் புடவையை புறக்கணிக்க வேண்டாம். 

பல விதமாக மாற்றலாம்:
பல முறை கட்டிய புடவைகளை , சுடிதாராக தைத்து மேலும் சில முறை பயன்படுத்தலாம். புடவையின் முந்தானையை பிரித்து, சின்ன குழந்தைகளுக்கு பாவாடை தைக்கலாம். சோபா போன்றவற்றிற்கு மேல் கவர் போல பயன்படுத்தலாம். ஜன்னல்களுக்கு ஸ்க்ரீன் போலவும் பயன்படுத்தலாம். 

அணிவதற்கு சிரமம் இல்லை:
பொதுவான நிறங்களில் சில பிளவுஸ்கள் மட்டும் வைத்து கொண்டால் கூட போதுமானது. பல புடவைகளுக்கு இதனை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். 

பிராண்டை உருவாக்குங்கள்:
உங்கள் புடவை கட்டும் நேர்த்தியால், உங்களுக்கான ஒரு பிராண்டை உருவாக்குங்கள்.  இது உங்களுக்கு ஒரு தன் நம்பிக்கையை கொடுக்கும். 

ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு புடவை:
வெயில் காலங்களில்   காட்டன் புடவை சிறந்தது. குளிர் காலத்திற்கு சில்க் புடவைகள் சிறந்தது. இப்படி ஒவ்வொரு காலத்திற்கும்  ஏற்ற புடவைகளை கட்டுங்கள்.

புடவையை அணிந்து பாருங்கள். அவை நிச்சயம் அணிபவரை சந்தோஷப்படுத்தும்.