பார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று 

மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் தொற்றுகளும் இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. இது சலூன் கடைக்கும் பொருந்தும். சலூனில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பார்பரிடம் இருந்து பொதுவாக ஏற்படும் தொற்று 

பொதுவாக ஆண்கள் சலூன் செல்வது தம்மை அழகு செய்து கொள்வதற்காக என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும், சலூனில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் பற்றி  அவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்  கொள்வதற்கான வழியையும் இந்த பதிவின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மயிர்க்கால் அழற்சி

"மயிர்க்கால் அழற்சி என்பது பெரும்பாலும் நுண்ணுயிர் தொற்றுநோயால் ஏற்படக்கூடிய மயிர்ப்புடைப்பின் வீக்கம் ஆகும்" என்கிறார் அந்தோனி எம். ரோஸ்ஸி, MD, டெர்மடோலஜிஸ்ட் , மொஹஸ், ஒப்பனை மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணர். இது வெள்ளை நிறத்தில் சிறிய கட்டிகள் போல் தோன்றுபவையாகும். இது பொதுவாக ஸ்டாஃப் பாக்டீரியாவால் ஏற்படுகிறது, சரியாக சுத்தம் செய்யப்படாத சீப்பு, கத்திரி அல்லது ரேசர் போன்றவற்றால் பரவுகிறது.

பார்பர் அரிப்பு :
உங்கள் சலூன் கடையில், சீப்பு, ரேசர் போன்றவற்றை நீரில் நனைத்து சுத்தம் செய்தால், அவர்கள் பயன்படுத்தும் கருவிகளை நல்ல முறையில் சுத்தம் செய்வதை அறிந்து கொள்ளலாம். இதனால் பார்பர் அரிப்பு வராமல் இருக்கலாம்.
இந்த வகை அரிப்பு, தாடி வளரும் இடங்களில் அல்லது உச்சந்த்தலையில் உருவாகும் ஒரு வகை மயிர்க்கால் அழற்சி ஆகும். என்று மவுன்ட் சினை மருத்துவமனையின் தோல் சிகிச்சை மருத்துவர் ஜோஷுவா கூறுகிறார். பாக்டீரியா முடியில் வேர்கால்களில் படிந்து , சிவப்பு நிற கட்டிகள் அல்லது சீழ் உருவாகி அரிப்பை ஏற்படுத்துகிறது.

பார்பர் அரிப்பு லேசாக இருந்தால், மேல்புறம் மருந்து தடவுவதால் எளிதில் குணமடையும். அதிக பாதிப்பு ஏற்படுவதால், தொடர்  சிகிச்சை தேவைப்படலாம்.

தலைப்படை :
தலைப்படை என்பது ஒரு பூஞ்சை தொற்றாகும். தலையில் சிவப்பு நிறத்தில் சேற்றுப்புண் போல் சிவப்பு நிறத்தில் இந்த தொற்று ஏற்படுகிறது. முடி வெட்டும் கடைகளில் பயன்படுத்தும் சுத்தம் செய்யப்படாத சீப்பு, துண்டு போன்றவற்றால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இதனால் நிரந்தர வடு மற்றும் முடி இழப்பு ஏற்படலாம். மருந்து உட்கொள்ளுவதால் இந்த பூஞ்சை தொற்று சரி செய்யப்படலாம். இந்த பூஞ்சைத் தொற்று முடியின் வேர்கால்களில் ஆழமாக ஊடுருவுகிறது. ஆகவே, மேற்புறமாக தடவும் மருத்துகள் சரியான பலனைத் தராது.

சிரங்கு :
சிரங்கு என்பது ஒரு பாக்டீரியா தொற்றாகும். இது முக்கியமாக ஸ்டேஃப் அல்லது ஸ்ட்ரீப் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பொதுவாக இது குழந்தைகளிடம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் எந்த வயதிலும் இது தோன்றலாம். பொதுவாக சருமத்தின் தொடுதலால் இது பரவக் கூடியது. மேலும், சலூன் கடைகளில் தலையை அலசும்போது பயன்படுத்தும் துணி அல்லது துண்டால் இது பரவுகிறது.

இந்த சிரங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையில் மஞ்சள் நிற கட்டிகள் தோன்றும். இது எளிதில் மற்ற இடங்களுக்கும் மற்றவர்களுக்கும் பரவக் கூடியதால் விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சருமத்தின் மேல்புறம் மருத்துகளைப் பயன்படுத்துவதால் இந்த தொற்று எளிதில் குணமடையும்.

பேன் :
தொடர்ந்து முடி வெட்டுவதால் அல்லது ஷேவ் செய்வதால் பேன் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்த அளவில் இருக்கிறது. பேன் உள்ளவர் தலையில் பயன்படுத்திய சீப்பு அல்லது பேன் உள்ளவர்கள் அருகில் அமர்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதால் உங்களுக்கும் பேன் பெருகலாம். பொதுவாக பேன் தலைமுடியில் உருவாகலாம். சில நேரம் மீசை அல்லது தாடியிலும் இருக்கலாம். பேன் உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறியாகும். பேன்களைத் தவிர, ஈறு, ஒட்டு போன்றவையும் முடியில் உற்பத்தியாகலாம்.

பேனை ஒழிக்க பல வழிகள் உண்டு. பொதுவாக பேன் மருந்து பயன்படுத்தி பேனை ஒழிக்கலாம். இதன் மூலம் ஒட்டு மற்றும் ஈறுகளையும் போக்கலாம்.

டெட்டனஸ்:
சலூன் கடைகளில் பயன்படுத்தும் துருபிடித்த கருவிகளால் டெட்டனஸ் தோன்றும் வாய்ப்புகள் உண்டு. சருமத்தில் வெட்டுகள் ஏற்படுவதால் உண்டாகும் பாக்டீரியா தொற்றால் இந்த டெட்டனஸ் உண்டாகிறது. மேலும், மண்ணில் உள்ள கிருமிகள் மற்றும் துருப்பிடித்த கருவிகள் மூலம் வளரும் கிருமிகள் போன்றவை இந்த பாதிப்பிற்கு காரணமாக உள்ளன என்று மருத்துவர்கள் கூறின்றனர்.

அக்கி :
உடலில் உள்ள தேவையற்ற முடிகளை போக்குவதில் அதிக விருப்பம் உள்ளவரா நீங்கள்? இதற்காக நீகள் வக்சிங் செய்வதால் இந்த பாதிப்பு உண்டாகிறது. வக்சிங் செய்வதன் மூலம் அக்கிகள் அல்லது கிருமி தொற்று உண்டாவதற்கான பாதிப்புகள் உண்டாகிறது. மற்றொரு நபருக்கு பயன்படுத்திய வாக்ஸ் ரோல் அல்லது குச்சிகளை பயன்படுத்தாமல் புதியவற்றை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இதனால் இந்த பாதிப்பைத் தடுக்க முடியும்.

எப்படி பாதுகாப்பாக இருப்பது ?

சலூன் கருவிகள் அடிக்கடி சுத்தம் செய்யப் படுவதை உறுதி செய்யுங்கள்.

சலூன் கடைகளில் சீப்பு  ஒரு நீல நிற திரவத்தில் மிதந்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இது தான் பார்பிசைடு . இது கருவிகளில் உள்ள கிருமிகளைப் போக்க உதவுகிறது. "அல்கைல் டைமெதில் பென்சைல் அம்மோனியம் குளோரைடு என்னும் இந்த திரவம் ,கருவிகளில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றைக் கொல்லும் திறன் கொண்டது" என்கிறார் டாக்டர் ரோஸ்ஸி. இத்தகைய திரவத்தில் இருந்து எடுக்கப்படும் கருவிகளை பயன்படுத்தி உங்களுக்கு முடி திருத்தம் செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
சில சலூன், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் ஆட்டோக்லேவ் அல்லது உயர் அழுத்த நீராவி மூலம், கருவிகளை சுத்தம் செய்து கிருமிகளை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ரோசி கூறுகிறார். ஷேவ் செய்யப் பயன்படுத்தும் ப்ளேடுகள் ஆட்டோ க்லேவ் செய்யப்படுகிறதா அல்லது ஒவ்வொரு முறையும் புதிய ப்ளேடுகள் பயன்படுத்தப்படுகிறதா என்று சலூன் கடையில் உள்ளவரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதில் எந்த ஒரு தவறும் இல்லை.

 

கடைக்கு செல்லும் முன் உங்கள் சருமத்தை சோதியுங்கள் :
சருமத்தில் எதாவது காயம் அல்லது தொற்று இருந்தால் சலூன் கடைக்கு செல்வதை ஒத்திப் போடுங்கள். இல்லையென்றால் உங்கள் தொற்று பாதிப்பு அதிகமாகலாம் என்று மருத்துவர் கூறுகின்றனர். சளித் தொந்தரவு அல்லது நெற்றில் ஏற்பட்ட புண் என்று எதுவாக இருந்தாலும், அந்த நேரத்தில் சலூன் கடைக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

பார்பரின் சருமத்தை சோதனை செய்யுங்கள்:
உங்களுக்கு முடி திருத்தும் பார்பர் கைகளில் காயம் அல்லது வெட்டு இருந்தால் அதன் வழியாக தொற்று பரவலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

கடை எப்படி இருக்கிறதென்று பாருங்கள் :
கடைக்குள் சென்றவுடன் அந்த இடம் சுத்தமாக உள்ளதா என்பதைப் பார்க்கவும். சுத்தமில்லாத அறை , துருப்பிடித்த கருவிகள், கண்ணுக்கு தெரியும் இரத்தக் கறைகள், அழுக்கான துண்டுகள் போன்றவை நமக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகளாகும். இத்தகைய கடைகளைத் தவிர்ப்பது நல்லது.

லைசன்ஸ் உள்ளதா என்று பரிசோதியுங்கள் :
உங்கள் உடலின் மேல் உண்மையாகவே கவனம் உள்ளவர்களாக இருந்தால், முடி திருத்தம் அல்லது ஷேவ் செய்ய வேண்டும் என்றால், உடனடியாக கூகிளில் தேடி, குறிப்பிட்ட பார்பரின் ஆரோக்கிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான சலூன் கடைகள் செயல்பட உரிமங்கள் தேவைப்படுகிறது. ஆய்வுகளின் போது, எந்த ஒரு அத்துமீறல்கள் அல்லது புகார்கள் காணப்பட்டாலும், அவை இந்த நிறுவனங்களால் தாக்கல் செய்யப்படும். சில கடைகளில் இந்த உரிமம் காணும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் .