பிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள் 

ப்ரேக் அப் என்ற வார்த்தை இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஒரு வார்த்தையாக உள்ளது.

பிரேக் அப்பிற்கு பிறகு செய்யக்கூடாத சில செயல்கள் 

காதல் தோல்வி என்பதை மறைத்து வைத்திருந்த நாட்கள் இன்று  மறக்கடிக்கப்பட்டு விட்டது. பிரேக் அப் என்பது சாதாரணமான ஒரு சொல்லாக அல்லது செயலாக பார்க்கப்படுகின்றது. ஆனால் பிரேக் அப்பிற்கு பிறகான காலகட்டத்தில் அந்த சூழ்நிலையை உண்மையில் நாம் அறிந்ததைவிட கடினமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறோம். பிரேக் அப் என்பது ஓரளவுக்கு கடினமான காலகட்டம் தான் என்று இன்றைய இளைஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . பிரேக் அப்பிற்கு பிறகு அதையே நினைத்து நேரத்தை செலவழிப்பதற்கு பதிலாக மற்றொரு சரியான நபரை தேர்ந்தெடுக்க அந்த நேரத்தை செலவழிக்கலாம். ஆனால், காதல் தோல்வியால் உண்டான ஏமாற்றம் மற்றும் வலி இந்த நிலைமையை மேலும் மோசமாக மாற்றுகிறது. 

முறிந்த காதலை நினைத்துக் கொண்டே இன்றய  சூழலை இன்னும் கடினமாக மாற்றுவதை தவிர்க்க வேண்டும். அழுகை, உணர்ச்சி, கண்ணீர் , பயம் போன்றவற்றின் மூலமாக ஆரோக்கியமான ஒரு வாழ்கையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.


ஆகவே பிரேக் அப்பிற்கு பிறகு சில செய்யக் கூடாத செயல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்,

பிரேக் அப் செய்த நபரிடம் பேசுவது :
பிரேக் அப்பிற்கு பிறகு அவர்களுடன் இருந்த தொடர்பை துண்டிப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். தினசரி வாழ்க்கையில் மணி கணக்கில் பேசிய வார்த்தைகள், அனுப்பிய  தகவல்கள், பகிர்ந்த செய்திகள் என்று வாழ்வில் முக்கியமான  ஒரு நபராக அவர் இத்தனை நாட்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் ஒரே நாளில் தூக்கி எரிய யாருக்குமே மனது வராது. ஆனால் எப்படி என்ன ஒரு சமாதானம் கூறினாலும், அந்த நபருடனான தொடர்பை துண்டித்தால் மட்டுமே அந்த விஷயத்தில் இருந்து வெளி வர முடியும் என்பதை உணர வேண்டும். உங்கள் காயத்திற்கு மருந்து போட அவர்களின் நினைவுகளை அழிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பின்தொடர்வது:   
சமூக ஊடகங்களில் அவர்களுடன் தொடர்பில் இருப்பதால், நம் வாழ்க்கையை பற்றி அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவர்களை சார்ந்து வாழாமல் நீங்கள் தனியாக சுதந்திரமாக உணர்வதற்கு, அவர்களுடன் இருக்கும் சமூக ஊடக தொடர்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.
 

வருந்துவதை நிறுத்த வேண்டும்.
நீங்கள் சந்தோஷமாக இருப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். கோபம், சோகம், வருத்தம் போன்ற உணர்ச்சிகளை முதலில் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அந்த உணர்ச்சிகளில் இருந்து எளிதில் வெளிவர முடியும். வருந்துவதும் ஒரு விதத்தில் நல்ல விஷயம் தான். அதனால் அந்த ஆறாப்புண் விரைவில் குணமடையும். 


பிரிந்த பின் நண்பர்களாக இருப்பது :
இது வேலைக்கே ஆகாத ஒரு விஷயம். உங்களால் பகிரப்பட்ட விஷயங்களுக்கும்  இன்றைய நட்பிற்கும் இடையில் பல முரண்பாடான செயல்கள் தலை தூக்கும். இரண்டையும் ஒரு கோடால் ஒன்றாக இணைக்க முடியாது. மறுபடியும் இது சண்டையில் போய் முடியும். அந்த நிலைமை இதைவிட இன்னும் மோசமானதாக இருக்கும். ஒருவர் வழியில் ஒருவர் குறுக்கிடாமல் இருந்தால் ஒருவேளை இது சாத்தியமாகலாம்.


பாலியல் தொடர்பு :
பாலியல்  தொடர்பை முற்றிலும் தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் மூளை மேலும் குழப்பமடையும். பிரித்து போவது என்ற தீர்மானத்திற்கு பிறகு எதுவுமே தேவை இல்லை.

மறுபடியும் நெருங்கி வருவது :
உங்களை விரும்புபவரை நீங்கள் நேசியுங்கள். உங்கள் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவருடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள் . உங்கள் பழைய நினைவுகளை மறப்பது என்பது கடினமானது தான். ஆனால் முதல் முறை எப்படி பிரிந்தோம் என்று மறுபடி ஒரு முறை யோசிக்க வைப்பது தவறானது. ஒரு முறை பிரிந்தால் பிரிந்ததுதான் .

வலியால் புரண்டு புரண்டு அழாதீர்கள் 
பிரேக் அப் என்பது வருந்தக் கூடிய ஒரு விஷயம் தாம். இது நிகழ்ந்தால் நிச்சயம் வருத்தப்படலாம். ஆனால் தொடர்ந்து சோகமான பாடல்களை கேட்பது, சாப்பிடாமல் இருப்பது, தாடி வளர்ப்பது, தொடர்ந்து வலி தரக் கூடிய செயல்களை செய்வது போன்றவற்றை செய்து, நிலைமையை இன்னும் மோசமாக மாற்றாமல் இருக்கலாம்.

காதலை வெறுப்பது:
உடனடியாக அடுத்த காதலை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. உண்மையில் காதல் மேல் நம்பிக்கையை கூட நீங்கள் இழந்திருக்கலாம். அது பரவாயில்லை. ஆனால் இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்திடுங்கள். உங்களுக்கான நேரம் வரும், அதுவரை, உங்கள் இதயக் கதவு மற்றும் ஜன்னலை திறந்தே வைத்திருங்கள்.