கை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்

எளிதாக இருக்கும் இந்த கைத்தட்டல் பயிற்சியை செய்தாலே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்

கை தட்டுவதால் ஏற்படும் அற்புதங்கள்

கை தட்டுவதை நாம் அனைவரும் பொதுவாக மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்திற்காகவும் மட்டும் தான் பயன்படுகிறது என்று நாம் தவறாக நினைக்கிறோம். ஆனால் அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று. 

நம் உடலில் 2 ஆயிரத்திற்கு மேல் அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளது. அது நம் உள்ளங்கையில் தான் முப்பதிற்கும் மேற்பட்ட அதிகமான புள்ளிகள் உள்ளது. அந்தப் புள்ளிகள் மற்ற உடல் உறுப்புகளுடன் தொடர்பு உடையது. 1997-ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அக்குபஞ்சர் வைத்தியம் பல நோய்களை போக்கும் ஆற்றல் உள்ளது என்று அறிவித்துள்ளனர். கை தட்டுவதும் ஒருவகையான அக்குபஞ்சர் வைத்திய முறைதான்.

கை தட்டியதால் கிருஷ்ணசந்த் பஜாஜ்க்கு கிடைத்த நன்மை : கிருஷ்ணசந்த் பஜாஜ் என்பவர் தில்லியை சேர்ந்தவர். இவரின் இரு கண்களும் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அதை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் தினமும் காலையில் அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து கைதட்டி அதன் மூலம் இழந்த பார்வை திரும்பப் பெற்றார். இதை பிறரும் தெரிந்து பயன் பெறுவதற்காக கைத்தட்டி நோயை குணப்படுத்தும் இந்த முறைக்கு கைத்தட்டும் யோகாசனம் என்று பெயரிட்டு மக்களிடம் இதனால் ஏற்படும் நன்மைகளை பகிர்ந்தார். அதற்கு சான்று 1997-ம் ஆண்டு லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இவரது கைத்தட்டல் கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது. அதற்காக அவர் ஒரு மணிநேரத்திற்கு  9,500 முறை கைத்தட்டி சாதனை படைத்துள்ளார். 

கை தட்டும் முறை:

  • அதிகாலை எழுந்து கை தட்டுவதால் நமக்கு பலன் அதிகமாக கிடைக்கும்.
  • தினமும் ஒரு நிமிடத்திற்கு 60 முதல்100 முறை கைத்தட்ட வேண்டும்.
  • தினமும் 2,500 முதல் 3,500 முறை கைகளைத்தட்ட வேண்டும். 
  • நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ தட்டலாம்.
  • இரு கைகளும் நேராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும், இரு உள்ளங்கைகளும், விரல்களும், விரல்களின் நுனியையும் கை தட்டும் போது ஒன்றுடன் ஒன்று மோத வேண்டும்.
  • எந்த வேளையானாலும் கைகளைத் தட்டலாம்.
  • தினமும் 4 அல்லது 5 வேளை கைத்தட்ட வேண்டும். 
  • தினமும் 20 நிமிடங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும்.
  • கை தட்டும்போது சத்தம் உண்டாக வேண்டும். 

கை தட்டுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • அறிவாற்றலை அதிகரிக்கும்,
  • கூர்ந்து கவனிக்கும் ஆற்றலை கொடுக்கும்,
  • ஞாபக சக்தி திறனை கூட்டும்,
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்,
  • இதயநோய் வராமல் தடுக்கும்,
  • உயர்ரத்த அளவை குறைக்கும்,
  • சர்க்கரை நோய்க்கும் தீர்வு கொடுக்கும்,
  • ஆஸ்துமா, சளி தொந்தரவிலிருந்து நிவாரணம் கிடைக்கும்,
  • எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும்,
  • தலைவலியை குணமாகும்,
  • மூளைக்கு உற்சாகத்தை தருகிறது.                                                                              கை தட்டுவதால் நம் உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் நல்லது. எளிதாக இருக்கும் இந்த கைத்தட்டல் பயிற்சியை செய்தாலே நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அனைவரும் கைத்தட்டி ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்வோம்.