நிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்?

ஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்?

நிதியாண்டின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் முதலீட்டு அறிக்கையை ஏன் சமர்பிக்க வேண்டும்?

ஒவ்வொரு அலுவலகத்திலும், நிதியாண்டின் தொடக்கத்தில், உங்கள் முதலீடுகளுக்கான அறிவிப்புகளை தாக்கல் செய்யக்கோரி உங்கள் மனிதவளத்துறை அதிகாரி கடிதம் அனுப்புவார். இதனை ஏற்று அதன் படி நடப்பது மிகவும் நல்லது. இல்லையேல், உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை டி டி எஸ் என்ற வரியாக கழிக்கப்படும். மேலும் அந்த தொகை, ஆண்டு முடிவில் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்த பின்னர் தான் உங்கள் கைக்கு திரும்ப கிடைக்கும். 

இதில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தால் எப்போது டிடிஎஸ் கழிக்கப்படும்:
60 வயதிற்கு குறைவாக உள்ள , இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் வருட வருமானம் 2.5 லட்சம் ரூபாயாக இருந்தால் அந்த தொழிலாளருக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தால் டிடிஎஸ் கழிக்கப்படும். 

ஒரு வருடத்தில் செலவுகள் மற்றும் முதலீடுகளைச் சொன்னதன் பின்னர் சம்பளத்தில் டிடிஎஸ் கழித்தல் எவ்வாறு செய்யப்படுகிறது:
நீங்கள் காட்டிய முதலீடு மற்றும் செலவீனங்களுக்கு ஏற்ப உங்கள் வருமானத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும். இதற்கேற்ப உங்கள் வரிக்குரிய வருமானமும் குறையும். உதாரணத்திற்கு, ஒரு நிதியாண்டின் உங்கள் மொத்த வருமானம் ரூபாய். 6,00,000 என்றால், ஒரு வருட காலத்திற்கான வரியாக ரூபாய். 33,800 வரியாக உங்கள் நிறுவனம் மூலம் கழிக்கப்படும். ஆனால் பகுதி 80சி க்கு கீழாக ரூபாய் 1,50,000, க்கு நீங்கள் ஆதாரம் காண்பித்தால், உங்கள் மொத்த வருமானம் ரூபாய்.4.5 லட்சம் என்று கணக்கிடப்பட்டு உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்.

நிதியாண்டின் ஆரம்பத்தில் நீங்கள் செய்த முதலீடுகளின் அறிவிப்பு, உண்மையான முதலீடுகளிலிருந்து வேறுபடலாம்:
வரும் நிதியாண்டிற்கான ஒரு முதலீட்டு திட்டமிடலை நீங்கள் உங்கள் நிறுவனத்திடம் ஒப்படையுங்கள். இதனை வைத்து அவர்கள் டிடிஎஸ் தொகையை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆண்டின் இறுதியில் வரித் தொகையை திருப்பி தரும்போது , உங்கள் நிறுவனம், உங்கள் பல்வேறு முதலீடுகளையும் நீங்கள் கொடுத்த ஆதாரங்களையும் குறுக்கு விசாரணை செய்யலாம். 

உங்கள் முதலீடுகளை வருடம் முழுவதும் செய்து கொண்டே இருங்கள். ஆண்டின் கடைசி மாதம் வரை இதற்காகக் காத்திருக்க வேண்டாம்.  

குறிப்பிடத்தக்க மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்று உள்ளது. அது,  உங்கள் முதலீடுகளை நீங்கள் நிறுவனத்திடம் அறிவித்த அதே தலைப்பில் அல்லது அதே வழியில் முதலீடு செய்வது ஆகும்.