அவசர நிதி என்றால் என்ன?

எமர்ஜன்சி கார்பஸ் அல்லது அவசர நிதி பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

அவசர நிதி என்றால் என்ன?

எமர்ஜன்சி கார்பஸ் அல்லது அவசர நிதி என்பது எதிர்பார்க்காத தருணங்களின் தேவைக்காக உடனடியாக எடுத்து பயன்படுத்தும் விதத்தில் வைக்கப்படும் பணமாகும். இது வேலை இழப்பு, முக்கியமான மருத்துவ பிரச்சினைகள், வருமானத்தில் தாமதம் அல்லது  இறப்பு போன்ற மோசமான சூழ்நிலையில் ஒருவருக்கு பெரிய உதவியாக இருக்கும். 

இந்த அவசர சூழ்நிலைகள் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் என்று பிரிக்கப்படுகிறது. மருத்துவ செலவு, அல்லது சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை குறுகிய கால அவசர தேவைகள் ஆகும். அதே சமயம், வேலை இழப்பு போன்றவை நீண்ட கால அவசர தேவையாகும். சிறிய வர்த்தக வியாபாரங்களுக்கான, அவசர நிதி அவசியமாகிறது.

பல சந்தர்ப்பங்களில், வணிகர்கள் பொறுப்பற்ற முறையில் தங்கள் சொந்த நிதிகளில் பெரும் பகுதியை தங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள். பங்கு சந்தையின் முடிவுகள் தீர்மானிக்க முடியாததாக இருப்பதால் முதலீடு செய்யும் பணம் லாபமா அல்லது நஷ்டமா என்பதை முன்கூட்டியே உறுதியாக சொல்வதற்கில்லை. புத்திசாலியான வியாபாரிகள் கூட திவாலாகிவிட்ட நிலைமைகளும் உள்ளன. இத்தகைய பேரழிவுகளுக்கு அவசர நிதி அவசியம்.

சிறிய வியாபாரங்கள் தோல்வியடையும் காரணங்களில் ஒன்று, கடன் அட்டைகள் அல்லது பாதுகாப்பற்ற தனிப்பட்ட கடன்களில் கடன் பெறுவது போன்ற  குறுகிய கால கடன்களை எடுத்துக்கொள்வதற்கான ஆபத்துகளாகும். இந்த கடன்களின் மீதான அதிக வட்டி விகிதம் , வர்த்தகரின் வருவாயைக் கடந்துவிடும்.

உங்கள் அவசர தேவைக்கு திட்டமிடுங்கள் :
ஒவ்வொரு வியாபார திட்டத்திற்கும் அவசர நிதி என்பது முகவும் முக்கியம். இதில் மற்றொரு முக்கிய செய்தி, இந்த அவசர நிதியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது. உங்களுடைய அவசர நிதியை அணுகுவதற்கு நீங்கள் தீவிரமாக கருதுகிற நிகழ்வுகளின் பட்டியல் அவசியம். அவற்றுள் சில,

சந்தையில் திடீர் ஏற்றத்தாழ்வு
பொருளாதார நெருக்கடி அல்லது சரிவு
தனிப்பட்ட இயலாமை அல்லது உடல்நல அவசரநிலை
இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள்

எவ்வாறாயினும், ஒவ்வொரு எதிர்பாராத சம்பவமும் அவசர நிதியத்தை பயன்படுத்துவதற்கு ஒரு தவிர்க்க முடியாத காரணியாக கருதப்படக்கூடாது. அவசர நிதி பயன்படுத்த உங்கள் காரணங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

மறுபுறம், அவசர நிதியில் இருந்து கூடுதலான திரவ சொத்துக்களை பராமரிப்பது, உங்களுக்கு மிகவும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்க உதவுகிறது. உதாரணமாக, ஒரு நல்ல IPO அல்லது ஒரு நிகழ்வு சார்ந்த பங்கு வர்த்தகம் முதலீடு நல்ல பலனைத் தரலாம். திரவ சொத்துக்கள் , உங்கள் வணிகம் உறுதியாகவும் எளிதாகவும் பயணிக்க உதவுகிறது. 


தனி கணக்கை பராமரிக்க வேண்டும் :
உங்கள் தனிப்பட்ட கணக்கு உங்கள் வணிக கணக்கிலிருந்து தனித்திருப்பது போலவே, உங்கள் அவசர கணக்கு உங்கள் வணிகக் கணக்கில் இருந்து பிரிக்கப்பட வேண்டும். இந்த பழக்கம், அவசரம் அல்லாத போது அவசர நிதி பயன்படுத்தும் சலனத்தைக் குறைக்கும். இன்னும் வலியுறுத்திக் கூற,வேண்டுமானால்,  சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்குத் தவிர, அவசரகால நிதி வரம்புகளை நிறுத்த வேண்டும்.

அவசர நிதியைப் பாதுகாக்க ஒரு சிறந்த இடம் சேமிப்பு கணக்கு மட்டுமே ஆகும். சில வகை கணக்குகளில் , பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது சில அபாராதம் விதிக்கப்படலாம், அல்லது பணம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். இத்தகைய திட்டத்தில் அவசர நிதிகளை முடக்கம் செய்ய வேண்டாம். ஒரு நிலையான வைப்பு நிதியில் பணத்தை சேமித்து வைக்கவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு அவசர தேவை ஏற்படும்போது உங்கள் கையில் பணபுழக்கம் இருக்கவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ம்யுசுவல் பன்ட் முதலீடு கூட இந்த நோக்கத்தை பாதிக்கலாம். 

அவசர நிதி தொகை:

தனிப்பட்ட அவசர நிதியத்தின் முக்கிய விதி இங்கே பயன்படுத்தப்படலாம். தொடக்க நிலை வர்த்தகர்கள், உங்கள் நிறுவன இயக்கத்திற்கான மூன்று மாத தொகையை அவசர நிதியாக சேமித்து வைக்கலாம். இதனை செய்ய, உங்கள் வர்த்தக நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கான செலவை கணக்கிட வேண்டும். செலவுகள் உங்கள் மாதாந்திர முதலீட்டு அளவு, தரகு கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
 
நீங்கள் அதிக ஆபத்தை எடுக்கும் வர்த்தகர் என்றால், அவசர நிதி அதற்கேற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
 
உங்களுடைய அபாய சூழ்நிலை மற்றும்  கணக்கீடுகளையும் பொறுத்து, உங்கள் செலவினங்களில் மூன்று-ஆறு மாதங்களை உள்ளடக்கிய நிதி உருவாக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் தயாராக இருக்கும்பட்சத்தில், நீங்கள் நிம்மதியாக உங்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த முடியும். வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியும்.