முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் !

மனித இனத்திற்கு சித்த மருத்துவத்தின் பயன்கள் அளவிட முடியாதது. பழங்காலம் முதல் சித்த மருத்துவம் பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு வகை மருத்துவ முறையாகும். சித்தா என்ற வார்த்தை சித்தியில் இருந்து உருவானது சித்தி என்பதற்கு “பூரணமான” என்பது பொருள். உடலோடு ஆன்மாவையும் குணப்படுத்தும் ஆற்றல் சித்த மருத்துவத்திற்கு உள்ளது. இன்றைய நவீன காலகட்டத்திலும், சித்தாவின் சிகிச்சை முறைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் !

சித்த மருந்துகள் பல நோய்களை குணமாக்குகின்றது. நோய்களுக்கு மட்டுமல்ல , பல அழகு சார்ந்த தீர்வுகளும் சித்த மருத்துவ குறிப்பில் உள்ளன. அவற்றுள் ஒன்று முடி உதிர்தல்.
முடி உதிர்தல் ஒரு நோய் அல்ல. ஆனால் சில வகை நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே சித்த மருத்துவ முறையில் முடி உதிர்தலை தடுக்க சில வழிகளை இப்போது பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள்:
1. முடி உதிர்தலை கட்டுப்படுத்துகிறது 
2. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. பொடுகு தொல்லையை போக்குகிறது.
4. முடியின் வேர்க்கால்களை பலமாக்குகிறது.
5. நரை முடியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடுத்து கருமையாக்குகிறது.
சித்த  மருத்துவத்தில் முடி உதிர்தலுக்கு பல வகையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை இப்போது காண்போம்.

மூலிகை எண்ணெய்:
சித்த மருத்துவத்தில் ஒரு மூலிகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது வெந்தயம், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ரோஜா பூ மற்றும் பல மூலிகையினால் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை தொடர்ந்து  6 மாதங்கள் பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இது முடியின் வேர்கால்களுக்கு ஊடுருவி, முடி வளர்ச்சியை அதிகரிக்கும். தலையில் ஏற்படும் வறட்சி, அரிப்பு போன்றவற்றை போக்கும். பொடுகு தொந்தரவை கட்டுப்படுத்தும். இந்த எண்ணெய்யில் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை. எல்லா வயதினரும் இதன

தாமரை இலை :
10-12 தாமரை இலைகளை  எடுத்து குறைந்த தீயில் கொதிக்க வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். ½ லிட்டர் நல்லெண்ணெய்யுடன் இந்த சாறை கலக்கவும். மிதமான சூட்டில் இந்த எண்ணெய்யை கொதிக்க விடவும். 2-3 நிமிடத்திற்கு பிறகு, இந்த சாறு எண்ணெய்யுடன் கலந்து இருக்கும். ஆறவைத்து இதனை பயன்படுத்தலாம். இதனால் முடி உதிர்தல் கட்டுப்படும்.

கற்றாழை ஜூஸ்:
100 மிலி கற்றாழை ஜூஸுடன் 3 ஸ்பூன் வெந்தயத்தூளை சேர்க்கவும். இந்த கலவையுடன்  ½ லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். 2-3 நிமிடத்திற்கு பிறகு இறக்கி வைத்து ஆறவைக்கவும். இதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கறிவேப்பிலை :
கறிவேப்பிலையை தூளாக்கி 1லிட்டர் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். 5 நிமிடம் கொதித்தவுடன் நன்றாக ஆற வைக்கவும். இதனை தினமும் தலையில் தேய்க்கவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த எண்ணெய்யை சூடு படுத்தி, தலைக்கு மசாஜ் செய்யவும்.

சித்தா ஹேர் வாஷ் :
100 கிராம் சீயக்காயை , 10 கிராம் செம்பருத்தி இலை , 100 கிராம் வெந்தயம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும். வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து, பின்பு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இந்த தூளை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். முடி உதிர்தலை உடனடியாக தடுக்கும்.

சித்த மருத்துவ முறையில் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மேலே கூறிய முறைகளை பின்பற்றலாம். பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.