பருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்

பருக்களை போக்கவும் அதன் வடுக்களை மறைக்கவும் பல ரசாயன மருந்துகள் சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றின் தீர்வுகள் போற்றும்படியாக இருந்தாலும் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் பருக்கள் மற்றும் கட்டிகளை போக்க இயற்கையான தீர்வுகளை பின்பற்றுவதால் பக்க விளைவுகள் தோன்றுவதில்லை.

பருக்களை போக்கும் வீட்டு வைத்தியம்

சில இயற்கை குறிப்புகள் மூலம் பருக்களை போக்குவதற்கான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சித்து நல்ல பலனை பெறலாம்.

தேங்காய் எண்ணெய்:
இயற்கையான மாய்ஸ்ச்சரைசேர் மற்றும் குணப்படுத்தும் தன்மைக்கு தேங்காய் எண்ணெய் மிக சிறந்த தீர்வாகும். தேங்காய் எண்ணெய்யை கையில் ஊற்றி விரல் நுனியால் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்திடுங்கள். சில நிமிடங்கள் நன்றாக ஊற விடுங்கள். இதனை கழுவ தேவையில்லை. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் அத்தியாவசிய வைட்டமின் மற்றும் மினெரல் சருமத்துக்குள் ஊடுருவி ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்:
முக சிகிச்சைக்கு வெள்ளரிக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு நீர் சத்து நிறைந்த காய் மட்டும் அல்ல, வைட்டமின் ஏ , சி போன்ற சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வெள்ளரிக்காயை நறுக்கி தழும்புகள் மேல் வைக்க  வேண்டும். 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தினமும் பின்பற்றலாம்.

உருளை கிழங்கு சாறு:
மினெரல் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள உருளை கிழங்கு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உருளை கிழங்கை வட்ட வடிவத்தில் சிறு அளவில் வெட்டி பருக்கள் அல்லது கட்டிகள் உள்ள இடத்தில்  வைக்கவும். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். அல்லது, உருளை கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து தழும்புகளில் தடவி மசாஜ் செய்யலாம். 15 நிமிடங்கள் கழித்து வெண்ணீரால் முகத்தை கழுவலாம்.இதனை தினம் செய்து வரலாம்.

ரோஸ்விதை எண்ணெய்:
இயற்கையான முறையில் சரும ஆரோக்கியத்தை பெற ரோஸ் விதை எண்ணெய்யை பயன்படுத்தலாம். ரோஸ் விதை எண்ணெய்யில் இயற்கையான வடிவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. தினமும் 2 முறை இதனை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். 

சர்க்கரை ஸ்க்ரப்:
கரும்பில் உள்ள க்ளிக்கோலிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. கரும்பில் தயாரித்த சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து, இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை  பிழிந்து ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். இந்த ஸ்கரப்பை தழும்புகளில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும். இரண்டு அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்யலாம். 

வைட்டமின் ஈ :
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை வாங்கி அதன் மூலையில் ஒரு ஓட்டை போட்டு அந்த  க்ரீமை விரலில்  எடுக்கவும். அதனை தழும்புகள் அல்லது பருக்கள் உள்ள இடத்தில் தடவவும். இந்த க்ரீமை உங்கள் மாய்ஸ்ச்சரைசேரருடன் கலந்து தழும்புகள் அல்லது பருக்களில் தடவலாம்.

என்ன வாசகர்களே! பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முயற்சித்து வெற்றி அடையலாம் என்பதை  அறிந்து கொண்டீர்களா?