அழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப் 

ஏஞ்செலீனா ஜூலியை போன்ற கொழு  கொழுப்பான உதடுகளை பெற யாருக்குதான் பிடிக்காது? ஒவ்வொரு பெண்ணும் அழகான உதடுகளை பெற வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பாள்.

அழகான பெரிய உதடுகளை பெறுவதற்கான மேக்கப் 

சிலர் பிறக்கும்போதே அழகான உதடுகளுடன் படைக்கப்பட்டிருப்பர். சிலருக்கு உதடுகள் அழகாக தெரிய மேக்கப் அவசியம். உதடுகளை கொழுகொழுப்பாக மாற்ற தற்போது சில ஊசிகளும், பில்லர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிகிச்சைகள் மிகவும் விலை உயர்வானது. ஆனால், சில ஒப்பனை பொருட்கள் மூலமாகவே நாம் விரும்பும் இத்தகைய உதடுகளை பெற முடியும். 

இது ஒரு நிரந்த தீர்வு இல்லை. ஆனால், உதடுகளை அழகாக காண்பிக்க இவற்றை முயற்சிக்கலாம். இதன்மூலம் முகத்திற்கு ஒரு கவர்ச்சி உண்டாகிறது. ஐஸ் கட்டிகள் அல்லது தேன் போன்ற இயற்கை முறைகளில் உதடுகளை கொழுகொழுப்பாக மாற்றலாம். இன்றைய நமது தொகுப்பில், சில மேக்கப் குறிப்புகள் கொடுத்திருக்கிறோம். அவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதன்மூலம் அழகான பெரிய கொழுகொழுப்பான உதடுகளை பெறலாம். 

தளர்ச்சி அடைய செய்தல் :
எந்த ஒரு உதடு தொடர்பான ஒப்பனை பொருட்களை பயன்படுத்தும் முன்னர் உதட்டு பகுதியின் மேல்பரப்பை சுத்தம் செய்ய வேண்டும். காய்ந்த, சோர்வான வெடிப்புகள் கொண்ட உதடுகளுக்கு மேக்கப் போடுவது சரியான தீர்வை தராது. ஆகவே உதட்டின் மேல்பரப்பில் உள்ள இறந்த செல்களை பல் துலக்கும் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே செய்யலாம். 1 ஸ்பூன் சர்க்கரை எடுத்து தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து உதட்டில் தடவலாம். உதட்டில் தடவி கைகளால் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு தண்ணீரால் முகத்தை கழுவலாம்.
இதனை செய்யாமல் மேக்கப் போடுவதால், உதடுகள் லைட்டாக சிறியதாக தோன்றும். 

லிப் பாம் :
உதட்டை ஸ்க்ரப் செய்த பின்னர், அதனை மாயச்ச்சரைஸ் செய்வது நல்லது. இதனால் உதடுகள் ஈரப்பதத்தொடு இருக்கும். இப்படி செய்வதால் லிப்ஸ்டிக் போட்டவுடன் உங்கள் உதடுகள் பெரியதாக தோன்றும். ஆகவே இதற்கு லிப் பாம் பயன்படுத்த வேண்டும். லிப் பாமை உதட்டில் தடவி 2 நிமிடம் காத்திருக்க  வேண்டும். இதனால் உங்கள் உதட்டில்  முழுமையாக பாம் ஒட்டி கொள்ளும். எந்த வகை லிப் பாமையும் பயன்படுத்தலாம். குறிப்பக புதினா ப்ளேவர் பயன்படுத்துவதால், உதட்டில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் உதடுகள் முழுமையாக பெரிதாக அழகாக தோன்றும்.

லிப் கன்சீலர் :
உங்கள் உதட்டின் மேல் லிப் கன்சீலர் பயன்படுத்துவதால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் தங்கும். கன்சீலர் பயன்படுத்தும்போது உதட்டிற்கு சிறிதளவு கீழ் வரை பயன்படுத்துவதால் உதட்டின் ஓரம் தெளிவற்றதாக தோன்றும். இதனால், உங்கள் உதடுகள் முழுமையாகவும் இயற்கையில் பெரியதாகவும் தோற்றமளிக்கும். கன்சீலர் பயன்படுத்தும் போது உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற நிறத்தை தேர்வு செய்வது நல்லது. இதனால் உங்கள் இயற்கை உதட்டு கோடுகளை மறைக்கலாம்.

லிப் லைனர் :
உங்கள் மேல் உதட்டின் மீது லிப் லைனர் கொண்டு லேசாக ஒரு அவுட் லைன் கொடுக்கலாம் . இதனால் உங்கள் உதடுகள் வெளியில் தெரியும் படி இருக்கும். நீங்கள் பயன்படுத்தபோகும் லிப்ஸ்டிக் நிறத்தை விட சற்று அடர்ந்த நிறத்தை இதற்கு பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் முழுமையாக இருப்பதை போன்ற தோற்றத்தை அளிக்க முடியும். லிப் லைனெர் பயன்படுத்தும்போது உங்கள் இயற்கை உதடுகளை விட சற்று பெரிய அவில் பயன்படுத்தும்போது, உங்கள் உதடுகள் சற்று பெரியதாக கொழுகொழுப்பாக காட்சியளிக்கும்.

லைட் நிற லிப்ஸ்டிக் :
அடர் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் உங்கள் முகம் சோர்வாக காணப்படும், மேலும் அடர் நிறங்கள் உதடுகளை  பெரியதாக எடுத்துக் காட்டாது. லேசான  நிறங்கள் கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். பிங்க், பீச் போன்ற நிறங்கள் இதற்கு சரியாக இருக்கும். தேவைபட்டால், 2 லிப்ஸ்டிக்கை ஒன்றாக கலந்தும் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும் போது ஒரு லிப்ஸ்டிக்கை விட மற்றொன்று அடர்  நிறமாக இருப்பதுபோல் தேர்வு செய்வது நல்ல பலனை தரும். பிறகு உதட்டின் ஓரங்களில்  பிரஷ் பயன்படுத்தி திருத்தம் செய்யலாம்.

லிப் க்ளாஸ் :
லிப்ஸ்டிக் பயன்படுத்திய  பிறகு அதற்கு மேல் லிப் கிளாஸ் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் உதடுகள் பெரிதாக அழகாக தோற்றமளிக்கும். பளிச்சென்று இருக்கும் லிப் கிளாஸ் ஒளியை பிரதிபலித்து உதடுகள் பெரிதாக இருப்பது போல் காட்டும். லிப்ஸ்டிக் நிறத்திற்கு ஏற்ற லிப் கிளாஸ் பயன்படுத்துமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கன்சீலர் :
உதட்டின் ஓரங்களில் சிறிய அளவு கன்சீலர் பயன்படுத்தலாம். இதனை ஒரு பிரஷ் மூலம் தடவலாம். உதட்டில் தடவும்போது ஜாக்கிரதையாக தடவவும். இதனை பயன்படுத்துவதால் உங்கள் உதடுகள் முழுமையாக பெரிய அளவில் தோற்றமளிக்கும். 

ஹைலைட்டர் :
மேல் உதட்டின் வளைவில், க்ரீம் ஹைலைட்டர் அல்லது பவுடர் ஹைலிட்டர் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதால், ஒளியை பிரதிபலிக்கும் தன்மை அதிகரிக்கும். 

கண்டூர் பவுடர் :
கீழ் உதட்டின் அடியில் கண்டூர் பவுடர் பயன்படுத்துவதால் அகன்ற பெரிய உதடுகள் போல் காட்சியளிக்கும். ஒரு சிறிய அளவு கண்டூர் பவுடர் பயன்படுத்தி இதனை செய்யலாம்.
 
பற்களில் லிப்ஸ்டிக்:

உதட்டின் உட்பகுதியில் ஒட்டி இருக்கும் லிப்ஸ்டிக்கை அகற்றி விடுங்கள். உங்கள் விரலால் உதட்டை அழுத்தி எடுக்கும்போது தேவைக்கு அதிகமான லிப்ஸ்டிக் உங்கள் கைகளில் ஒட்டி கொள்ளும். அவை பற்களில் படியாமல் தடுக்கப்படும் .

எல்லாம் முடிந்து விட்டது. இப்போது பார்க்கலாம் உங்கள் அழகான பெரிய கொழுகொழுப்பான உதடுகளை...